2010 ஆம் ஆண்டில், லஸ்லோ ஹன்யெஸ், பிட்காயினுடன் முதல் கொள்முதல் செய்தார் (ஒரு டிஜிட்டல் நாணயம் பின்னர் ஒவ்வொன்றும் ஒரு பைசாவின் ஒரு பகுதி மதிப்புடையது). இரண்டு பீட்ஸா உணவுக்கு 10,000 பிட்காயின்கள் செலுத்தப்பட்டது (25டாலர் – அப்போது சுமார் ரூ.1,125). 2021 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த மதிப்பில், பிட்காயின்களின் முந்தின மதிப்பை விட (சுமார் ரூ.3,900 கோடி) அதிகமாக இருந்திருக்கும். மதிப்பு உயரும் முன், அவர் பீட்சாக்களுக்கு நாணயங்களுடன் பணம் செலுத்தி, மொத்தம் 100,000 பிட்காயின்களை செலவு செய்தார். அவர் அந்த பிட்காயின்களை செலவு செய்யாமல் வைத்திருந்தால், அவற்றின் மதிப்பு அவரை அறுபத்தெட்டு மடங்கு கோடீஸ்வரராக்கி, அவரை “உலகின் பணக்காரர்கள்” பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் முன்னமே அறிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். 

லஸ்லோ நிச்சயமாக அதை அறிந்திருக்க முடியாது. எதிர்காலத்தை யாராலும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து அதைக் கட்டுப்படுத்த நாம் முயற்சிக்கும்போது, “நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்” (10:14) என்று பிரசங்கி எச்சரிக்கிறார். மற்றொரு நபரின் வாழ்க்கையைக் குறித்து, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய சில நுண்ணிய வெளிப்பாடு தம்மிடம் இருப்பதாக சிலர் எண்ணிக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர். ஆனால் பிரசங்கியோ, “தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?” (வச. 14) என்று கேட்கிறார். யாருமேயில்லை!

வேதம், ஞானியையும் மதியீனனையும் வேறுபடுத்துகிறது. இருவருக்கும் இடையே உள்ள பல வேறுபாடுகளில் ஒன்று, எதிர்காலத்தைப் பற்றிய மனத்தாழ்மை (நீதிமொழிகள் 27:1). தீர்மானம் எடுக்கும்போது, தேவன் மட்டுமே அனைத்தையும் அறிவார் என்னும் மனநிலையிலேயே ஞானி ஒரு தீர்மானத்தை எடுக்கிறான். ஆனால் மதியீனர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத அறிவை நாடுகிறார்கள். நம்முடைய எதிர்காலம் அறிந்த ஒரே தேவனை நாம் விசுவாசிக்கும் ஞானத்தை தேவனிடத்தில் நாடுவோம்.