ந்த அன்னையர் தினத்திற்கு நான் நிறைய நன்றி சொல்ல வேண்டும். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். என் கணவஅவருக்கு குழந்தை செல்வம் கிடைக்காததின் வழியை கிடைக்காததன் வலியை கிடைக்காததின் வழியை கிடைக்காததில் வலியை அந்த ஆண்டுகளில் தான் அவருக்கு குழந்தை செல்வம் கிடைக்காதது வழியே வெளிப்படையாக என்னுடன் தேவன் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் விசுவாசத்தையும் நம்பிக்கையும் விசுவாசத்தையும் தேவன் மீது கொண்டிருந்த மிகுந்த வேதனைக்கு மட்டுமே வர வரர் எப்போதும் நான் முக்கியத்துவம் வாய்ந்தவளாக உணர ஏதாவது எனக்காக திட்டமிடுகிறார்.அதனால் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து கேட்கிறதில்லை.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நம்மில் பலர் ஒரு தாயாக இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே வேளையில், அன்னையர் தினம் வரும்போது ஆழமாக புண்படுத்தப்பட்ட பல பெண்களும் நம்மில் உள்ளனர். இதனை தனிப்பட்ட மற்றும் பிறரின் வலிகள் மூலம் நான் உணர்ந்துள்ளேன்.

ஒரு உதாரணம் ஒன்று கூறுகிறேன். எனது அன்பு தோழியான ஷெரில், கடினமான பாதைகளை கடந்து வந்தவர். இப்பொழுது நாங்கள் முதிர்ச்சி பெற்றிருக்கிறோம். ஆனால் நாங்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்து போதே அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்.அந்த ஆண்டுகளில் தான் அவருக்கு குழந்தைச் செல்வம் கிடைக்காததின் வலியை வெளிப்படையாக என்னுடன் பகிர்ந்து கொண்டார். மிகுந்த வேதனைக்கு மத்தியிலும், தேவன் மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கையும், விசுவாசத்தையும் பற்றிக் கூறும்போது, அநேகர் அதில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் அந்த வலியில் மூலம் ஷெரில் தேவனிடமிருந்து ஒரு வாய்ப்பைப் பெற்றார். அவளால் சொந்தக் குழந்தைகளைப் பெற முடியாவிட்டாலும், அவள் தனது கவனத்தை மாற்ற முடிவு செய்தாள். அதற்குப் பதிலாக என்னையும் வேறு சில பெண்களையும் வழிகாட்டுவதில் தன் நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்தாள். குழந்தைகளுள்ள பெண்களுக்கு செய்ய இயலாத சில காரியங்களை விளையாட்டான வழிகளில் மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்ப்படுத்தினாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, நானும் குழந்தையின்மையினால் பாதிக்கப்பட்டேன்.நானும் எனது கணவர் ஆண்ட்ரூவும் போராட்டங்களுக்கு மத்தியிலும், எங்கள் துக்கம் அதிகமாக இருந்தபோதும், ஷெரிலின் நம்பிக்கை தரும் முன்மாதிரி எங்களை எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையுள்ள இரட்சகரிடம் எங்களை வழிநடத்தியது.

வழிகாட்டியாக இருக்க ஒரு அழைப்பு

ஒவ்வொரு பெண்ணும் இளைய பெண்களின் வாழ்க்கையில் முதலீடு செய்ய தேவனால் அழைக்கப்படுகிறார்கள். அது அவர்கள் குழந்தைகளாக்கூட இருக்கலாம் . வேதத்தின் அடிப்படையில் தாய்மையைப் பற்றியதான அழைப்பு, ஒரு உயிரியல் குழந்தையைப் பெறுவதை விட அதிகமாகும். உபாகமம் 6:4-9 மற்றும் தீத்து 2:3-4 ஆகிய வசனங்களில், அவரவர் பாதுகாப்பில் உள்ள சக பெண்களை நேசிக்கவும், மேய்க்கவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பொறுப்பிருக்கிறது என்பதைக் காண்கிறோம்.இந்தப் பத்திகள் நம்மை ஒரு உடல் ரீதியான பெற்றோராக இருப்பதைத் தாண்டியதான ஒரு பணிக்கு நம்மை அழைக்கின்றது. நம்மை ஆவிக்குறிய பெற்றோராக இருக்க அழைக்கிறது.

தேவன் உங்களுக்கு குழந்தைகளைக் கொடுத்திருந்தால், அவர்களை பராமரிப்பது உங்கள‌ தனிப்பட்ட பணியாக எண்ணி அவர்களை பயிற்றுவியுங்கள். நமது அன்றாட சூழ்நிலைகளை கற்பிக்கக்கூடிய தருணங்களாக மாற்றுங்கள்.தேவனின் வார்த்தைகளை வாழ்க்கையின் ஒரு வழிகாட்டியாக பயன்படுத்துங்கள்: “…நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி (உபாகமம் 6:7).

அதையும் தாண்டி நமக்கு இன்னுமொரு அழைப்பு இருக்கிறது பெண்களே. தீத்து 2:3-4 இவ்வாறு கூறுகிறது, “முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்”.

