முன்னுரை

ஜூன் 2018 இன் பிற்பகுதியில், உள்ளுர் கால்பந்து அணியின் பன்னிரண்டு இளம் வீரர்கள் மலையடிவாரத்திற்கு தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தனர். கால்பந்து பயிற்சிக்குப் பின்பு காடுகளையும் குகைகளையும் ஆராய்வது அவர்களுக்குப் பிடித்தமான விஷயம். ஒருமுறை எட்டு மைல் தூரத்தில் அவர்கள் கண்டுபிடித்த ஒரு குகையில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர். குழு உறுப்பினர்களின் பெயர்களை அந்த குறையில் பொறித்து வைத்தனர்.

குகையின் அமைப்பு ஆபத்தாய் தென்பட்டது: அதில் பயணம் செய்த மக்களில் பலர் தொலைந்தும் மரித்தும் போயிருக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மழை பெய்யும்போது அந்த குகைகள் மிகவும் ஆபத்தான ஒன்று. ஆனால் இந்த இளைஞர்கள் குகையின் அமைப்பை நன்கு அறிந்திருந்தனர். ஆகையினால் பாதுகாப்பாக அங்கு அடிக்கடி விளையாட சென்றனர்.

banner image

ஒரு குறிப்பிட்ட நாளின்போது, இவர்கள் அந்த குகையில் நான்கு கி.மீ. தூரம் பயணம் செய்தனர். அவர்கள் அந்த குகைக்குள் இருந்தபோது வெளியே மழை பெய்யத் துவங்கியதை அவர்கள் அறியாதிருந்தனர். அது மிகவும் பலத்த பெருமழையாய் இருந்தது.

குகைக்குள் தண்ணீர் வெகுவாய் முன்னேறி, குகை மூழ்க ஆரம்பித்தது. இந்த கால்பந்தாட்ட அணி வீரர்கள், தண்ணீரின் அளவு அதிகரிக்க, பாறையின் குறுகிய ஒரு சந்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

அந்த தாம்லாங் குகையின் வாசலில் அவர்களுடைய இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அவர்களின் குடும்பத்தினர் அவர்களைக் குறித்து கவலைப்படத் துவங்கினர். தண்ணீர்களின் அளவு அதிகரித்துக்கொண்டேயிருந்ததினால் சிக்கியிருக்கும் குழுவினரை மீட்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மீட்புக்குழுவினர் குகைக்குள் நீந்தி செல்வது என்பதும் கடினமான முயற்சி. குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் அதுவும் அவ்வளவு சுலபம் இல்லை.

உள்ளே சிக்கியிருந்த வீரர்கள் கும்மிருட்டில் மாட்டியிருந்தனர். அவர்களிடம் அத்தியாவசியத்திற்கு பயன்படுத்தும் மின்விளக்குள் கைவசம் இருந்தாலும், அவர்கள் குகைக்குள் தங்கியிருந்த நாட்கள் அதிகரித்தபடியினால், மின் விளக்குகளின் பாட்டரி குறைந்துகொண்டேயிருந்தது.

இருளிலே தொலைந்தவர்களாய், பயத்துடன் நம்பிக்கையில்லாமல் இருக்கும் நிலைமை எப்படியிருந்திருக்கும்?

************************************************************************************

banner image

பலவேளைகளில் இந்த இளைஞர்களைப் போலத்தான் நாமும் இருக்கிறோம். நாம் இருள் சூழ்ந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சிலவேளைகளில் நம்முடைய சூழ்நிலைகள் கைமீறியதாய் தென்படலாம். அடிக்கடி நம்முடைய சொந்த பாவங்களினால் நாம் இருளில் சிக்கியிருக்கக்கூடும். நம்முடைய சொந்த விளக்குகளை கொஞ்ச நேரம் எரியச்செய்கிறோம். ஆனால் நம்முடைய சிந்தை நேர்மறையாய் சிந்திக்க தவறிவிடுகிறது.

உலகம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் போது, அது குகைக்குள் சிக்கியிருக்கும் நபர்கள் மீது தற்காலிகமாய் ஒளிவீசக்கூடிய செயற்கை விளக்குகளைப் போன்றதாகும். மின்னும் இந்த செயற்கை விளக்குகளின் மினுப்பில் சிக்கி, உண்மையான கிறிஸ்மஸின் அர்த்தத்தை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம்.

உண்மையான கிறிஸ்மஸ் என்பது ஒளியோடு துவங்குவது இல்லை. அது தொலைக்கப்பட்ட, சிக்கப்பட்ட, தனிமையான இருள்சூழ்ந்த நிலையிலிருந்தே துவங்குகிறது. உண்மையான கிறிஸ்மஸ் என்பது ஒளிரும் அலங்கார விளக்குகள் அல்ல; அது நம்முடைய மீட்பின் அத்தியாவசியத்தை விளக்கக்கூடியதாயிருக்கிறது.

