“நல்ல துக்கம்!” இதை நீங்கள் யோசித்தால், இது வழக்கமான சொல் அல்ல. நேர்மையாக கேட்டால், நல்ல துக்கம் என்றொன்று உண்டா? ஆம்; துக்கம் மாறும்போது, அது நன்மையே. நம்முடைய இழப்புகளுக்கு நாம் துக்கப்படும் போது நமது ஆத்துமாவிற்கான ஆறுதலை எப்படி கண்டடைய கூடும் என்பதை இழப்புடன் வாழ்வது வெளிப்படுத்துகிறது. பின்வரும் பக்கங்களில், ஆலோசகரும், துக்கப்படுபவருமான டிம் ஜாக்சன், எப்படி வாழ்க்கையின் மனவேதனைகளில் உட்சாய்வது, நம்முடைய சிருஷ்டிகர் மேலும், மற்றவர்கள் மேலும் நாம் சார்ந்திருக்க வழிவகைச் செய்கிறது என்பதை ஆராய நம்மை அழைக்கிறார்.

என் இழப்பின் கோடை

ஒரு அழகான பிற்பகலில், நான் உள்ளூர் மாலில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது, என்னுடைய கைபேசி அதிர்வுற்றது. அது என் மூத்த சகோதரன் ஸ்டீவ். “அம்மா இறந்துவிட்டார்” என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே கூறினார். 700 மைல்கள் அப்பால் தொலைபேசியில் விம்மிய என் சகோதரனின் சத்தத்தைக் கேட்டபோது என்னுடைய அடிவயிரே கலங்கிவிட்டது, நான் தனிமையாகவும், உதவியற்றவனாகவும் உணர்ந்தேன்.

வினோதமாக இருந்தது. நான் ஒரு மாலில் நின்றுகொண்டிருக்கிறேன், அம்மா இறந்துவிட்டார் என்பதை தீடீரென கேள்விப்படுகிறேன். எவ்வளவு விசித்திரமாக உள்ளது! நான் எனக்குள்ளே செத்தவனாக உணர்ந்தேன். அழைப்பை துண்டித்துவிட்டு, காருக்கு எப்படியோ வந்துசேர்ந்தேன். காரின் கதவை மூடினேனோ இல்லையோ, என்னுடைய கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. உண்மையாகவே தேம்பியழுதேன். நான் எவ்வளவு நேரம் அங்கு அழுதுகொண்டிருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை.

சில நாட்களுக்கு பின்னர் நாங்கள் அம்மா, பாட்டி, அரிய தோழி என்று நாங்கள் அழைத்த அந்த அற்புதமான பெண்மணியை நினைவுகூர, எங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஒன்றாக கூடினோம். பிறகு நாங்கள் எங்கள் அம்மா இல்லாத வாழ்க்கை பயனத்தை துவங்கினோம்.

துக்கம் என்பது முன்கூட்டியோ, பிற்பாடோ நாம் அனைவரும் பயனிக்க வேண்டிய ஒரு பயணம். வித்தியாசம் என்னவெனில், நாம் எவ்வாறு அதை பயணிக்கிறோம் என்பதே..

எட்டு வாரங்கள் கழித்து, இரண்டாவது தொலைப்பேசி அழைப்பு; இந்தமுறை என்னுடைய இளைய சகோதரர் என்னை அழைத்தார். அவர் என்னிடம், இறுதியாக அப்பா அல்சைமர் (ஞாபகமறதி வியாதி) உடனான 6 ஆண்டுகால போராட்டத்தில் தோற்றுவிட்டதாக கூறினார். என் வாகனத்தில் நான் வீட்டிற்கு செல்லும்போது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. நான் துக்கமாக இருந்தாலும், நன்றியுள்ளவனாகவும் இருந்தேன். காரனம், என்னுடைய தந்தை இனி நோயால் பாதிக்கபடாமல் அவர் தன்னுடைய இரட்சகருடன் இருப்பார். நான் என் மகனை அழைத்து நடந்த செய்தியை பகிர்ந்தேன். அன்றைய தினம் “தாத்தா” எங்களுடன் வெளியே இருந்திருந்தால் எப்படி அனுபவித்திருப்பார் என்பதைப் பற்றி நாங்கள் பேசி அழுதோம்.

நான் வீட்டிற்கு சென்றபோது, என்னுடைய குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடனும் இந்த செய்தியை பகிர்ந்தேன். நாங்கள் பேசினோம், அழுதோம், ஜெபித்தோம், துக்கித்தோம். அதுவே என்னுடைய 2011 ஆம் ஆண்டின் “கோடைகால இழப்பாக” இருந்தது.

ஒரு ஆலோசகராக, பலவித இழப்புகளால் துக்கமடைந்து, போராடின பலருக்கு நான் உதவியுள்ளேன். நான் இன்றும் பயனித்துகொண்டிருக்கிற என்னுடைய துக்கத்தின் பயனத்தில் விசுவாசம் இன்றியமையாதது என்பதையே நான் கற்றுகொண்டிருக்கிறேன். தேவனுடனான நம் உறவு,, மீளமுடியாதவைகளாய் தோன்றும் வேதனைகளின் ஊடாக நாம் செல்வதற்கான திறனை அளிக்கிறது

banner image

துக்கம் என்பது நம் வாழ்நாள் முழுவதும் நாம் சந்திக்கும் இழப்புகளைச் சமாளிக்கும் சிக்கலான, வேதனையான செயல்முறையாகும். மற்றவர்களுடன் வாழவும், அவர்களுடனான உறவை அனுபவிப்பதற்கான தேவ அழைப்பு, ஒரு நாள் நாமும் அவர்களுடைய இழப்பிற்காக துக்கிப்போம் என்பதை உணர்த்துகிறது; வாழ்கையின் சில பகுதிகள் பாதிக்கப்படாததாக உள்ளன. மாறுப்பட்ட சூழ்நிலைகளிலேயோ அல்லது நமது மரணத்திலேயோ, இறுதியாக எல்லவற்றையும் இழந்துவிடுகிறோம்.

துக்கத்தின் அடிப்படை உண்மைகளில் ஒன்று நமது குடும்பம், நண்பர், நெருங்கியவர், பிரிந்துசென்றவர், அன்புக்குரியவர் என்று யாராக இருந்தாலும், அவர்களுடனான நம் உறவு தான்நாம் ஆழ்ந்து அனுபவிக்கும் நமது இழப்பின் துக்கத்தின் அளவை அளக்கும்.

இழப்பு என்பது அன்புக்குரியவர்களின் மரணத்திற்கு மட்டும் உரியதல்ல. நாம் எப்போதெல்லாம் ஒரு தொடர்பை இழக்கின்றோமோ, அப்போதேல்லாம் நாம் துக்கிப்போம். சிறிய இழப்புகள் சாதாரணமாக இருந்தாலும், அவைகளை சமாளிக்க கற்றுக்கொண்டால், பிற்காலத்தில் நம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் கடினமான இழப்புகளுக்குத் நம்மை தயாராக்கும்.

எல்லாருடைய துக்கமும் வித்தியாசமானது

துக்கம் என்னும் பயனம் எல்லாருக்கும் பொதுவானது என்றாலும், நீங்கள் எவ்வாறு துக்கப்படவேண்டும் என்று யாராலும் சரியாக சொல்லமுடியாது ஏனென்றால், அதில் நடந்து செல்லும் அனைவருக்கும் அது தனித்துவமான பாதையாக உள்ளது. துக்கப்படுவதற்கு ஒரு சரியான வழிமுறை இல்லை. இருப்பினும், துக்கம் எவ்வாறு செயல்படுகிறது, எது அதை கட்டுபடுத்துகிறது என்பதை புரிந்துகொள்வது, ஒரு இழப்பிற்கு பின் நீங்கள் சந்திக்கும் காரியங்களுக்கு உங்களை தயார்படுத்தும்.

