80 ஆண்டுகால திருமண வாழ்க்கை. மே 31, 2021 அன்று எனது கணவரின் மாமா பீட் மற்றும் அத்தை ரூத் அதைக் கொண்டாடினர். 1941இல் ரூத் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட சந்திப்பு திருமணம் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தி, பள்ளியிலிருந்து பட்டம்பெற்ற பின்னர் இருவரும் தங்களுடைய சுயவிருப்பத்தின் பிரகாரம் திருமணம் செய்துகொண்டனர். தேவனே அவர்களை இணைத்ததாகவும் இத்தனை ஆண்டுகளாக அவர்களை வழிநடத்தினார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். 

இந்த 80 ஆண்டுகள் திருமண வாழ்வில் பீட்டும் ரூத்தும் மன்னிப்பை தேர்ந்தெடுத்து தங்கள் திருமண வாழ்க்கையை பலப்படுத்த முயற்சித்தனர். ஆரோக்கியமான உறவில் இருப்பவர்கள் அனைவரும் நாம் மற்றவர்களை காயப்படுத்துகிற சுபாவங்களில் மன்னிப்பின் அவசியத்தை அறிந்திருப்பர். அது தவறான வார்த்தைகள், நிறைவேற்றத் தவறின வாக்குறுதிகள், செய்ய மறந்த பொறுப்புகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்தும் வேதப்பகுதியில் மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” (கொலோசெயர் 3:12) தரித்துக்கொள்ளுமாறு விசுவாசிகளுக்கு வலியுறுத்திய பின்னர், “ஒருவரையொருவர் தாங்கி… ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:13) என்று ஊக்கப்படுத்துகிறார். அவர்களுடைய அனைத்து பேச்சுகளும் அன்பினால் ஊன்றப்பட்டிருக்கவேண்டும் என்பதை முக்கியமாய் வலியுறுத்துகிறார் (வச. 14).