குழந்தைகளுக்கு பாடங்களைக் கற்பிப்பதில் மட்டுமல்லாது அவர்களைத் தங்கள் நிலையை அறிந்தவர்களாக மாற்றுவதில் சிறப்பு பங்காற்றுபவர்கள் ஆசிரியர்கள். தேவன் தங்களுக்கு அருளின அனைத்து திறன்களையும் தாலந்துகளையும் முழுமையாக வெளிப்படுத்தி மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். ஓர் மாற்றுத்திறன் குழந்தையின் வாழ்வில் ஓர் ஆசிரியர் எவ்வாறு மறுக்கவே முடியாத பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைக் குறித்த இந்த சிறப்புக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, அவை உங்களையும் ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறோம். இளம் வயதினரை சரியான வழியில் நடத்தி மாற்றத்தை ஏற்படுத்த முயலும் ஒவ்வொரு ஆசிரியரையும் ஒவ்வொரு நபரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

 

ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கு கற்பித்தல்: எண்ணி முடியா
காரியங்களை தேவன் செய்யும்போது

 

ஓர் புத்தகம் எழுத வேண்டும் என்பதே ஜாஸ்மினின் நீண்ட நாள் கனவு, ஆனால் அவளது முதல் புத்தகமே மன இறுக்கம் பற்றியதாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. அவரது புத்தகம் மை யுனிக் சைல்ட்: ஆட்டிசம் கொண்ட குழந்தையை வளர்ப்பதற்கான நடைமுறை வழிகாட்டி 2018 இல் வெளியிடப்பட்டது. தனது அடுத்த புத்தகத்திற்கு எளிதான தலைப்பைத் தேவன் தருவார் என்று நம்பினார்.

 

சை ஒலிக்கத் துவங்கியதும், 14 வயதான எட்ரிக் ஓர் கையை வானத்தை நோக்கி உயர்த்தியும் மற்றொன்றை தனது மார்பிலும் வைத்தார். அவர் எதிரில் இருந்த ஒலிவாங்கியைப் பார்த்து, இசையுடன் சேர்ந்து பாடலின் முதல் வரிகளைப் பாடினார். குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களாகிய எங்களை அவர் பாடலில் வழிநடத்திச் சென்றபோது, அவரது தொனி சிறப்பாக இருந்தது.

கிறிஸ்மஸ் நாளான அன்று, நாங்கள் சர்ச் கஃபேவில் தொடர்ச்சியான பாடல்களைப் பாடி நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தோம். நாங்கள் பாடி முடித்ததும் பெற்றோர்கள், போதகர்கள் மற்றும் வழக்கமாக கஃபேக்கு செல்வோர் ஆகியோரின் அசாதாரண கலவையான கூட்டம் கைதட்டலில் அதிர்ந்தது. எங்களைப் முன்நடத்திய பாடகருக்கு நாங்கள் ஹ-ஃபைவ்களைக் கொடுத்தபோது புன்முறுவலோடு குழந்தைகளை விரைவாக வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார்.

இந்தக் குறிப்பிட்ட சம்பவம் நான் ஷாலோம்கிட்ஸ்-ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கான படிப்பகத்தில் இருந்த காலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். ஊழியம் தொடங்கிய பிறகு முதல்முறையாக எங்கள் குழந்தைகள் யாரும் எவ்விதத்திலும் பாதிப்படையாமல் ஓர் காரியத்தை பொது இடத்தில் வெற்றிகரமாக நடத்தினோம் (அட!). ஆனால் வெறுமனே நிம்மதியாக உணர்வதைவிட நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், ஏனென்றால் எங்கள் குழந்தைகள் நம்பிக்கையின் நற்செய்தியினை பகிரங்கமாக அறிவித்தது இதுவே முதல் முறை. ஒரு வருடம் முன்பு கூட இவை நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும். “என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பார்?” என்று தேவன் என்னிடம் சொல்வதுபோல் இருந்தது.