துக்கம் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது

வாழ்க்கையின் ஒரு பெரிய முரண்பாடு என்னவென்றால், நீங்கள் உங்களை பக்தியுள்ளவர்களாக கருதினாலும், கருதாவிட்டாலும் அனைவருக்குள்ளும் இருக்கின்ற விசுவாசத்தின் பகுதிகளை துக்கம் வெளிப்படுத்துகிறது. அது நீங்கள் இழப்பின் யதார்த்தத்தை சந்திக்கும்போது உங்கள் நம்பிக்கையை எங்கு வைக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது – அதுதான் விசுவாசம்.

ஒருவரும் துக்க நிலைகளில் ஒரே வரிசையிலோ, ஒரே வேகத்திலோ முன்னேறுகிறதில்லை.

இழப்புகாலங்களில், மேன்மையான நிலைக்கு செல்வதற்கான பாதையை வேதம் வெளிப்படுத்துகிறது. இந்த அனுபவம், மரணம் போலவும், சங்கீதம் 23:4 இல் தாவீது கூறின “மரண இருளின் பள்ளதாக்கு” என்ற ஆபத்தான பாதை போலவும் உள்ளது. இந்த பிடித்தமான சங்கீதம் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” என்பதையே நமக்கு நினைவூட்டுகிறது. நல்ல மேய்ப்பர் நம்பத்தகுந்த வகையில் கண்ணீரின் பள்ளத்தாக்கின் வழியாக நம்மை வழிநடத்துகிறார். அவர் நமது பயத்தை அகற்றி, நமது இருதயங்களை தேற்றி, சில நேரங்களில் அதை மேற்கொள்ளுவோமோ என்று நாம் உறுதியாக இல்லாதிருந்தாலும், அதை மேற்கொள்வோம் என நமக்கு உறுதியளிக்கிறார்.

வாழ்கையில் உள்ள பலவித உறவுகள், சூழ்நிலைகளால் துக்கம் தவிர்க்க முடியாததாகவும், சிக்கலாகவும் இருக்கிறபடியால், துக்கப்படும் ஒவ்வொருவரும், “வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? வேதனை நீங்குமா? இதை நாம் மேற்கொள்ள முடியுமா? என்று சிந்திக்கின்றனர்.

banner image

நாம் இணைக்கப்பட்டிருக்கும்படி படைக்கப்பட்டுள்ளோம். ஆதிமுதல் தனிமையாக இருப்பதென்பது ஒருபோதும் சாத்தியாமான விருப்பமாக இருந்ததில்லை (ஆதி.2:18). நாம் நெருக்கமாக இருப்பதற்கும், கூட்டாக வாழ்வதற்கும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றோம். அர்த்தமுள்ள பிணைப்புகள் மூலம், நமது தனிப்பட்ட வரலாறுகள் ஆழமான அர்த்தத்தையும், அதிக முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. இவை நம் வாழ்வை குறிக்கின்ற புள்ளிகளாகின்றன. இந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலோ, உடைக்கப்பட்டாலோ அல்லது இழக்கப்பட்டாலோ அது தாங்கமுடியாத வேதனையை உருவாக்குகிறது, மேலும் அந்த வேதனையே துக்கத்தை உருவாக்குகிறது. “நமக்கு நெருங்கியவரின் மரணம் என்பது நாம் அனுபவிக்கும் அன்பின் பொதுவானதும், முழுமையான பகுதியாகவும் உள்ளது… அது செயல்பாட்டை துண்டிக்காமல் மாறாக அதின் ஒரு கட்டமாக உள்ளது; நிகழ்ச்சியின் இடையூறாக இல்லாமல் அடுத்த பகுதியாக உள்ளது.”

குழப்பத்தை எதிர்பாருங்கள். சி. எஸ். லூயிஸ் தனது துக்கத்துடனானப் போராட்டத்தை இவ்வறாக விவரித்துள்ளார். “துக்கத்தில் எதுவும் ‘ஓரிடத்தில் நிலைத்திருக்காது.’ ஒருவர் ஒரு கட்டத்திலிருந்து வெளிவருகிறார், ஆனாலும் அது அவருக்கு மீண்டும் நிகழ்கிறது. சுற்றி சுற்றி. எல்லாமே மீண்டும் மீண்டும் நிகழும். நான் வட்ட பாதையில் சென்றுகொண்டிருக்கிறேனா அல்லது நான் ஒரு சுழல் பாதையில் இருப்பதாக நம்புகிறேனா? ஆனால், சுழல் என்றால், நான் மேல் நோக்கிச் செல்கிறேனா அல்லது கீழ் நோக்கிச் செல்கிறேனா?”

ஒருவரும் துக்க நிலைகளில் ஒரே வரிசையிலோ, ஒரே வேகத்திலோ முன்னேறுகிறதில்லை.

இது எனக்கு உண்மையாகதான் இருந்தது, நான் ஆலோசனைக் கொடுத்தவர்களின் வாழ்க்கையிலும் இதைக் கண்டுள்ளேன். இந்த பயனம் சில சமயங்களில் வரையறுக்கப்படாததாகவும், திசை திருப்பக்கூடியதாகவுமிருந்து, துக்கப்படுபவர்களின் பாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒருவரும் துக்க நிலைகளில் ஒரே வரிசையிலோ, ஒரே வேகத்திலோ முன்னேறுகிறதில்லை. காரியங்கள் புரியாதபோதோ, மீண்டும் மீண்டும் நிகழும்போதோ நாம் பயப்படத்தேவையில்லை. குழப்பங்கள் வருகிறது என்று நமக்குத் தெரிந்தால், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பது நல்லது. துக்கப்படுவதற்கான நடைமுறை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அது குளறுபடியாகவும், சில நேரங்களில் பைத்தியம் பிடிப்பதுப் போலவும் கூட உணரலாம். ஆனால் நீங்கள் அப்படியாக மாடீர்கள். துக்கிப்பதற்குப் பொதுவான முறை என்பது இல்லை.

அதிர்ச்சி இயல்பானது. ஒரு இழப்பின் செய்திக்கு பிறகு அதிர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இது நம்பமுடியாத சூழ்நிலைகளில் நாம் தொடர்ந்து செல்வதற்கான நமது ஆரம்ப தற்காப்பு பதில். தேவன் நமக்கு இதமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் அதிர்ச்சியை வடிவமைத்துள்ளார். நாம் பிழைக்க இப்படிப்பட்ட உதவி இல்லையெனில் துக்கம் உண்டாக்கும் மனஅழுத்ததால் நம்மால் செயல்பட முடியாது. அதிர்ச்சி அதின் வேலையை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

நல்லெண்ணம்படைத்த நண்பர்கள் அதிர்ச்சியைக் குறைக்கவோ, துக்கிப்பவர் முடக்கபட்டுள்ளார் என்பதற்கானத் தெளிவான அறிகுறி இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தவோக் கூடாது.

மறுக்கப்பட்ட துக்கம் குணப்படுத்தப்படாத துக்கமாக உள்ளது.

