கிரேடி, கேட்பவர்கள் எல்லோருக்கும் தன்னை “உடைந்தது” (BROKE) என்று தன்னுடைய தெருப் பெயரை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்வான். அவனுடைய அடையாள அட்டையிலும் அதைப் பொறித்திருந்தான். அவன் சூதாட்டம், விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நடுத்தர வயது கொண்டவன். அவன் உடைக்கப்பட்டவனாகவும், தேவனை விட்டு தூரமாகவும் வாழ்ந்தான். ஆனால் ஒரு மாலை நேரத்தில் ஒரு ஹோட்டல் அறையில், தேவனுடைய ஆவியானவரால் ஏற்பட்ட உணர்த்துதலினால், அனைத்தும் மாறியது. “நான் இரட்சிக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூறினான். அன்று மாலை அவன் பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்காக இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தான். நாற்பது வயதை தாண்டமாட்டோம் என்று எண்ணிய அவன், அடுத்த முப்பது வருடங்கள் விசுவாசியாக மாறி, தேவனுக்கு ஊழியம் செய்தான். அவனது ஓட்டுனர் உரிமத்தில், “உடைந்தது” என்ற வாசகம், “மனந்திரும்பு” (REPENT) என்று மாற்றப்பட்டது. 

“மனந்திரும்பு.” அதைத் தான் கிரேடி செய்தான். அதைத்தான் இஸ்ரவேலர்கள் செய்யவேண்டும் என்று ஓசியா 14:1-2 சொல்லுகிறது. “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு… வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்;.” சிறியதோ, பெரியதோ, நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாயிருப்பினும், அது நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் மரணத்தின் மூலம் சாத்தியமாக்கப்பட்ட மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த பிரிவு மாற்றப்படுகிறது. நீங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுகிறவரோ, அல்லது கிரேடியைப் போன்ற வாழ்க்கை வாழ்பவரோ, யாராக இருப்பினும், உங்களுக்கான மன்னிப்பை ஒரு ஜெபத்தின் மூலம் சாத்தியமாக்கலாம்.