பல ஆண்டுகளுக்கு முன்பு, பல சாலைகள் குறுக்கிடும் ஒரு தெருவைக் கடக்க முயன்றபோது அவள் எவ்வளவு பயந்தாள் என்று தோழி என்னிடம் கூறினாள். “இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை; தெருவைக் கடப்பதற்கு எனக்கு கற்பிக்கபட்ட விதிகள் பயனற்றதாகத் தோன்றியது. நான் மிகவும் பயந்து போனேன், நான் மூலையில் நின்று, பேருந்திற்காகக் காத்திருந்து, தெருவின் மறுபக்கம் கடக்க அனுமதிப்பீர்களா என்று பேருந்து ஓட்டுநரிடம் கேட்பேன். இந்தச் சந்திப்பில் பாதசாரியாகவும், பின்னர் ஓட்டுநராகவும் வெற்றிகரமாகச் செல்ல நான் கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்” என்றாள்.

ஆபத்தான போக்குவரத்து சந்திப்பு எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், வாழ்க்கையின் சிக்கல்களில் வழிநடப்பது இன்னும் அச்சுறுத்தலாக இருக்கலாம். சங்கீதம் 118 இல் உள்ள சங்கீதக்காரரின் சூழ்நிலை பற்றி நமக்குத் தெரியாது, ஆனால் அது கடினமானது மற்றும் ஜெபத்திற்கு ஏற்றது என்பதை அறிவோம்: “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்” (வ.5) என்று சங்கீதக்காரர் கதறினார்.  மேலும் தேவன் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்.. எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்” (வ.6–7).

வேலை, படிப்பு அல்லது வீடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது பயப்படுவது சாதாரணமானது. உடல்நலம் குறைகையில், உறவுகள் மாறுகையில், அல்லது பணம் கரைகையில்  கவலைகள் மேலோங்கும். ஆனால் இந்த சவால்களுக்கு, நாம் தேவனால் கைவிடப்பட்டதாக அர்த்தம் இல்லை. நாம் அழுத்தப்படுகையில், ​​ஜெபத்துடன் அவருடைய பிரசன்னத்திற்கு அழுத்தம் கொடுப்பவர்களாக இருப்போமாக.