பாசாங்குச் செய்யாதீர்கள். மறுப்பை எதிர்க்கவும். உண்மையாக இருங்கள். “வலிமையாக” இருப்பதன் மூலம் துக்கத்தின் வலியை விஞ்ச முயற்சிப்பது பயனற்றது. இது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாகதான் இருக்கும். ஃபிரடெரிக் தனது தந்தையின் தற்கொலையைச் சமாளிக்கத் தோற்ற முயற்சிகளில், மறுப்பை ஒரு பிரச்சனையாக அடையாளம் கண்டுகொண்டார். வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களுக்கு எதிராக உங்கள் மனதை கடினப்படுத்திகொள்வது சில வேதனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் எனினும், அதே மனகடினம் “வாழ்வளிக்கும் பரிசுத்த வல்லமை” உங்களை மாற்றுவதை தடுக்கும் சுவறாகவும் மாறக்கூடும் என்று கூறினார். மேலும் அந்த வல்லமை உங்களில் கிரியை செய்வதற்கு அதை நீங்கள் அனுமதிப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்: “நீங்கள் உங்கள் சொந்தபலத்தால் உயிர்வாழமுடியும். நீங்கள் தானாகவே வளர்ச்சியடைய முடியும். நீங்கள் தானாகவே வெற்றியடையலாம். ஆனால் நீங்கள், நீங்களாகவே ஒரு மனிதனாக மாற முடியாது.”

ஒரு துக்கமுள்ள நபர், இழப்பினால் சந்தித்த யதார்த்தத்தை அதின் முகத்திற்கு நேரே எதிர்கொள்வது மிக முக்கியம். இருப்பதை இருப்பதாகவே ஏற்றுகொள்ள வேண்டும். இது மறுக்கபடுவதை நிறுத்துவதற்கு உதவுகிறதுமல்லாமல், துக்கத்தின் பயனத்தில் எடுத்துவைக்கும் ஒரு பெரிய படியாகவும் உள்ளது

உங்கள் உணர்வுகளைப் பற்றி நேர்மையாக இருங்கள்

தேவனும் துக்கப்படுகிறார். மலை ஏறும் விபத்தில் தனது மகனை இழந்த நிக்கோலஸ் வால்டர்ஸ்டோர்ஃப் என்பவர் “நமது கண்ணீரின் வாயிலாகதான் தேவனின் கண்ணீரை காண்கிறோம்” என்று கூறினார். நாம் துக்கப்படும்போது, தேவனோடு இனைந்து உருக்குலைந்தவைகளுக்காக புலம்புகிறோம், அனைத்தும் சீரமைக்கப்படும் நாளை எதிர்நோக்கி துக்கிக்கிறோம்.

எவ்வளவு கடினமாக இருந்தாலும், அன்புக்குரியவரின் இறந்த உடலைப் பார்ப்பது துக்கப்படுபவர்களுக்கு இழப்பின் முடிவை ஏற்றுகொள்ள உதவுகிறது. , அன்புக்குரியவரின் இறந்த உடலைப் பார்க்காத பலர், பெரும்பாலும் உண்மைநிலையை ஏற்றுகொள்வதில் போராடுவதாக புகாரளிக்கிறார்கள். இது ஒரு நீண்ட கெட்ட கனவாக இருக்கக்கூடும் என்று உணருவதாக கூறுகிறார்கள்.

எல்லாம் புதியதாக மாற்றப்பட வேண்டும் என்ற மீட்பிற்கான ஏக்கமும் (வெளி. 21:4-5), அந்த புதுப்பித்தல் எதிர்காலத்தில் உள்ளது என்ற விழிப்புணர்வும் தான் நமது சகல துக்கத்தின் மையமாக உள்ளது. இந்த உலகம் அழகானது, ஆனால் அதுவும் உடைக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு அடிக்கடி நினைவுபடுத்தப்படுகிறது. நம் வாழ்வில் உள்ள சில அழகை இழக்கும்போதும், துக்கத்தால் உண்டான வேதனையை அனுபவிக்கும்போதும் நாம் ஒரு சிறந்த உலகத்திற்காக ஏங்குகிறோம்.

ஒரு இழப்பிற்கு பின், துக்கமானது நமது உணர்ச்சிபெருக்கை தூண்டிவிட்டு நமது கால்களால் ஸ்திரமாக நிற்கவிடாமல் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத உணர்ச்சி குவியலுக்குள் நம்மை புதைத்துவிடுகிறது.

நீங்கள் உணருவதை உணருங்கள். துக்கத்துடன் நாம் போராடும் சில கட்டத்தில், “ நீங்கள் அப்படி உணரக்கூடாது” என்று சிலர் சொல்லலாம். அல்லது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நாமே முயற்சிக்கலாம். ஆனாலும் நாம் ஆழமாக உணர்கிறோம், ஏனென்றால் தேவன் தம்மை போன்ற ஆழ்ந்த உணர்ச்சித் திறனை நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு வேதனையான இழப்பு நமது உணர்ச்சிகளை கட்டுபடுத்த நினைக்கலாம். ஆனால் உணர்ச்சிகள் நமது அனைத்து அனுபவத்திற்கான ஆழத்திற்கும் செழிப்பிற்கும் நம்மை இட்டுசெல்கிறது.

ஒரு இழப்பிற்கு பின், துக்கமானது நமது உணர்ச்சிபெருக்கை தூண்டிவிட்டு நமது கால்களால் ஸ்திரமாக நிற்கவிடாமல் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத உணர்ச்சி குவியலுக்குள் நம்மை புதைத்துவிடுகிறது. துக்கப்படுபவர்கள் முடிவற்றதாகத் கருதும் விஷயங்களின் பட்டியல்: அதிர்ச்சி, வேதனை, நம்பிக்கையின்மை, தன்னிலையிழத்தல், துண்டிக்கப்படுதல், உண்மையை மறுத்தல், கோபம், அநீதி, அநியாயம், பயம், கைவிடப்படுதல், தனிமை, மன அழுத்தம், கவலை. குணப்படுத்தும் செயல்முறை துவங்குவதற்கு முன், நமக்குள் பெருகி வரும் உணர்ச்சிகளை வகைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, தேவன்மேல் காட்டும் கோபம் கூட சாதாரனமானது தான். இந்த கோபம், தேவன் நமக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை அல்லது நமக்கு வேதனை தருகின்ற ஏதோவொன்றை அனுமதித்தார் என்று நாம் உணர்வதால் உருவாகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பன் ஒருவன் மலை ஏறும் விபத்தில் கொல்லப்பட்டபோது நான் எவ்வளவு கோபமடைந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. தேவனை திட்டினேன். என் நண்பன் அவருக்கு உண்மையாக ஊழியம் செய்துகொண்டிருந்த போதும் என் நண்பனின் உயிரை எடுத்தார் என்பதில் எந்த ஒரு புரிதலும் எனக்கில்லை. அது கொடூரமாகவும், திகிலாகவும் இருந்தது. ஒரு துன்பகரமான இழப்புக்குப் பிறகு நாம் கடுமையான வலியால் துடிக்கும்போது கூட நமது உணர்ச்சிகளை கையாளுவதற்கு தேவன், போதுமான வலிமையுள்ளவரும், பெரியவரும், அன்புள்ளவருமாக உள்ளார்.

நாம் நமது துக்கத்திற்கும், வேதனைக்கும் யாரோ ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று அடிக்கடி விரும்புகிறோம். சில நேரங்களில் நாம் தேவனை மட்டுமே குறை சொல்லகூடியாதாக தோன்றுகிறது. மக்கள் தங்கள் இருதயங்களை தேவனிடம் வேதனையால் ஊற்றி “ஏன்” என்ற ஆழ்ந்த கேள்விக்கு விடை கேட்கும் கேள்விகளால் சங்கீதங்கள் நிரம்பியுள்ளன.

