தேவ சமாதானம், நமது சமாதானம்

சமாதானம். நம்மில் யார் அமைதியான இனிமையான மனநிலையைஅடைய ஆசைப்படாமல் இருக்கிறோம்? நமது இதயம்சாந்தமான ஒரு ஏரியைப் போல் இருக்க வேண்டும் என நம்மில் எத்தனை பேர் நினைக்கிறோம்?

தனிப்பட்ட அமைதி, தனிமனித அமைதி, சர்வதேச அமைதி என இவ்வுலகமே அமைதியைத் தேடிக்கொண்டிருக்கிறது. உலகம் தேடும் அமைதிக்காக டிரில்லியன் டாலர்கள் செலவு செய்து அதற்கான மருத்துவமும் மருந்துகளும் தயார் செய்தால் அது அநேகர் உபயோகிக்கும் பண்டமாக மாறிவிடும்.

இந்தப் பூமியும் முழு உலகமும் புதுப்பிக்கப்பட்டு எங்கும் சமாதானமிருக்க நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம்(ரோமர் 8:21, வெளிப்படுத்தின விசேஷம் 21:4). நாம் கவலையோடு இருக்கத் தேவையில்லை. நாம் எதிர்பார்க்கும் உண்மையான சமாதானம் தவிர்க்க முடியாத முடிவை அடையவேண்டியதில்லை.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவரின் பெயர்களில் ஒரு பெயர் “சமாதானப் பிரபு” என்று (ஏசாயா:9:6)ல் பார்க்கிறோம். இயேசுக் கிறிஸ்து நேற்றும் இன்றும் அந்த வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட சமாதானப்பிரபுவாகவே இருக்கிறார். நமக்குத் தேவையான உண்மையான சமாதானத்தை அவரால் மாத்திரமே தரமுடியும். சுவிசேஷங்களில் பல சம்பவங்கள் அதை எடுத்துரைக்கிறது.

இரையாதே, அமைதியாயிரு

மாற்கு 4:35-41 ல்இயேசுவும் அவருடைய சீடர்களும் கலிலேயாக் கடலைக் கடந்து செல்லும் போது ஒரு கடுமையானப் புயலை எதிர்கொண்டனர்(வ :37). இயேசு நித்திரையாருந்தார். இயேசு புயலை அடக்குவதற்கு முன்னும் பின்னும் அவருடைய சீடர்கள்பயத்தால் நிறைந்திருந்தனர்(வ. 40-41). அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே,அமைதியாயிருஎன்றார். அப்பொழுது காற்று நின்று போய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று (வ.39).

ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன், மேரி ஆன் பேக்கர், இயேசுவின் அற்புதத்தைப் பற்றிய மார்க்ஸின் கணக்கின் அடிப்படையில்அன்றிரவு,“இரையாதே,அமைதியாயிரு” என்ற பாடலுக்கான வார்த்தைகளை எழுதினார்.

எந்தத்தண்ணீரும் கப்பலைக் கவிழ்த்துப் போடுவதில்லை:
வானம்,பூமி, ஆகாயம் ஆகியவை அவற்றின் அதிபதிக்கு அன்போடு கீழ்ப்படிவதால்: இரையாதே,அமைதியாயிரு!

அடுத்தப்பகுதியில், இயேசு வேறு வகையான சூழ்நிலைகளைஎதிர்கொண்டார். அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் (மாற்கு 5:1-20);பெரும்பாடுள்ளஒரு ஸ்திரீ (வ. 24-34); சிறுப் பிள்ளையை இழந்த துக்கத்தில் இருந்த குடும்பத்தினரும், நண்பர்களும் (வ.21–23,35–43).ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானசிரமங்களை எதிர்கொண்டனர். ஆனால் அனைவரும்மனதிலும், உடலிலும், ஆவியிலும் சமாதானத்தை அனுபவித்தனர், ஏனென்றால் இயேசுவின் சமாதானம் அவர்களுடையதாக மாறியது.

வாழ்க்கையின்கொந்தளிப்பில் நாம் செல்லும்போது, நம்மை நிலைநிறுத்துவதற்கான சமாதானக் காரணராகஇயேசு இருக்கிறார். சமாதானப்பிரபு வாகிய கிறிஸ்து நம்மோடிருப்பதால், அவருடைய வல்லமைவாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும்நாம் சந்திப்பதற்கு நமக்கு உதவி செய்கிறது.நாம்முதலாவதாகதேவனைத் தேட வேண்டும். தேவனைத் தேடினவர்களை அவர் கைவிட்டதே இல்லை.

கொந்தளிப்பில் சீஷர்கள்

வார்த்தைகள் நம் அமைதியை சீர்குலைக்கலாம், நம்மை கவலையடையச் செய்யலாம். யோவான்13ல், இயேசு மரணமடையும் தருவாயில், தமக்கு மிக நெருக்கமானவர்களைக் கூட்டி, உணவு உண்ணும் போது, கலக்கத்தை ஏற்ப்படுத்தக் கூடியபலக்காரியங்களை பேசினார்.

இயேசு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்(வ.21).

பின்பு இயேசு அவர்களை விட்டுப்போவதைப் பற்றிக் கூறினார். பிள்ளைகளே, இன்னும் கொஞ்சம் காலம் நான் உங்களுடனே கூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என்று நான்யூதரோடே சொன்னது போல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்(வ. 33).

கடைசியாக அந்த மாலையிலேயே இயேசு பேதுருவிடம், ”சேவல் கூவுகிறது முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்”(வ. 38).

உணர்ச்சி நிரம்பிய தருணமாகிய அத்தருணத்தில் இயேசு,“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள்(யோவான்.14:1) என்றார்.

விலைமதிப்பற்ற சமாதானம்

நாம் எதிர்பார்க்கும் விலைமதிப்பற்ற சமாதானத்தை யோவான் 14 படம் பிடித்துக் காட்டுகிறது. அவர் தம்முடையசீஷர்களுக்கு தம்முடையஆவியை விட்டுப் போகிறார் (வ.15 –17).அந்தச் சமாதானம் கலங்கிய உள்ளங்களுக்கும்பயந்தமனதுள்ளவர்களுக்கும்மருந்தாக அமைகிறது. கிறிஸ்து கொடுக்கிற சமாதானம்அதன் தன்மையைப்புரிந்து கொள்பவர்களுக்கே அனுபவிக்க முடியும்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால், ஒரு நாள் இந்த முழு உலகமுமே (ஷாலோம்) தேவ சமாதானம், என்பதை உணர்ந்து கொள்ளும். அந்நாளுக்காக நாம் யாவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நாம் காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சமாதானத்தைதேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்குத் தந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தச்சமாதானம் விலையேறப்பெற்ற பொக்கிஷமாகிய பரிசு.

இயேசுஅந்த இரவில் தம்முடைய கடைசி வார்த்தைகளில், இந்த ஆறுதலான வாக்குத்தத்தத்தை தம்முடைய சீஷர்ளுக்கு வாக்குப் பண்ணினார்,”சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக”( வ.27).