banner image

நீ …உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டு என்று அங்கே நினைவு கூருவாயாகில்…
மத்தேயு 5:23

இந்த வசனம் சொல்கிறது, “நீ பலிபீடத்தின் இடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து ,உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டு என்று அங்கே நினைவு கூருவாயாகில்,… “அது “உன் சமநிலையற்ற எரிச்சலில் நீ தேடி எதையாவது கண்டு பிடித்தால்”, என்று சொல்லவில்லை, ஆனால் “நீ நினைவு கூருவாயாகில் …”என்கிறது. அப்படி எனில், பரிசுத்த ஆவியானவர் ஏதாவது உங்கள் உணர்வுள்ள மனதிற்கு கொண்டுவந்தால்-” முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து “(மத்தேயு 5:24). பரிசுத்த ஆவியானவரின் தீவிரமான உணர்வுத்திறனுக்கு மறுப்புக் கூறாமல், அவர் அறிவுறுத்தும் சிறிய விஷயத்திலும் கவனமாய் இருங்கள்.

“முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி,…” நம் தேவனின் உத்தரவு எளிது- “முதலில் ஒப்புரவாகி…” அவர் சொல்கிறார், நடைமுறையில்” நீ வந்த வழியாக திரும்பிப் போ- பலி பீடத்தண்டையிலே கொடுக்கப்பட்ட பாவ உறுதி மூலம் சுட்டிக்காட்டப்பட்ட வழியிலே; உனக்கு எதிராக எதையாவது நினைக்கும் அவரிடம் உங்களுடைய முழு மனதாலும் ஆத்துமாவாலும் சுவாசம் போல இயற்கையாக ஒப்புரவாகுங்கள்.” இயேசு அடுத்த நபரைப் பற்றி சொல்லாமல்- உங்களை போக சொல்லுகிறார். அது உங்கள் உரிமைகளைப் பற்றிய விஷயம் இல்லை. புனிதரின் குறிப்பிட்ட அடையாளமாவது, அவர் தம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுத்து இயேசுவிற்கு கீழ்ப்படிதல் ஆகும்.

“…பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து”. ஒப்புரவாகுதலின் செயல்முறை குறிப்பிடத்தக்கது. முதலில் நாம் தன்னலமற்ற தியாக ஆவி உள்ளவர்களாய், பிறகு பரிசுத்த ஆவியானவரின் உணர்வு திறனால் திடீர் கட்டுப்பாடு மற்றும் நம் பாவ உறுதியில் நாம் நிறுத்தப்பட்டோம். பிறகு தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதல் மூலம் நமக்கு மற்றவர் மேல் குற்றம் சுமத்த மனப்பான்மையை ஏற்படுத்தும். இறுதியில் மகிழ்ச்சியாக, எளிதாக, காணிக்கையை தடையின்றி தேவனுக்கு செலுத்துவீர்கள்.