உறங்குவது, உண்பது, வேலைசெய்வது – சாதாரண வாழ்க்கை- என்பது துக்கத்தின் தாக்குதல் உண்டாக்கும் உணர்ச்சியால் பாரமாகக்கூடும். ”துக்கத்தின் மூடுபனி” என்று சில நேரங்களில் அழைக்கப்படுகின்ற குழப்பம் சாதாரணமானது. பகல் கனவு காண்பது, வேலையிலோ அல்லது வீட்டிலோ பயனற்றதாக இருப்பது, எதையாவது தொடங்குவது, பின்னர் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை மறந்துவிடுவது, நீங்கள் மனகுழப்பமாக இருக்கிறீர்கள் என நினைப்பது அனைத்தும் பொதுவான அனுபவங்கள். உங்களுக்கு அது மனநோய் இல்லை ஆனால் அது நீங்கள் துக்கப்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறது.
நீங்கள் இழந்ததை விவரியுங்கள். நீங்கள் இழந்ததை நீங்களே தேவனிடமும், மற்றவர்களிடமும் சொல்வது உங்கள் இழப்பை நீங்கள் ஏற்றுகொள்வதை உறுதிப்படுத்தும் ஒரு நடைமுறை பயிற்சியாக உள்ளது. ஒரு நாட்குறிப்பிலோ அல்லது ஒரு கடிதத்திலோ (ஒருவேளை தேவனுக்கு தெரியப்படுத்த) எழுதுவது என்பது தெளிவற்றதாயும், நினைவிலிருந்து நழுவும் உணர்வுகளை அடையாளம் காணவும், தெளிவுபடுத்தவும் உதவுகிறது என்று பலர் கண்டறிந்துள்ளனர்.

பல இழப்புகளைச் சந்தித்த மனிதரான யோபு தனது பிள்ளைகளின் இழப்பையும், செல்வ இழப்பையும், உடல்நல இழப்பையும் பலர் அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையில் விவரித்தார்: நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; “நான் அஞ்சினது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது” (யோபு 3:23-26). தன்னுடைய இராஜ்ஜியத்தை இழந்து, தன்னுடைய சொந்த மகனால் ஏமாற்றப்பட்ட தாவீது (2. சாமு. 15) “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” (சங்கீதம் 62:8) என்று தன்னுடன் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த இரு மனிதர்களும், பயங்கரமான மன வேதனையைக் கையாண்டபோது, தங்கள் துக்கத்தை விவரித்து சொல்வது அவர்களின் இழப்பை ஏற்றுகொள்ள உதவி செய்ய துவங்கியது என்பதைக் கண்டுபிடித்தனர்.

நான் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் குறிப்பிட்ட ஒரு குழுவினரை தவறாமல் சந்திக்கிறேன். அது எனது இழப்பின் பாதையை பற்றி பேசுவதற்கு பாதுகாப்பான இடமாக இருந்துவருகிறது. பல வேலைகளில் காலை உணவு சாப்பிடும்போது, அவர்கள் என்னுடைய போராட்டங்களையும், வேதனையையும் கவனித்து இறுதிவரை துக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நம்பிக்கையை அளித்திருக்கின்றனர். அவர்கள் என் உணர்வுகளைப் பற்றி நேர்மையாக இருக்க என்னை அனுமதித்ததுமல்லாமல், அவர்கள் அதை ஊக்குவித்தனர். உண்மையாக அந்த நேரங்கள் நான் குணப்படுவதற்கான படிகளாக அமைந்தன.

கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல, அது தேவனிடமிருந்து கிடைத்த பரிசு. உங்கள் வருத்தத்தை தேவனிடம் நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு பயப்பட வேண்டாம்.

உங்கள் கண்ணீருடன் சௌகரியப்படுங்கள். அழுவது தவறல்ல; உண்மையில் நீங்கள் அப்படி செய்வது முக்கியமானதாக உள்ளது. கண்ணீர் என்பது ஒரு துக்ககரமான செயல்முறைக்கு முக்கியமான ஒரு உணர்ச்சியாகவும், உடல்ரீதியான வெளிப்பாடாகவும் உள்ளது. உள்ளார்ந்த அழுத்தம் உருவாகிறதால் அது வெளியேற்றப்பட வேண்டும். நன்றாக அழுவது உடலையும், ஆத்துமாவையும் குணப்படுத்துகிறது.

கூறி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்குமாறு பரிந்துரைக்கின்றனர். ஆனால் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல, அது தேவனிடமிருந்து கிடைத்த பரிசு. உங்கள் வருத்தத்தை தேவனிடம் நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு பயப்பட வேண்டாம். உங்கள் உடைந்த இதயத்தின் கண்ணீரை அவரிடம் கொண்டு வருவது நல்லதுதான். அவர் அதை புரிந்துகொள்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் துக்கப்பட்டாலும், நாம் “நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து,” (1 தெச. 4:13) இருப்பதில்லை என்று தெளிவுப்படுத்துகிறார். அதற்கு பதிலாக, நாம் நம்பிக்கையுடன் துக்கப்படுகிறோம் – இது இயேசுவின் உயிர்த்தெழுதலில் நங்கூரமிடப்பட்டுள்ள நம்பிக்கையாக உள்ளது. மேலும் “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” (வெளி. 21:4) என்ற வரக்கூடிய நாளை அது நினைவூட்டுகிறது.

“விசுவாசம் எல்லா வித துக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் சிலர் நினைக்கும் விதத்தில் இருப்பதில்லை.”
கிரேன்ஜர் வெஸ்டர்பெர்க், குட் கிரீஃப்

நம்பிக்கையுடன் துக்கப்படுவது, உணர்ச்சி எழுச்சியையோ, நம் வேதனையின் தீவிரத்தையோ குறைக்காது. வேதனையற்ற நிலை என்பது இயேசுவை பின்பற்றுவதால் வரும் நன்மைகளில் ஒன்றாக இருப்பதில்லை (யோவான் 16:33). இயேசுவும் துக்கம் அனுபவித்து கண்ணீர் சிந்தியுள்ளார். அவர் “துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்;” (ஏசாயா 53:3). அவர் விரைவில் லாசருவை எழுப்புவார் என்று அறிந்திருந்தபோதிலும், இயேசு, அன்பான ஒருவரின் மரணத்தைக் குறித்து துக்கப்படுகிற தனது நண்பர்களுடன் தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொண்டார்.

சரியான நேரத்தில்,தேவனும் மற்றவர்களும் வழங்கும் ஆறுதலுக்கு உங்கள் இதயத்தைத் திறப்பது, புதுப்பிக்கப்பட்ட வலிமையான உணர்வையும், அனுகுமுறையையும் கண்டறிய உதவும்..

இயேசு, உங்களுடைய குழப்பமான உணர்ச்சிகளில் உங்களுடன் நடப்பார். அவர் மட்டுமே தரக்கூடிய ஆறுதலைப் புரிந்துகொண்டு வாழ அவரை நம்புங்கள்.

நீங்கள் ஆறுதலடைவதற்கு உங்களை விட்டுக்கொடுங்கள், நாம் துக்கப்படும்போது, சொல்லுவதற்கு எளிது, ஆனால் செய்வது கடினம் என்று உண்மையாக உணரமுடியும். நண்பர்கள், அன்புக்குரியவர்கள் ஆறுதல்படுத்துவதற்கான முயற்சிகளை நன்கு திட்டமிடப்பட்டு அன்புடன் வழங்கினாலும், நம் துக்கத்தில் நாம் வெறுமையாகதான் உணர முடியும். ஆனாலும் நாம் நம் நண்பர்கள், குடும்பத்தினரின் சொற்களில் காணக்கூடிய ஆறுதலிலிருந்து நம்மை தனிமைப்படுத்திகொள்ளவோ அல்லது பிரிந்திருக்கவோ துக்கத்தை அனுமதிக்காமல் இருப்பது முக்கியம். ஆறுதலடைவதற்கு உங்களை அனுமதிக்கும்போது, அது உங்களை மற்றவர்களுடன் இணைத்துவைத்து, குறித்த நேரத்தில் தேவையான ஊக்கத்தை தந்து, சரியான பாதையில் உங்கள் வேதனையை திசைதிருப்ப உதவுகிறது.

