வாசிக்க: 1 சாமுவேல் 23:7-14

சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. (வ. 14)

விரக்தியில் இருந்த ஒருவர், ஒரு வேதாகம ஆசிரியரிடம், “என் வாழ்க்கை உண்மையில் மோசமான நிலையில் உள்ளது” என்று ஒப்புக்கொண்டார். “எவ்வளவு மோசம்?” என்று கேட்டார் ஆசிரியர். கைகளில் தலையைப் புதைத்துக்கொண்டு, அந்த நபர் “எவ்வளவு மோசமானது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு தேவனை தவிர வேறு எதுவும் இல்லை” என்று புலம்பினார்.

வாழ்க்கை தனக்கு ஒரு மோசமான நிலைமையை கொடுத்ததாக அந்த நபர் நினைத்தார். வேதாகமத்தில், “தேவனோ” என்ற சொல்லாடல் அடிக்கடி மீண்டும் மீண்டுமாக ஆறுதல் தரும் வெளிப்பாடாக வருவதை அவர் புரிந்துகொள்ளவில்லை.

இங்கே சில உதாரணங்கள்:
● நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ….அதை நன்மையாக முடியப்பண்ணினார். (ஆதியாகமம் 50:20)
● தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. (1 சாமுவேல் 23:14)
● என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். (சங்கீதம் 73:26)
● இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத். 19:26)
● ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். (அப்போஸ்தலர் 3:15)
● நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோமர் 5:7-8)

வாழ்க்கையே நம்பிக்கையற்றதாகத் தோன்றும் தருணங்கள் உள்ளன. ஒருவேளை நீங்கள் இன்று அப்படி உணரலாம். ஆனால் தேவன் இருக்கிறார், அவர் உங்களைக் கைவிடவில்லை.

போதகரும் எழுத்தாளருமான ரே ஸ்டேட்மென் இவ்வாறு எழுதுகிறார், “நம்மால் மேற்கொள்ள முடியாத சவாலையோ தடையையோ நாம் எதிர்கொள்கையில், நமக்கு நினைவிற்கு வரவேண்டிய இரு வார்த்தைகள்: ‘ஆனாலும் தேவன்’ என்பதே. அவர் வல்லமைக்கு எல்லையில்லை, அவர் என்றும் நம்பத்தக்கவர், அவருடைய வாக்குத்தத்தங்கள் நிச்சயமானவை, அவர் சொல்வதை செய்து முடிப்பார்”.

தேவனை தவிர உங்களிடம் எதுவும் இல்லை என்று நீங்கள் உணர்ந்தால், நினைவில் கொள்ளுங்கள்: தேவன் மட்டுமே உங்களுக்குத் தேவை.

– போ பாங் சியா

மேலும் அறிய

நாம் எதற்கு பாத்திரவான்கள் என்பதையும் ஆனாலும் “ஆனாலும் தேவன்” என்கிற பதத்திற்கு பின்பாக வரும் காரியங்களை குறித்தும் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளில் மேலும் அறிய, எபேசியர் 2:3-5 ஐ வாசிக்கவும்.

சிந்திக்க

“ஆனாலும் தேவன்” என்பதற்கு உங்கள் வாழ்வில் உதாரணமான சில தருணங்கள் யாவை? இன்றும் அவர் உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு மறவாமல் நினைவில் கொள்ள முடியும்?