முகவுரை

எண்ணற்ற விசித்திரக் கதைகளில் நாம் கேட்டிருந்தாலும், திருமணம் செய்துகொள்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. விஷயங்கள் தவறாகப் போகலாம் – சில சமயங்களில் மிகவும் மோசதாக மாறலாம். சிறந்த எண்ணங்கள் கொண்ட தம்பதிகள் கூட, மனக்கசப்பு, விரோதம், அமைதியின்மை மற்றும் துன்பம் நிறைந்த வீட்டில் தங்களைக் காணலாம். மகிழ்ச்சியற்ற திருமணத்தின் மனவேதனையைப் போன்ற இதய வலி வேறு எதுவும் இல்லை.

ஆனால் திருமண வாழ்க்கை இப்படி இருக்கவேண்டியதில்லை.

நாம் விரும்பியவரையே திருமணம் செய்துகொள்கிறோம்; மற்றும் நாம் திருமணம் செய்துகொண்டவரை நேசிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. காதல் என்பது நாம் உணரும் ஒரு உணர்ச்சி மட்டுமல்ல, நாம் எடுக்கும் முடிவும் கூட. திருமண உறவில் நாம் அன்புடன், ஒருவரையொருவர் போற்றுகிறோம், தொடர்புகொள்கிறோம், செவிகொடுக்கிறோம், ஊக்குவிக்கிறோம், அனுபவிக்கிறோம், மன்னிக்கிறோம், மதிக்கிறோம், மரியாதை செய்கிறோம், நம் துணையாளரைப் பாதுகாக்கிறோம்.

எங்கள் அனுதின மன்னா தொகுப்பிலிருந்து இந்தத் தியானங்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் உங்களை ஊக்குவிக்கவும் அறிவுறுத்தவும் உள்ளன.

இந்தக் கட்டுரைகளை நீங்கள் ரசித்து, நமது அனுதின மன்னாவைப் பெற விரும்பினால், இந்த சிற்றேட்டில் உள்ள கோரிக்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்புங்கள். எங்கள் பதிப்புகள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகின்றன. எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்களின் இலவச நன்கொடைகளால் நாங்கள் ஆதரிக்கப்படுகிறோம்.


 

| நாள் 1: திருமணத்தின் அதிசயம்

பாஸ்டர் ஹோவர்ட் சுக்டன் எனக்கும் என் கணவருக்கும் திருமண நிகழ்வை நடத்தியபோது, நாங்கள் ஓர் அதிசயத்தில் பங்கேற்கிறோம் என்று வலியுறுத்தினார். நாங்கள் அவரை விசுவாசித்தோம், ஆனால் இரண்டு பேரையும்…

மேலும் வாசிக்க

| நாள் 2: ஒரு நாள் போதாது

தேவனுடனான நமது உறவுக்கு வெளியே, எவருடனும் நாம் வைத்திருக்கும் மிக முக்கியமான தொடர்பு, நம் துணையுடன் பகிர்ந்துகொள்வதுதான் என்பது இரகசியமல்ல. இன்னும் எத்தனை முறை அந்த உறவை அதற்குத் தேவையான …

மேலும் வாசிக்க

 

| நாள் 3: கதவைத் திறவுதல்

நானும் என் மனைவியும் சில நண்பர்களுடன் மதிய உணவிற்கு வெளியே சென்றபோது, கணவன் காரின் பயணிகள் பக்கமாகச் சென்று தனது மனைவிக்காக கதவைத் திறந்ததை நான் கவனித்தேன். நான் அவரிடம், “சில பெண்கள் …

மேலும் வாசிக்க

 

| நாள் 4: பசுமையான புல்லைத் தவிர்ப்பது

நான்சி ஆண்டர்சன் தனது கிறிஸ்தவ நம்பிக்கையில் யதார்த்தமானவராக வளர்ந்ததாகவும், அதனால் “நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன்” என்ற உலகத்தின் பொய்யை நம்புவதாகவும் கூறுகிறார். அதுவே திருமணத்திற்குப் …

மேலும் வாசிக்க

 

| நாள் 5: எப்போது பேச வேண்டும்

மகிழ்ச்சியான திருமணத்திற்கு நல்ல தொடர்பு அவசியம். கவிஞர் ஆக்டன் நாஷ், எவ்வாறு திறம்பட தொடர்புகொள்வது என்பதை நினைவில்கொள்ள உதவும் ஓர் சூத்திரத்தை தெரிவிக்கிறார். நாஷ் தனது நகைச்சுவையான பாணியில் எழுதினார்:

மேலும் வாசிக்க

 

| நாள் 6: இதயத்தின் விஷயங்கள்

தி செகண்ட் ஷிப்ட் என்ற புத்தகத்தில், வேலைக்குச் செல்லும் தம்பதிகள் வீட்டுப் பொறுப்புகளை எவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை ஆர்லி ஹோச்சைல்ட் விவரிக்கிறார். கணவன்-மனைவி இருவரும் தொழில் …

மேலும் வாசிக்க

 


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்