கெத்சமனே தோட்டத்தில் கைதுசெய்யப்பட்ட இயேசு, அன்று இறவு மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருந்தார் (மத்தேயு 26:38). அவர் தன்னுடைய இதயத்தை தன் பிதாவிடம் ஊற்றிகொண்டிருக்கும்போது, தம்முடைய சீஷர்களை தம்முடன் இருக்குமாறு கூறினார். அவருடைய வேதனையின் போது அவர்கள் அவருடன் இருந்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது. யோபுவின் துக்கத்தில் ஆறுதல் அளிக்க வந்த அவரது நண்பர்களும் இதைதான் செய்தனர். அவர் ஏழு நாட்கள் துக்கம் கொண்டாடிகொண்டிருக்கும்போது, அவர்கள் அவருடன் அமர்ந்திருந்து தங்கள் பங்களிப்பை அளித்தனர் (யோபு 2:11-13).

உங்கள் இழப்புடன் வாழுங்கள்

புதிய இயல்பை ஏற்றுகொள்ளுங்கள். இழப்பு நம்மை மாற்றுகிறது. அது தவிர்க்க முடியாதது. நீங்கள் எப்படி மாறுவீர்கள்? அது உங்களை பொருத்துள்ளது. ஒரு முக்கிய இழப்பு நம் வாழ்வில் ஒரு குறிப்பாக மாறுகிறது. “விபத்திற்கு முன்பு,” “விவாகரத்திற்கு பின்,” “எனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு முன்,” அல்லது “ எனது தந்தை கோவிடால் இறந்தப்பின்” போன்ற சொற்றொடர்கள் “புதிய இயல்புகளை” விவரிக்க பொதுவான வழிகள். வாழ்க்கை மாறிவிட்டது என்ற யதார்த்தத்தை நாம் ஒப்புக் கொள்ளும் வழி இது; பழைய இயல்பானது போய்விட்டது, புதிய இயல்பு இங்கே உள்ளது.

ரிச்சர்ட் டெர்ஷிமர் “ வேதனை மென்மையாக்கப்பட்டு, ஒரு இனிமையான சோகத்தால் மாற்றப்படும் நேரத்தில், இழப்பை குறித்து புதிய கண்ணோட்டம் கிடைக்கிறது… இழப்பின் கடுமையான உணர்வு இந்த நேரத்தில் ஒரு கணம் முதல் மறு கணம் வரை மாறுகிறது… தொடந்து வரும் சோகம், குறிப்பிட்ட சூழ்நிலைகளால் தூண்டப்படுகிறது” என்று கூறுகிறார்.

என்னுடைய தந்தை இறந்த நான்கு மாதங்களுக்கு பின், நானும் என் தந்தையும் சந்தோஷமாக அனுபவித்த செயலான வேட்டையாடுவதில் மதிய நேரங்களை கழித்தேன். நான் காடுகளில் தனியாக உட்கார்ந்தபோது, நான் உணர்ச்சிவசப்பட்டு, கட்டுக்கடங்காமல் அழ ஆரம்பித்தேன். நான் இழந்துகொண்டிருக்கிறேன் என்று நான் நினைத்தேன். எனக்கு என்ன நடக்கிறது? இதை பகிர்ந்துகொள்ள என் தந்தை இங்கு இல்லை. அவர் அதை மிகவும் விரும்பியிருப்பார் என்று பின்னர் உணர்ந்தேன். அதுதான் என்னுடைய புதிய இயல்பாக இருந்தது. நான் என் வாழ்க்கையில் முன்னேறினாலும், இழந்த அன்புக்குரியவர்களின் வேதனையிலிருந்து நான் ஒருபோதும் வெகு தொலைவில் இல்லை. சிலநேரங்களில் நான் எதிர்பார்க்கும் போது அந்த வேதனை என்னை பிடித்துக்கொள்கிறது. மேலும் நான் அவர்களை எந்தளவு இழக்கிறேன் என்று இது எனக்கு நினைவுப்படுத்துகிறது.

துக்கத்தின் பயணத்தில் நீங்கள் தடுமாறி விழும்போது (நீங்களும் நானும் கண்டிப்பாக விழுவோம்) நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று அறிந்து உங்களை அனுகி உங்களுக்கு உதவி செய்ய கூடிய ஒரு நபரை உங்கள் வாழ்வில் கொண்டிருப்பது, உங்களுக்கு உயிரூட்டூம்.

இணைந்தே இருங்கள். புதிய இயல்புடன் ஒத்துப்போகும் காலகட்டத்தில், அந்நியனாக உணர்தல், தனிமை, கைவிடப்பட்டிருத்தல் போன்ற உணர்வுகள் பொதுவானவை. வேதனை குறையும் வரை நீங்கள் காத்திருக்கையில், உங்களை தனிமைப்படுத்திகொள்ள விரும்புவது இயற்கையானதுதான். புதியதாக கணவனை, மனைவியை இழந்தவர், தனி நபராக பள்ளிக்கு செல்லும்போதோ, ஆலயத்திற்கு செல்லும்போதோ அல்லது ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு செல்லும்போதோதான் தனிமை எப்படிபட்டது என்பதை உணர்கிறார். எந்த ஒரு கனவனோ அல்லது மனைவியோ தனியாக தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு திட்டமிடுவதில்லை. ஆனால் மரணம் சடுதியாக ஒருவருடைய துணையை பறிக்கும்போது, குடும்பத்தின் வருமானம், உணர்ச்சி, உடல், ஆவிக்குறிய நல்வாழ்வு அனைத்தும் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கும், தனிமையாக வாழ்வாதாரத்திற்கும் போராடுகிற அந்த பெற்றொரின் தோள்களில் விழுகின்றன.

இணைந்திருப்பதுதான் துக்கத்தினால் உண்டான தனிமைக்கான சிறந்த மருந்து. அது எளிதாக இருக்காது. நீங்கள் வலிமைகுறைந்தவர்களாக உணர்வீர்கள். ஆனால் அதை அப்படியேவிட்டு விடுவது பயனற்றதாக இருக்கும். துக்கத்தின் பயணத்தில், நீங்கள் தடுமாறி விழும்போது (நீங்களும் நானும் கண்டிப்பாக விழுவோம்) நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று அறிந்து, உங்களை அனுகி, உங்களுக்கு உதவி செய்ய கூடிய ஒரு நபரை உங்கள் வாழ்வில் கொண்டிருப்பது, உங்களுக்கு உயிரூட்டும்

சிலருக்கு, துக்கத்தை பகிரும் குழுக்கள் உதவியாக இருக்கும். இழப்பைச் சந்தித்து துக்கத்தின் பாதையில் மேலும் பயனிக்கிற மற்றவர்களுடன் தொடர்புகொள்வது, நுண்ணறிவு, புரிதல், ஆறுதல் ஆகியவற்றைப் பெற அனுமதிக்கிறது. நீங்கள் குணப்படுத்தும் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்துகொள்வது, பலருக்கு புதிய நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.