 

எனது ஊழியப் பயணத்தின் துவக்கம்

2009 டிசம்பரில் நான் ஊழியத்தில் இணைந்தபோது எனக்கு 21 வயது, பல்கலைக்கழகத்தில் மொழியியல் மேஜராக இருந்தேன். நான் ஏன் ஷாலோம்கிட்ஸில் சேர முடிவு செய்தேன் என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக்கொள்வேன். எனக்கு மன இறுக்கம் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் யாரும் இல்லை. ஆட்டிசம் என்றால் என்னவென்றுகூட எனக்குத் தெரியாது.

ஓர் ஞாயிற்றுக்கிழமை, தேவாலய செய்தி சிற்றேட்டில் ஊழியத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அறிவிப்பைப் பார்த்தபோது போதகரை அணுகி, அப்பணிக்கு ஏதாவது முன் அனுபவம் தேவையா என்று விசாரிக்கும்படி என்னுள் ஏதோ ஓர் எண்ணம் உந்தித்தள்ளியது.

ஒருவேளை தேவ ஆவியின் வழி நடத்துதலின்படி நான் அவ்வாறு செயல்-பட்டிருக்கலாம். ஆனால் 21 வயதேயான எனக்கு, இளமை துடிப்போடு செயல்படும் ஆர்வமாய்த் தோன்றியதைத் தவிர வேறில்லை.

ஒருவேளை தேவ ஆவியின் வழிநடத்துதலின்படி நான் அவ்வாறு செயல்பட்டிருக்கலாம். ஆனால் 21 வயதேயான எனக்கு, இளமை துடிப்போடு செயல்படும் ஆர்வமாய்த் தோன்றியதைத் தவிர வேறில்லை. 30 வயதை எட்டியிருக்கும் எவரும் சில சமயங்களில் உங்கள் 20களில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியத் தேர்வுகளே உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சான்றளிப்பார்கள். இதுவும் அவற்றில் ஒன்றுதான்.

இது ஓர் புதிய ஊழியம் என்றும், அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் போதகர் என்னிடம் கூறினார். அவரது ஊக்கத்தால் நான் பயிற்சிக்கு கையெழுத்திட்டேன் மற்றும் ஷாலோம்கிட்ஸில் உள்ள முதல் பகுதி ஆசிரியர்களில் ஒருவரானேன்.

ஆட்டிசம் என்பது ஓர் வகையான நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு என்றும் இவை சமூக தொடர்பு மற்றும் நடத்தை முறைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது என்பதனையும் நான் அறிந்து கொண்டேன்.

மன இறுக்கம் கொண்டவர்கள் உடல் மொழி மற்றும் குரலின் தொனி போன்ற சமூகக் குறிப்புகளை தவறாகப் புரிந்துகொள்ளலாம் அல்லது அவற்றை முற்றிலும் தவறவிடலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களின் பதில் சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம், நேரடியாக அல்லாமல் யாரையேனும் குற்றப்படுத்தி அல்லது சங்கடத்தை ஏற்படுத்தி விடலாம். அவர்கள் வழக்கமான ஒன்றைப் பின்பற்றுதல், ஆர்வமுள்ள விஷயத்தை மட்டும் செய்தல் மற்றும் எதையேனும் செய்யத் தூண்டுதல் (கையால் தட்டுதல், அசைந்தாடுதல் மற்றும் ஒலிகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் பேசுதல் போன்ற சுய-தூண்டுதல் இயக்கங்கள்) போன்ற தொடர்ச்சியான நடத்தைகளிலும் ஈடுபடலாம்.

ஷாலோம்கிட்ஸில் உள்ள எங்கள் குழந்தைகள் அனைவருக்கும் மன இறுக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் பெரும்பாலானோர் சிறப்புப் பள்ளிகளில் கல்விப் பயில்கின்றனர். அவர்களில் சிலருக்கு அறிவுசார் இயலாமை உள்ளது என்றும் மற்றும் ஓர் சிலருக்கு கவனக்குறைவு அதிவேகக் குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

எட்ரிக் வளர்ச்சிப் பெறுவதைப் பார்க்கின்றேன்

எட்ரிக் முதலில் எங்களிடம் வந்தபோது, அவருக்கு எட்டு வயது ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உண்மையில், பாடல் பாடி துதிக்கும் நேரத்தில் அனைத்து குழந்தைகளும் ஒன்றாகப் பாடுவதற்கு முன்புறத்தில் கூடியிருந்தபோது, ​​அவர் மட்டும் வகுப்பறையின் பின்புறத்தில் ஓர் மேசையின் கீழ் உட்கார்ந்து கொண்டார். எவ்வளவு வற்புறுத்தியும் அவரை வெளியே இழுக்க முடியவில்லை. எங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆட்டிசத்திற்கு புதியவர்களாக இருந்ததால், என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவரை உடல் ரீதியாக வெளியே இழுக்கவா? வெகுமதியைத் தொங்கவிடலாமா? அவரை தண்டிப்பதாக மிரட்டவா?