************************************************************************************

banner image

பலர் தங்களுடைய வாழ்நாட்களில் இருளில் வாழ்வதுபோல சிக்கியிருந்த இந்த கால்பந்தாட்ட குழுவினர் இருளில் சிக்கியிருந்தனர்.

முழு உலகத்தின் கவனமும் சிக்கியிருந்த இந்த இளைஞர்களின் பக்கம் திரும்பியது. சர்வதேச அளவில் பிரச்சனை பெரிதாகி, ஒரு சிறப்பு மீட்புப்படையினர் ஏற்படுத்தப்பட்டனர். கடற்படையினர் குகைக்குள் நீந்திச் செல்வதற்கு வாட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு சாதகமாக, குகைக்குள் இருந்த தண்ணீர் போதிய அளவிற்கு வெளியேற்றப்பட்டது.

“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1). என்று இயேசு உணர்வு பூர்வமாக சொன்னார்.

அந்த இளைஞர்கள் குகைக்குள் சென்று ஒன்பது நாட்கள் கழித்த பின்பு, ஒரு ஒளியை பார்க்க நேரிட்டது.

நீந்திச் சென்ற மீட்புப்படையினர், தண்ணீருக்குள்ளிருந்து தங்கள் தலையை தூக்கிப் பார்த்தனர். அவர்களின் தலையில் ஒளிர்ந்த மின் விளக்குகள், குகையில் ஒதுங்கியிருந்த இளைஞர்களின் மீது ஒளி பாய்ச்சியது. அந்த ஒளியைக் கண்ட முகங்கள் பிரகாசத்தினால் நிறைந்தது.

ஒரு இளைஞன், “எங்களை காப்பாற்றியதற்காய் உங்களுக்கு நன்றி!” என்று சொன்னான்.

************************************************************************************

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாய் ஒரு நாளின் இரவில், இருள் சூழ்ந்த ஜலப்பிரளயத்தில் சிக்கியிருந்த நம்முடைய சரித்திரத்தின் மீது வட்ட ஓளி பாய்ச்சியதுபோன்று கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்ந்தது.

இயேசு ஜனங்களை நோக்கி: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று சொன்னார்.

இந்த ஒளியானது நம்முடைய இருளிலிருந்து நம்மை எவ்வாறு மீட்கிறது என்பதே கிறிஸ்மஸின் மெய்யான அர்த்தம்: “புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (லூக்கா 2:30-32).

banner image

குகையில் சிக்கியிருந்த அந்த குழுவினர், மீட்கப்படுவதற்கு முன்பு பாறையின் இடுக்குகளில் ஒளிந்திருந்தனர். இயேசுவை நம்புகிற நாமும் அப்படித்தானல்லவா? உண்மையான கிறிஸ்மஸின் நாயகனான கிறிஸ்துவை நாம் அறிந்த பின்பும், நம்முடைய வாழ்க்கையை இருள் சூழ்ந்த ஒன்றாய் கழிக்க பிரயாசப்படுகிறோம்.

கடைசி மீட்பிற்காய் காத்திருக்கும் நம்மை உற்சாகப்படுத்தும் ஒளிவிளக்காகிய இயேசுவை கொண்டாடுவதே கிறிஸ்மஸ் ஆகும். பவுல் அப்போஸ்தலர், “அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் (காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்) (ரோமர் 8:24-25) என்று எழுதுகிறார்.

ஆம்! நம்முடைய சொந்த இருளை உணருவதிலிருந்தே கிறிஸ்மஸின் மெய்யான அர்த்தம் துவங்குகிறது. அது இருளின் மீது பாய்ச்சப்பட்ட இயேசு என்னும் மெய்யான ஒளியை கொண்டாடுகிறது. மேலும், கிறிஸ்துவின் நம்பிக்கையாக, ஒரு நாள் நாம் அவருடைய பிரசன்னத்தின் வெளிச்சத்தில் மீட்கப்படுவோம் என்னும் நம்பிக்கைக்கு நம்மை பாத்திரவானாக்குகிறது. கர்த்தருக்கே மகிமை!

இந்த ஆண்டின் கிறிஸ்மஸ் நாளில், மீட்புப்படையினரை சந்தித்த அந்த தாய்லாந்தின் மீட்புக்குழுவினர் “எங்களை காப்பாற்றியதற்காய் உங்களுக்கு நன்றி!” என்று சொன்னதுபோல நாமும் சேர்ந்துசொல்ல பிரயாசப்படுவோம்.

கென் பீட்டர்சன், நமது அனுதின மன்னாவின் ஆசிரியர்