துக்கப் பயணத்தில் முன்னேற சிரமப்படுபவர்களுக்கு, ஆதரவான சமூகம் இல்லாதவர்களுக்கு அல்லது சிக்கலான துயரங்களைக் கையாளுபவர்களுக்கு, ஒரு ஆலோசகரின் தீவிர கவனிப்புத் தேவைப்படலாம். உதவிகோர அஞ்ச வேண்டாம். பிரசங்கி புத்தகத்தை எழுதின ஆசிரியர் “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்… ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.” (4:9-10) என்று நினைவுப்படுத்துகிறார்.

உங்களுடைய துக்க சுமையை சுமக்க மற்றவர்களை அனுமதிப்பது உங்களுக்கு ஊழியம் செய்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது (கலா. 6: 2).

உங்கள் வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்க உங்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்.. ஆமாம், உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் வாழ்க்கை எப்போதும் வித்தியாசமாக இருக்கும், ஆனால் அந்த வித்தியாசமானது கெட்டதாக இருக்கும் என்பதில்லை. உங்கள் வாழ்கையுடன் முன்னேறுவது கடினமாக இருக்கும். மேலும் முரண்பட்ட உணர்ச்சிகளைக் கொண்டு வரக்கூடும். ஆனால் நீங்கள் மீண்டும் சிரித்தாலும், நண்பர்களுடன் இரவு உணவிற்கு வெளியே சென்றாலும், விடுமுறை எடுத்துக் கொண்டாலும், அல்லது மீண்டும் அன்புகூர்ந்தாலும், நீங்கள் உங்கள் அன்புக்குரியவருக்கு துரோகம் செய்வதில்லை. உங்களுக்கு அன்பானவர்கள் உங்கள் வாழ்க்கைத் தேங்கி நிற்பதை விரும்ப மாட்டார்கள்; நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புவார்கள். வாழ்க்கை சிறிது காலத்திற்கு சோகமாக இசைக்கப்படலாம் ஆனாலும், மகிழ்ச்சி பெரும்பாலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அப்படி நிகழும் போது அதில் நீங்கள முழுவதும் நனையலாம்.

நீங்கள் மீண்டும் சிரித்தாலும், நண்பர்களுடன் இரவு உணவிற்கு வெளியே சென்றாலும், விடுமுறை எடுத்துக் கொண்டாலும், அல்லது மீண்டும் அன்புகூர்ந்தாலும் நீங்கள் உங்கள் அன்புக்குரியவருக்கு துரோகம் செய்வதில்லை.

நீங்கள் முதல் முறையாக மீண்டும் சிரிக்கும்போது சங்கடமாக உணரலாம். ஆனால் இது தான் வாழ்க்கையில் இன்பம் மீண்டும் உருவாகிறது என்பதற்கான அறிகுறியாக உள்ளது. என்னுடைய சகோதரர்களுடனும், அவர்கள் மனைவிகளுடனும், பிள்ளைகளுடனும், என்னுடைய பெற்றோரின் உடமைகளை பிரிப்பது ஒரு கசப்பு கலந்த இனிமையான அனுபவமாக இருந்தது. நம்மில் எவருக்கும், எது மிகுந்த மனசோர்வும், மன அழுத்தமாகவும் இருந்திருக்குமோ அதுவே எங்கள் அனைவருக்கும் பிணியாற்றுவதாக இருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து 61 வருட வாழ்க்கையில் சேர்த்த உடமைகளை பிரிக்கும் போது நாங்கள் சிரித்தோம், அழுதோம், கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டோம். வாழ்க்கை, வித்தியாசமாக இருந்தபோதிலும் இன்னும் நன்றாக இருந்தது. அது கொண்டாடப்பட்டு, பகிரப்படவேண்டும்.

அன்பில் மறுமுதலீடு செய்யுங்கள்

இன்று வாழ்வதை அனுபவியுங்கள். மற்றவர்களுடன் மீண்டும் இணைவதற்கான விருப்பம், நீங்கள் நன்றாக வருத்தப்படுகிறீர்கள், முன்னேறுகிறீர்கள் என்பதற்கான சிறந்த குறியீடாகும். உறவுகளில் ஈடுபாடில்லாமல் இருப்பது, வேறொருவரை இழக்கும் அபாயத்திற்கு நாம் மிகவும் பயப்படுகிறோம் என்பதைக் குறிக்கிறது. இழப்பின் வேதனையை யாரும் எதிர்நோக்குவதில்லை, ஆனால் ஒருபோதும் நம்மை கைவிடாத தேவன் மீது நம்பிக்கை வைப்பது மீண்டும் அன்புகூற உதவும். ஜான் பிராண்டர், “அன்பைத் தவிர்ப்பவர்கள் மட்டுமே துக்கத்தைத் தவிர்க்க முடியும். [துக்கத்திலிருந்து] கற்றுக் கொள்ள, அன்பிற்கு விட்டுகொடுப்பதே அதின் பொருள்.” என்று எழுதுகிறார்.

என்னுடைய பெற்றோர் இறந்தக் கோடைகாலதிற்கு பின், என் மகன் ஒரு அன்பான பெண்ணை திருமணம் செய்தான். இது ஒரு மகிழ்ச்சியான வேளை, ஆனாலும் என் தந்தையும் தாயும் எங்களுடன் கொண்டாடுவதை எவ்வளவு விரும்பியிருப்பார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிந்திருந்தோம். என் மகன், மருமகளின் யோசனையின்படி எனது பெற்றோரை கணப்படுத்த இரண்டு பிர்ச் மரங்கள் இடம் பெற்றன. வாழ்க்கை தொடர்கிறது, நல்லது, பகிரப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காக அவை இப்போது எங்கள் வீட்டின் பின்புறத்தில் நடப்பட்டுள்ளன.

உங்கள் ஆறுதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். துக்கத்தை கையாள்வது, நாம் பெற்ற அதே ஆறுதலை தேவைப்படும் மற்றவர்களிடம் அதிக இரக்கமாகவும், புத்திசாலித்தனமாகவும் கொண்டு செல்ல உதவுகிறது.

தேவன் நம்முடைய துயரத்திலும், துக்கத்திலும் நமக்களிக்கும் ஆறுதல் நமக்கு மட்டுமானதல்ல.

காட்டில் எனக்கு உண்டான மனமடிவு ஞாபகம் உள்ளதா? ஒன்றை அனுபவிப்பதற்கு அதாவது கன்சாஸுக்குப் பயணம் செய்து ஒரு புதிய நண்பருடன் வேட்டையாடுவது போன்ற கடினமான முடிவை எடுத்தேன். அருமையான நேரமாக இருந்தது அது. இருப்பினும், எனது தந்தை இல்லாத அந்த தருனம் மிகவும் கசப்பாக இருந்தது. அன்று மாலை, முகாமில் இருந்த எனது நண்பருடன் எனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டது, வாழ்வின் மகிழ்ச்சி, இழப்பின் வேதனை என இரண்டையும் தூண்டியது. அடுத்த நாள் வீட்டிற்கு செல்லும்போது, வேட்டையாடுதல், வாழ்க்கை மற்றும் இழப்பை பற்றி பேசினோம். அவரது ஒரே மகன், அவரது வேட்டை நண்பர், இதய செயலிழப்பு காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய இளம் மனைவியை விட்டுவிட்டு இறந்துவிட்டார். எங்களுடைய அன்புக்குரியவர்கள், இழப்புக்கள், வேதனைகள், இயேசுவில் உள்ள எங்கள் விசுவாச வாழ்க்கைக்கு அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் பற்றி பேசும்போது எங்கள் உரையாடல் எங்கள் இருவருக்கும் ஆறுதலளிப்பதாக இருந்தது.