தீத்துவில் உள்ள இந்தப் பகுதி நம்மை வழிகாட்டிகளாக இருக்கவும் , எடுத்துக்காட்டான ஜுவனம்பண்ணவும் நம்மை அழைக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பெண்களு‌ம் இளையவர்களானாலும், பெரியவர்களானாலும் தேவனுடைய வார்த்தையை அவர்கள் தூஷிக்காதபடி அவர்களுக்குக் கற்பிக்க, ஊக்கப்படுத்த நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அனைத்துப் பெண்களின் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தக்கூடிய உயரிய பணி ஒன்று நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாப் பெண்களும் கிறிஸ்துவைப் பற்றியதான ஆழமான புரிதலைப் பெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.அதன் மூலம் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கனத்தைக் கொடுக்க வேண்டும்! என்ன ஒரு உற்சாகமான அழைப்பு, பெண்களே!

வழிகாட்டுதலிலிருந்து விலகும் பலரை நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில் அவர்கள் தகுதியற்றவர்களாக உணர்கிறார்கள். உண்மை என்னவென்றால், நீங்கள் கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிப்பவர்கள் என்றால், அந்த உண்மையே உங்களை கிறிஸ்துவின் வழிகாட்டியாக தகுதியாக்குகிறது‌. தேவனிடம் ஊக்கம் தேவைப்படுகிற மனிதர்களை காட்டும்படி கேளுங்கள். அதை சிறப்பாகச் செய்ய தேவன் உங்களைத் தயார்படுத்துவார்.

ஆறுதல் மற்றும் ஊக்குவிப்புக்கான அழைப்பு

நாம் அனைவரும் மகிழ்ச்சி, வலி என்ற வெவ்வேறு கதைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சிலர் தாய்மார்களை இழந்திருக்கிறார்கள், அதனால் இந்த ஆண்டு அழைக்க யாரும் இல்லாதிருக்கலாம். சிலர் தாய்மார்களுக்கும் அவர்களுக்கும் உள்ள சண்டையின் காரணமாக உறவை இழந்திருக்கலாம். பல பெண்களால் குழந்தைகளைப் பெற முடியவேயில்லை. தற்போது மலட்டுத்தன்மையை அனுபவிக்க வேண்டுமா என்று யோசித்து வருகின்றனர்.

சிலர் கருக்கலைப்பு செய்திருக்கின்றனர். கருக்கலைப்பினால் உண்டான காயம் அவர்களை மீண்டும் மீண்டும் துக்கத்திற்குள்ளாக்கலாம். ஆனால் தேவனின் மன்னிப்பு உண்மையிலேயே அதை மறைக்கிறது. அதனால் அழகான அமைதியும், மறுசீரமைப்பையும் வாழ்க்கையில் காணலாம். சிலர் கணவனை இழந்து தனித்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருப்பர். இந்த அன்னையர் தினத்தில் அவர்களின் அயராத முயற்சிகளைப் பாராட்ட யாரும் இல்லை. சிலருக்கு குழந்தைகள் இறந்துவிட்டது அல்லது கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. நாம் மேற்கண்ட இப்படிப்பட்டதான வாழ்க்கைச் சூழ்நிலையில் இருக்கும் பெண்களுக்கு இந்த நாள் மிகுந்த வேதனையைத் தரக்கூடிய தாயிருக்கும்.என் சகோதரி தனது இனிமையான பெண் குழந்தையான இசபெல்லாவை 16 வாரங்களிலேயே இழந்துவிட்டாள். இந்த அன்னையர் தினத்தில் எங்கள் குடும்பம் பல விஷயங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆண்டு எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆழமான கவலை இவ்விழப்பினால் இருக்கும்.

இவை மற்றும் இன்னும் பல என்றும் கூட சொல்லலாம். தேவன் இப்படிப்பட்ட வாழ்க்கைக் கதைகளை நம் வாழ்க்கையிலும் அனுமதித்துள்ளார். ஷெரில் எனக்காக செய்ததைப் போலவே, நம் வாழ்க்கையில் வலியோ, சந்தோஷமோ எதுவிருந்தாலும் தேவன் நம் பாதையில் வைத்தவர்களை நேசிக்கவும், ஆறுதல்படுத்தவும், ஊக்குவிக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம்.

இந்த அன்னையர் தினத்தில், நம் வாழ்வில் நம்மை தாய்மார்களாக வழிநடத்திய அல்லது நேசித்த பெண்களைக் கொண்டாடும் அதே வேளையில், காயப்படுத்தப்பட்டவர்களையும் நெருங்குவோம். அவர்களுக்கு கூடுதல் அரவணைப்பைக் கொடுப்போம். அவர்களை இப்படிப்பட்டதான துயரங்களுக்குள் இருக்கிறார்கள் என்பதை கவனித்து ஆறுதலுக்காக அவர்களுடன் ஜெபம் செய்வோம். மேலும், தேவன் நமக்களித்த வாழ்க்கையின் கதைகளை நமது அவருக்கே தியாக பலியாய் ஒப்படைப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் மற்றவர்கள் அவரண்டை சேர செயல்படுவோம்.

banner image