அவர் இருந்த இடத்திலிருந்தே அவரை பங்கேற்க வைக்குமாறு ஓர் மூத்த ஆசிரியர் பரிந்துரைத்தார். நெருக்கடியான கட்டத்தில் வழிகாட்டுதலைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்த நாங்கள், தயக்கமின்றி ஒப்புக்கொண்டோம். ஓர் ஆசிரியர் எட்ரிக்ர்க்கு அறிவுரைகளை வழங்க மேசைக்கு அடியில் சரிந்து சென்றார், மற்ற அனைவரும் துதி நேரத்தைத் தொடர்ந்து கொண்டு சென்றனர். இதுபோன்று வாரக்கணக்கில் தொடர்ந்தது, ஒவ்வொரு முறையும் அவர் மேசைக்கு அடியில் இருந்து துதிபாடல் நேரத்தைக் கவனிப்பார்.

ஓர் சனிக்கிழமை, அவர் மேஜையின் கீழ் செல்லாமல் அறையின் பின்புறத்திலுள்ள ஓர் நாற்காலியில் அமர்ந்தார். நாங்கள் அதனை பெரிய விஷயமாக கருத வேண்டாம் என்று முடிவு செய்து, துதி வேளையை தொடர்ந்து நடத்தினோம். உள்ளுக்குள் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அன்றைய வகுப்பு நேரம் முடிந்து அனைத்து குழந்தைகளும் வெளியேறியபோது, ​​எட்ரிக்யிடம் காணப்பட்ட இந்த “திருப்புமுனையினால்” நாங்கள் எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாக வெளிப்படுத்தினோம்.

வாரங்கள் செல்ல செல்ல, அந்த நாற்காலியை முன் பக்கமாக நகர்த்தினோம். ஒரு வருடம் கழித்து எட்ரிக்கின் நாற்காலி இறுதியாக முன்பக்கத்தில் உள்ள நாற்காலிகளின் கடைசி வரிசையில் சேர்ந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தன்னை முதல் வரிசைக்கு நகர்த்தியதை நாங்கள் கவனித்தோம். அவர் இன்னும் அதிகம் பேசவில்லை ஆனால் பாடுவார்.

சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தன்னை முதல் வரிசைக்கு நகர்த்தியதை நாங்கள் கவனித்தோம். அவர் இன்னும் அதிகம் பேசவில்லை ஆனால் பாடுவார். நாங்கள் பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல் செய்கைகள் (ஆக்‌ஷன்) செய்யும்போது அவரும் எல்லா செய்கைகளையும் செய்வார். பின்னர் ஓர் சனிக்கிழமை, “கிஃப்ட் டூ யூ” என்றப் பாடலைப் பாடும்போது, எட்ரிக் தனது ஓர் கையைத் தூக்கி மற்றொன்றை மார்பில் வைத்து எங்களை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவ்வாறுச் செய்ய நாங்கள் யாரும் அவருக்குக் கற்றுத்தரவில்லை என்பதைச் சுற்றிலுமிருந்த மற்ற ஆசிரியர்களிடம் விசாரித்ததில் தெரியவந்தது.

நான் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளிந்தபோது, ​​மிகவும் உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கியிருந்ததை உணர்ந்தேன். அதே சிறுவன்தான் முன்னதாக துதிபாடல் வேளையின்போது மேசைக்கு அடியில் உறுதியாக அமர்ந்திருந்தான். இருப்பினும் இங்கே அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தனது குரல், அவரது கைகள் மற்றும் அவரது முழுமையையும் கொண்டு தேவனைப் பாடித் துதித்தார்.