தேவன் நம்முடைய துயரத்திலும், துக்கத்திலும் நமக்களிக்கும் ஆறுதல் நமக்கு மட்டுமானதல்ல. அது பகிர்ந்தளிப்பதற்காகவே உள்ளது. பவுலும் கொரிந்தியருக்கு எழுதும்போது மிக தெளிவாக “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்” (2 கொரிந்தியர் 1:3-4) என்று காட்டியுள்ளார்.

நமது துக்கத்தை மற்றவர்களுக்கு உதவி செய்யும் சாத்தியமாக பார்க்கும் அணுகுமுறை, துக்கமாக இருக்கும்பொது உடனே வருவது இல்லை அல்லது அதை கட்டாயப்படுத்தகூடாது. நேரம் தான் துக்கத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அங்கம்.

பச்சாதாபமும், இரக்கமும், இழப்பால் நிகழும் வேதனையான சந்திப்புகளால் தோன்றுகின்றன. நமது துக்கத்தின் கண்ணீர் வழியாக மற்றவர்களை நாம் பார்க்கும்போது, வேதனையுள்ளவர்களுக்கு இரக்கத்துடன் ஊழியம் செய்வதற்கு, தனித்துவத் தகுதியான ஒரு வித்தியாசமான அணுகுமுறை நமக்குண்டு.

banner image

ரணம் என்பது, உண்மையான உலகில் இல்லாதிருந்தது. ஆதாம், ஏவாளின் தங்கள் சொந்த வழியில் செல்லுவதற்கான தேர்ந்தேடுப்பானது வாழ்வளிக்கும் தேவனிடமிருந்த உறவை துண்டித்து, அவர்களுடைய பாதுகாப்பை சிதைத்து, எல்லா மனிதர்களுக்கும் மரண தண்டனையை விளைவித்தது.

அப்போஸ்தலனாகிய பவுல், “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) என்று எழுதியபோது ஆதாம், ஏவாளின் பாவத்தை இங்கு குறிப்பிட்டுள்ளார்.

பாவத்தாலும், மரணத்தாலும் வாதிக்கப்பட்ட உலகத்தில் நாம் வாழ்வதால்தான் நாம் துக்கப்படுகிறோம். பாவம் பிறப்பிக்கும் தொற்று, நமது இதயத்தை பிடிக்கின்ற துக்கத்தின் கூக்குரலை உருவாக்கி, அனைத்து படைப்புகளையும் ஊடுருவுகிறது: “நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.”(ரோமர் 8:22-24)
இந்த மறுசீரமைப்பிற்கான உள்ளார்ந்த தவிப்பு. துக்கத்துடன் கூடிய நமது போராட்டத்தின் மையத்தில் உள்ளது

துக்கத்தின் ஆரம்ப கட்டங்களில், பகுத்தறிவு வாய்ந்த விளக்கங்கள் அக்கறையற்றவையாகவும், நம்பமுடியாதவையாகவும் இருக்கும். காரணம், ஆத்துமா பகுத்தறிவுடன் சிந்திக்க முடியாத அளவுக்கு வேதனையில் இருக்கும். இருப்பினும், இழப்புடன் நேர்மையாகப் போராடுகின்ற கிறிஸ்துவிற்குள்ளான விசுவாசிகள், துக்கத்தின் பயணத்திற்கு மிகவும் தேவையான நம்பிக்கையை தருகின்ற தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

எதை இழக்க முடியாது?

தேவனுடைய நீடித்த ஆழமான அன்பு என்பது இயேசுவின் மனிதவதாரம், தியாகம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டது.

அசைக்கமுடியா தேவ அன்பு. “இயேசு எந்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே” என்ற பாடலின் வரிகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மையை எளிதாக பிரதிபலித்தாலும் அது எளிமையானது அல்ல. இந்த அடிபடை உண்மை நானும், மற்றவர்களும் துக்கத்தின் வழியாக பயனித்தபோது எதுவும் உதவாத பட்சத்தில் எங்களை நடத்திசென்றது. தேவனுடைய நீடித்த ஆழமான அன்பு என்பது இயேசுவின் மனிதவதாரம், தியாகம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டது. (ரோமர் 5:8). நமது துக்கத்தின் பள்ளத்தாக்கில் நம்மை தள்ளுகிற எந்த இழப்பாக இருந்தாலும் சரி, அவருடைய மாறாத அன்பில் நம்பிக்கையையும், பெலத்தையும் கண்டுக்கொள்ளலாம் (சங்கீதம் 46; ரோமர் 8:35-39).

தேவனின் நம்பிக்கையூட்டும் பிரசன்னம். நாம் மரணத்தால் சூழப்பட்டிருந்தாலும், இழப்பின் வேதனை நம் இதயங்களைத் துளைத்தாலும், நாம் தனியாக இல்லை என்பதை அறிந்துகொள்வதிலிருந்துதான் ஆறுதல் வருகிறது. நாம் இக்கட்டான, தீங்கு விளைவிக்கும் துக்கத்தின் பள்ளத்தாக்கின் வழியாக செல்லும் போது, சங்கீதம் 23:4இல் சொல்லப்பட்ட கோலும், தடியும் தேவனுடைய பிரசன்னத்திற்கும், பாதுகாப்பிற்கும் அடையாளமாக உள்ளன. நமது துன்பத்திற்கும், துயரத்திற்கும் திருப்திகரமான விளக்கத்தை காண்பது அரிதாக இருக்கிறது. மாறாக, நம்முடைய உண்மையுள்ள, இரக்கமுள்ள பிரதான ஆசாரியராகிய குமாரன் (எபிரேயர் 2:9,17) மூலமாக நம்மை கைவிடாத தேவன் (ரோமர் 8:31; எபிரேயர் 13:5) நம்முடைய துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்.

எதை காணலாம்?

மீண்டும் தேவனை சார்ந்திருத்தல். “விசுவாசம் என்பது ஒரு நடைப்பாலம். அதில் நீங்கள் கடந்துசென்று வெளியேரும் வரைக்கும், அங்குள்ள ஆழத்தை நீங்கள் கடந்து செல்வீர்களா என்று நீங்கள் அறியீர்கள். துக்கம், வேதனையாகிய பயணத்தில் பயணிக்கும் கிறிஸ்துவின் சீஷர்கள், அவர்கள் முன்னர் அறியாமலிருந்த தேவனுடனான தங்கள் உறவை, அடிக்கடி திரும்பி பார்த்து அவருக்கு நன்றி கூறுகின்றனர். இழப்பின் வேதனையில் இருந்தாலும், அவர்கள் தேவனுடன் அதிக நம்பகமான உறவை வைத்துள்ளனர், அதற்காக அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

எனது பெற்றோர் இறந்ததிலிருந்து, நான் முன்பு இருந்ததை விட, தேவனுடன் அதிக நெருக்கமாக உள்ளேன். மரித்தாலும், உயிருடன் இருந்தாலும், அவரை நம்பிய அனைவருக்கும் உயிர்த்தெழுதலின் வாழ்க்கையை சாத்தியமாக்கிய இயேசுவுடன் நான் நெருக்கமாக இருக்கிறேன் (யோவான் 11:25-26). வாழ்க்கை உண்மையில் எவ்வளவு பலவீனமானது, விரைவானது என்பதையும், நான் தேவனை எவ்வளவு ஆழமாக சார்ந்திருக்கிறேன் என்பதையும் நான் நிச்சயமாக அறிவேன். அந்த அறிவு, வாழ்க்கையில் உண்மையாகவே முக்கியமானதை பற்றிய எனது கவனத்தை புதுப்பிக்கிறது.

