கிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 25வது நாள் பற்றிய குழப்பம் தான் என்ன? வரலாற்று ரீதியாக, கி.பி. 336 ஆண்டில்தான் கிறிஸ்துமஸ் (கிறைஸ்ட்ஸ் மாஸ்) முதன்முறையாக கொண்டாடப்பட்டது என்பதற்கு முதல் பதிவு உள்ளது, அது கான்ஸ்டன்டைனின் காலம். ஆரம்பத்தில், கிழக்கத்திய சபைகள் அதை ஜனவரி 6-ல் கொண்டாடின. இப்போதைய தேதியான (டிசம்பர் 25) ரோமானிய சாட்டனாலயாவின் (saturnalia) திருவிழாவிற்கு (டிசம்பர் 17-23) மாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் நம்புகிறார்கள், இது குளிர்கால சங்கராந்தி தேதி என்பதால்.

 

அதன் பின்னர், கிறிஸ்தவம் மேற்கு நோக்கி பரவியதால், அது பல உள்ளூர் கலாச்சார நடைமுறைகளை தனக்குள் சேர்த்துக்கொண்டது, அவைகள் கிறிஸ்துமஸ் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறி இருப்பதை இப்போது நாம் ஏற்று கொண்டுள்ளோம். கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை, பரிசுகளை வழங்குதல் மற்றும் பல காரியங்கள், ஆண்டுகள் செல்லச் செல்ல சேர்க்கப்பட்டன. பின்னர்ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, ​​அவர்கள் இந்த மரபுகளை அவர்களுடன் கொண்டு வந்தனர்அதனால் தான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம், பனி இல்லாத போதும்நாம் இன்னமும், குளிர்காலம் மற்றும் கலைமான் பனிபொழிவில் இருப்பதுபோல கற்பனை செய்து வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம்!

 

இப்போது, ​​இந்தியாவில் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகையில், நம்மிடம் உள்ள இந்த பழக்கவழக்கங்களில் பலவற்றைத் தழுவிபூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியம்என்று தேவதூதர்கள் பாடியசமாதான பிரபுவின்” பிறப்பை நினைவூட்டுவதற்கு, அவற்றைப் பயன்படுத்துகிறோம்.  ஆயினும்கூட, “சமாதான பிரபுவை,” கொண்டாடும் நாம் சண்டையால், போரால் மற்றும் ஒற்றுமை இன்மையால் துண்டாடபடுகிறோம் என்பது முரண்பாடாகத் தெரிகிறது; இது வெறுமனே நாம் வாழும் உலகில் மட்டுமல்ல ஆனால் நம் வீடுகளிலும், குடும்பங்களிலும் மற்றும் நம் உள்ளேயும் கூட உள்ளது.

 

எனவே, சக இந்தியர்களால் எழுதப்பட்ட இந்த பிரதிபலிப்புகளைப் படிக்கும்போது நான் பிரார்த்திக்கிறேன், நாம் வெறுமையான கிறிஸ்துமஸாகஉணர மாட்டோம்அதற்கு பதிலாக, கிழக்கிலிருந்து வந்த வயதான ஞானிகளைப் போல நாம் இயேசுவை நாடுவோம்; நம்முடைய இருதயங்களில் அவருடைய சமாதானத்தை அனுபவிப்போம்.

 

நீங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கிறிஸ்துமஸை பெற்றிடுங்கள்!

 

banner image

~ இரவு முழுவதும் கிறிஸ்துமஸ் பாடல்கள் ~

நம்மில் பெரும்பாலானோருக்கு, டிசம்பர் மாத தொடக்கமானது கிறிஸ்துமஸ் காலத்தின் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள நம் வீடுகளுக்கு வருகை தரும் பாடகர் குழுக்களின் பழமையான நினைவுகளை கொண்டு வருகிறது. சிறுவர் பாடகர் குழுவின் ஒரு பகுதியாக, நாங்கள் எங்கள் பாடகர் உறுப்பினர்களின் வீடுகளை சந்தித்த போது, இரவு முழுவதும் உற்சாகமாக நாங்கள் பாடியதை நினைவுகூருகிறேன்.