மேலும் அவர் தேவனை ஆராதிக்க தேர்ந்தெடுத்த பாடல் இந்த தருணத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்க முடியாது:

 

நான் இருப்பதெல்லாம்

இனிமேலுமே நான்

உமக்களிக்கிறேன் தேவா

நன்றியுடன் நாதா
 

நான் பாடும் பாடலெல்லாம்

நான் தரும் துதிகளெல்லாம்

என் செய்கை அனைத்தும்

உமக்கான பரிசு தானே

அந்த நேரத்தில், இந்த மாற்றம் பரிசுத்த ஆவியின் செயலாக மட்டுமே இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன். தூயஆவியே எட்ரிக் பாடுவதற்கு உதவுகின்றதால், தேவனுக்கு நன்றிபலி செலுத்தும்படியாக பாடுகிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, தேவாலயத்திலிருந்து ஷாலோம்கிட்ஸை அழைத்து சர்ச் கஃபேவில் ஓர் நிகழ்ச்சி நடத்த கூறியபோது, ​​எட்ரிக் “அவரது பாடலை” பாட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

இப்போது உங்களுக்குத் தெரியும் எட்ரிக் அழகாகப் பாடினார். அன்றையதினம் அவரைப் பார்த்த எவரும், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் துதிபாடல் வேளையில் மேசைக்கு அடியில் ஒளிந்துகொண்ட சிறு பையன் இவர்தான் என்று யூகித்திருக்க மாட்டார்கள்.

 

பரிசுத்த ஆவியானவர் தான் செயல்படுகிறார்

வாரந்தோறும், தேவனைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் நாம் சொல்வதைக் கேட்கிறார்களா அல்லது உள்வாங்கிக்கொள்கிறார்களா என்பது எப்போதும் நமக்குத் தெரியாது. அவர்களின் கண்கள் அலைந்து திரிகின்றன. அவர்களில் சிலர் புரிந்துகொள்ள சிரமப்படுவர். சிலர் காதுகளை சற்று அடைத்துக்கொள்வர் (அதிக ஒலிச்சுமையை குறைக்கும் காதணிகள்). ஆனால் எட்ரிக் ஆராதிப்பதில் தன்னைத் முழுமையாக ஒப்புவித்ததைக் கண்டபோது, எனக்குத் தெரிந்துவிட்டது. வார்த்தைகள் பலனளிக்காவிட்டாலும் ஆவியானவர் தொடர்ந்து நடத்திச் செல்வார்.

தேவனால் எங்களுக்கு அருளப்பட்ட-வைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம் (1 கொரிந்தியர் 2:12). நான் செய்ய வேண்டிய-தெல்லாம் உண்மையுள்ள-வனாக தேவனுடைய வார்த்தையை தொடந்து அறிவிக்க வேண்டும்.

தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம் (1 கொரிந்தியர் 2:12). நான் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையுள்ளவனாக தேவனுடைய வார்த்தையை தொடந்து அறிவிக்க வேண்டும். தேவனுடைய ராஜ்யம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நம்பும் அனைவரையும் உள்ளடக்கியது. மன இறுக்கம் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்களைப் பற்றி நாம் ஆச்சரியப்படலாம், “அவர்களால் பார்க்க முடியாத ஒன்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியுமா?” ஷாலோம்கிட்ஸுடன் 11 வருடங்கள் பணியாற்றிய பிறகு, அவர்கள் எப்படி இயேசுவைத் தங்கள் தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவை சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல என்பதை நான் கற்றுக்கொண்டேன்! எனது பணி, சுவிசேஷத்தை முன்வைப்பதில் எனது பங்கை நேர்த்தியாய்ச் செய்து, பரிசுத்த ஆவியானவர் அவர்களின் எண்ணங்களிலும் இதயங்களிலும் இடைப்பட்டுக் கிரியை செய்வார் என்பதை விசுவாசிப்பதே.

 


மாற்றாக, நீங்கள் மற்ற ஆண்களையும் தந்தையர்களையும் ஊக்குவிக்க விரும்பினால், உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸிற்கு அனுப்பப்படும் எங்களின் தினசரி மின்-தின தியாகங்களுக்கு பதிவு செய்யலாம்.
இங்கே பதிவு செய்யவும்

 

banner image