வாழ்வில் திரும்ப கண்டுகொள்ளப்பட்ட நோக்கம். சிலருக்கு, துக்கத்தின் பயனமானது புதிய திசைக்கான கதவாக மாறுகிறது. சில சமயங்களில் ஒரு குழந்தையை இழந்த வேதனையை அறிந்த பெற்றோர்கள் துக்கப்படுகிற மற்ற பெற்றோரை அணுகுவதின் மூலமாக புதிய நோக்கத்தைக் காண்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கார் விபத்தில் தனது வாலிப மகளை இழந்த டேவ் பிரானன், “இது நான் தேர்ந்தெடுத்த ஊழியம் அல்ல, ஆனால் அதுதான் எனக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார். டேவின் அனுபவம் அவரை “பியாண்ட் த வேலீ” என்ற ஒரு புத்தகத்தை எழுதவும், துக்கம், இழப்பு வழியாக அவரது பயணம் பற்றி வெளிப்படையாக பேசவும் வழிவகுத்தது. அவரது பயணம் துக்கப்படுகிற பல பெற்றோருக்கு உதவியது. எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். விவாகரத்து, மரணம், கருக்கலைப்பு போன்ற பல வகையான துன்பங்களும், இழப்புகளும் மக்கள் தங்கள் சொந்த வேதனையை சமாளிக்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் இயலச்செய்கின்றன.

எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். விவாகரத்து, மரணம், கருக்கலைப்பு போன்ற பல வகையான துன்பங்களும், இழப்புகளும் மக்கள் தங்கள் சொந்த வேதனையை சமாளிக்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் இயலச்செய்கின்றன.

பலதரப்பட்ட இழப்பினால் துக்கப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு ஆலோசனை வழங்குவதில் எண்ணற்ற மணிநேரங்களை செலவு செய்துள்ளேன். நான் கண்டறிந்த விஷயம் என்னவென்றால், எனது வாடிக்கையாளர்களின் இழப்புகளில் இன்னும் ஆழமாக இணைக்க, தேவன் எனது இழப்பின் அனுபவங்களைப் பயன்படுத்துகிறார். உங்கள் இழப்பு எதுவாக இருந்தாலும், உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களை அவர்களின் பயணத்தில் ஊக்குவிக்கவும், தேவன் உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கக்கூடும்.

இழப்பில் நன்மை உள்ளதா?

நமது உலகம், அன்புக்குரியவரின் இழப்பால் அசைக்கப்படும்போது, அதிலிருந்து ஏதோ நன்மையானது வரும் என்ற எண்ணம் பொருத்தமில்லாததாகவும், மோசமாகவுங்கூட தெரியலாம். ஆனாலும் கலிலேயா மலையில் இயேசு அவருடைய சீஷர்களுக்கு “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.” என்று கற்பித்தார். துயரத்தில் நமக்கு உள்ள நம் நம்பிக்கை இதுதான்: இழப்பினால் வரும் துக்கம் நம்மை மீட்பரின் பாதத்திற்குக் கொண்டுவந்தால் அது ஒரு நல்ல பலனை தரும். இயேசுவிடம் ஆறுதலுக்காகவும், மீட்பிற்காகவும் வந்த மக்கள் கூட்டத்தில் நம்மை பங்கடைய செய்யும். ஏனென்றால் அவர் தான் நமது ஒரே நம்பிக்கை என்று விசுவாசிக்கிறோம் (4:23-5:1).

நமது உலகம், அன்புக்குரியவரின் இழப்பால் அசைக்கப்படும்போது, அதிலிருந்து ஏதோ நன்மையானது வரும் என்ற எண்ணம் பொருத்தமில்லாததாகவும் மோசமாககூட தெரியலாம். 

இழப்பும், மாற்றமும் தவிர்க்க முடியாமல் இணைக்கப்பட்டுள்ளன என்பதே தீர்க்கமுடியாத உண்மை. இழப்பு எப்போதும் விஷயங்களை மாற்றுகிறது. இருப்பினும், அந்த மாற்றத்தில் நாம் செயலற்ற வீரர்கள் அல்ல; அது நம்மை எவ்வாறு வடிவமைக்கிறது என்றும், அது நம்மை கசப்பானதாக்குகிறதா அல்லது சிறந்ததாக மாற்றுகிறதா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். துக்கத்தாலும், இழப்பினாலும் உண்டான புடைகலன் நமது குணத்தை வலிமையாக்குகிறது. தேவன் தம்மீது சார்ந்திருப்பதை ஆழப்படுத்த மிகவும் வேதனையான சூழ்நிலைகளைக் கூட பயன்படுத்த விரும்புகிறார். (ரோமர் 5:2-5). வேதனையான இழப்புகளின் இருண்ட பின்னணியில் நாம் ஒருபோதும் அறியாத வழிகளில், அவருடைய நன்மை வெளிப்படுத்தப்படுகிறது.

நிக்கோலஸ் வால்டர்ஸ்டோர்ஃப் இதை நன்றாக விவரிக்கிறார்:

கிறிஸ்துவின் உயிர்தெழுதலிலும், மரணத்தின் இறப்பிலும் விசுவாசம் வைப்பது என்பது, துன்பகரமான அன்பின் இருண்ட கல்லறைகளிலிருந்து இப்போது எழுந்திருக்கும் வல்லமையுடனும், சவாலுடனும் வாழ்வதே ஆகும். உலகத்தின் காயத்திற்கான நம்முடைய அனுதாபமானது வேதைனையால் பெரிதாகவில்லை என்றால், நம்மைச் சுற்றுயுள்ளவர்களிடம் நம் அன்பு விரிவடையவில்லை என்றால், நன்மைக்கான நன்றியுணர்வு இல்லை என்றால், நுண்ணறிவு ஆழமடையவில்லை என்றால், முக்கியமானவற்றிற்கான அர்ப்பணிப்பு பலப்படுத்தப்படவில்லை என்றால், ஒரு புதிய நாளுக்காக வேதனை தீவிரமடையவில்லை என்றால், நம்பிக்கை பலவீனமடைந்து, விசுவாசம் குறைந்துவிட்டால், மரண அனுபவத்திலிருந்து நன்மை ஏதும் வரவில்லை என்றால், மரணம் வென்றது என்று அர்த்தம்.

மரணத்திற்கு இறுதிச் வார்த்தை இல்லை. ஆம், இதுதான் அழிக்கப்படும் கடைசி எதிரி. (1 கொரி. 15:26), ஆனாலும், நமது நம்பிக்கையாகிய இயேசு, மரணத்தை தனது உயிர்தெழுதலில் நசுக்கினார். (15:54-57). ஆகவே, நாம் மீண்டும் விடைபெறாத நாளுக்காக எதிர்பார்த்து, நம்பிக்கையையும், ஆறுதலையும் உடையவர்களாயும், அளிப்பவர்களாயும் இருக்கலாம்.

அந்த நாள் வரும் வரை, நம்பிக்கையுடன் துக்கப்படுவதும், உயிர்த்தெழுதலில் நம்பிக்கையக இருப்பதும், வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்க அனுமதியளிக்கிறது. நமது இழப்பை நினைப்பது எபோழுதும் வேதனையை ஏற்படுத்தும். மேலும், சில சமயங்களில் நம்மை மீண்டும் கண்ணீர் சிந்த வைக்ககூடும் (இப்போது இதை எழுதும்போது எனக்கு நடந்ததைபோல). ஆனாலும், வாழ்க்கையை மாற்றகூடிய துக்கப் பள்ளத்தாக்கு, வாழ்க்கையைப் பற்றிய நமது பாராட்டையும், கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது.

read_more