~ ஒரு கிறிஸ்துமஸ் மரத்தின் மகிழ்ச்சிகள் ~

ஆடம்பரமான, இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஊசியிலை மரங்கள் அனைத்தையும் வியாபிப்பதற்க்கு முன்பு வரை, வீட்டில் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளில் எப்போதும் ஒரு பெரிய கிறிஸ்துமஸ் சவுக்கு மரம் அடங்கும். நான் வளர்ந்து வருகிற போது, கிறிஸ்துமஸ் வாரத்திற்காக ஆவலுடன் காத்திருப்பேன், அப்பொழுது தான் நாம் ‘உடனடி’ நடைபாதை கடைகளுக்கு செல்ல முடியும், தெரு தெரு முனைக் கடைகளில் அவை விற்கப்பட்டன.

~ கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மாட்டுத்தொழுவம் ~

கிறிஸ்துமஸ் என்பது காற்றில் அற்புதம் இருக்கும் காலம். மின்னும் வண்ணமயமான தொடர் விளக்குகள், எல்லாவற்றையும் பிரகாசிப்பிக்கும். அவை உயிரற்ற பொருட்களைக்கூட உயிருள்ள பொருள்போல தோன்றபண்ணும், அவை நம்மை நோக்கி கண் சிமிட்டுகிறது. குழந்தையாக, எனக்கு பிடித்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்று குடில் அல்லது மாட்டு தொழுவம் அமைப்பது. ஒவ்வொரு ஆண்டும், களிமண் சிலைகளை வைத்திருந்த அட்டை பெட்டி, பரணிலிருந்து கீழே இறக்கப்படும்.

~ கிறிஸ்துமஸை பற்றிய நன்மைகள் மற்றும் நினைவுகள் ~

முந்தைய இரவு நட்சத்திரம் மேலே தொங்கவிடப்பட்டது. வருடம்தோறும் கிறிஸ்துமஸ் காலத்தின் ஒரு பாரம்பரிய தொடக்கமாக என் அப்பா, சகோதரர் மற்றும் நான் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைப்போம். நாங்கள் காலையில் எழும்போது, என்ன வைத்துவைக்க பட்டு இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். சமையலறையிலிருந்து வரும் மாவு பிசையும் ஒலி எங்களை பெருமூச்சு விட செய்யும். அது குல்-குல் தயாரிக்கும் நாள்! நாங்கள் அம்மா அழைப்பதைக் கேட்டோம், எங்களை கட்டுபடுத்த முடியாமல் நாங்கள் சாப்பாட்டு மேஜைக்கு சென்றடைந்தோம்.

~ என்றென்றும் இருக்கும் பரிசை வழங்குதல் ~

கிறிஸ்துமஸ் காலம் பரிசுகள் மற்றும் பிறருக்கு கொடுப்பதுடன் ஒத்ததாக இருக்கிறது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவர்களின் பரிசுகளைத் திறக்க ஆவலுடனும், உற்சாகத்துடனும் காத்திருப்பார்கள். பல தனி நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள் இந்த சமயத்தில் தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் தயவை நீட்டும் நேரம்.

~ விடியல் ஆராதணை மற்றும் குமாரத்துவம் ~

நான் வளரும்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலய ஆராதனையின் நினைவுகள் அனைத்தும் பிரகாசமாய் மின்னியதைப் பற்றியே இருந்தன. அதிகாலை 2 மணிக்கு ஆலய ஆராதனைக்காக எங்கள் அம்மா எங்களை எழுப்பியதை நான் நினைவில் கொள்கிறேன். நாங்கள் பிரகாசமான மற்றும் சிறந்த உடையணிந்து, என் அப்பா இருட்டோடே, ஏதும் இல்லா சாலை வழியாக தேவாலயத்திற்கு எங்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வார்.