வாசிக்க: மத்தேயு 7:1-6, 15-23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (வ. 21).
பல ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு தேவாலயத்தில் சேர்ந்த சட்டமன்ற உதவியாளரை எனக்குத் தெரியும். அது அவருக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றியதால், அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். “நான் அலுவலகத்திற்கு ஓடிப்போவதை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று அவர் ஒப்புக்கொண்டார், “இது நன்றாக இருப்பதாக என் முதலாளி என்னிடம் கூறினார்” என்றும் சொன்னார்.
இந்த கதையை மற்றொருவருடன் ஒப்பிடவும், இயேசுவின் மீதான உங்கள் நம்பிக்கையை பகிர்வதே ஆபத்தானதாக இருக்கும் நாட்டில் இவர் பணிபுரிகிறார். ஆயினும்கூட, அவர் கிறிஸ்துவை தனது அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வீட்டு சபையை தொடங்கினார்.
இவரது சபையில் கலந்துகொள்ள உண்மையான அர்ப்பணிப்பு தேவை. ஆனால் கிறிஸ்தவர்கள் இயல்பாக இருக்கக்கூடிய பகுதிகளில் விசுவாசிகளாக இருப்பர்வர்கள் பற்றி என்ன சொல்லுவோம்? இவ்விருப் பிரிவினரின் விசுவாசத்தில் எது மெய்யானது என்று நாம் நியாயந்தீர்க்க வேண்டுமா?
மலைப் பிரசங்கத்தில், இயேசு ஒரு முரண்பாட்டை முன்வைத்தார். “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” (மத்தேயு 7:1) என்றார். ஆனால் உடனடியாக, “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்று எச்சரித்து, அவர்களை எவ்வாறு அடையாளம் காண்பதென்றும் சொல்கிறார் (வ. 15). “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்” (வ.௧௭ என்றார். மேலும் அவர், “ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (வ. 20) என்றார். இது நியாயந்தீர்ப்பதில்லையா?
முதல் நிகழ்வில் இயேசு நம்மை பகுத்தறிவுடயவர்களாக இருக்க அறிவுறுத்துகிறார். மற்றவர்களை நியாயந்தீர்ப்பது நமக்கடுத்தது இல்லை, ஏனென்றால் நாம் மனம்திரும்ப வேண்டியவைகளை பற்றித்தான் நம் கவனம் இருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக, கள்ளத்தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். அவர்கள் கிறிஸ்துவில் சகோதர சகோதரிகளாக நம்பத்தகுந்தவர்களா? என்பதைப் பார்க்க அவர்களின் கிரியைகளை நாம் நியாயந்தீர்க்க வேண்டும். ஆனால் நிச்சயமாக அவர்களை நம்ப முடியாது. அவர்களின் கெட்ட கனியானது அவர்களின் தவறான பக்தியை நிரூபிக்கிறது (வ. 17-18).
நான் என் நண்பனை நியாயந்தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை; நான் அவருடன் என் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில், கேட்க வேண்டிய முக்கிய கேள்வி, “அந்த நபர் உண்மையான விசுவாசியா?” என்பது அல்ல. ஆனால், “இயேசுவுக்குக் கீழ்ப்படிவதில் எனக்கு விருப்பம் உள்ளதா?” என்பதே.
—டிம் கஸ்டாப்சன்
மேலும் வாசிக்க
பின்வரும் வசனங்களைப் படித்து, தேவனை பிரியப்படுத்தும் உண்மையான வாழ்க்கையின் தன்மையைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்: மத்தேயு 26:39; யோவான் 4:34, 6:38.
சிந்திக்க
உங்கள் மனம் தொடர்ந்து உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை ஜெபத்துடன் சிந்தியுங்கள். இயேசுவின் மீது அதிக வாஞ்சையையும் பேரார்வத்தையும் அனுபவிக்க உங்களுக்கு என்ன தேவை?
,,,,,