“ஓய்வு” என்ற கவிதையில், வேலை செய்வதிலிருந்து ஓய்வு நேரத்தை பிரிக்கும் நமது போக்கை கவிஞர் நயமாக சவால் விடுகிறார். உண்மையான உழைப்போடு வருவதுதான் உண்மையான ஓய்வாகுமல்லவா? நீங்கள் உண்மையான ஓய்வு நேரத்தை அனுபவிக்க விரும்பினால், வாழ்க்கையின் கடமைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, “இன்னும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்; – அதைப் பயன்படுத்துங்கள் – வீணாக்காதீர்கள்; இல்லையெனில் அது ஓய்வாய் கருதப்படாது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். உனக்கு முன்பாக அழகு நிற்கிறது, அதைக் கண்டு உன் வேலையைச் செய்து, ஓய்வை அனுபவியுங்கள் என்று வரிகள் நீளுகின்றன. 

உண்மையான ஓய்வு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டும், அன்பு மற்றும் சேவையின் மூலமாகவே கிடைக்கிறது என்று கவிஞர் முடிக்கிறார். இது தெசலோனிக்கேயர்களுக்கு பவுலின் ஆலோசனையை நினைவுபடுத்துகிறது. தமது அழைப்பை விவரித்து, விசுவாசிகளை ஊக்குவித்த பிறகு, “தேவனுக்கு  நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று” (வச. 11) விசுவாசிகளுக்கு தொடர்ந்து புத்தி சொல்லுகிறார். 

அத்தகைய வாழ்க்கையை, நேர்மை, அன்பு மற்றும் சேவை ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார். “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” (3:12) உங்களை ஆசீர்வதிப்பார் என்று பவுல் வேண்டிக்கொள்ளுகிறார். மேலும், “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று” சபையை ஊக்குவிக்கிறார் (4:11). தேவனை நேசித்து, அவர் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவியிருக்கிறாரோ, அதேபோன்று மற்றவர்களுக்கு உதவிசெய்து விசுவாச வாழ்க்கையின் அழகை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வாழ்க்கை முறையே மெய்யான ஓய்வாகும் (வச. 12).

அல்லது கவிஞர் சொல்வது போல், உண்மையான மகிழ்ச்சி, “அன்பு மற்றும் சேவையில் நிலைத்திருக்கிறது.” அதுதான் உண்மையான ஓய்வு.