1970களில் நான் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியராகவும் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் இருந்தபோது அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு உயரமான, தெளிவான நபராக இருந்தார். அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டு, அவர் எனது கூடைப்பந்து அணியிலும் எனது வகுப்புகளிலும் இருந்தார். என்னுடன் பல வருடங்கள் சக ஆசிரியராகப் பணியாற்றிய அதே நண்பர், எனது பணி ஓய்வு விழாவில் என் முன் நின்று, எங்களின் நீண்ட கால நட்பைக் குறித்து விமரிசையாக பகிர்ந்து கொண்டார்.

தெய்வீக அன்பினால் இணைக்கப்பட்ட சிநேகிதன் நம்மை ஊக்குவித்து இயேசுவிடம் நெருங்கி வரச் செய்வது எப்படியிருக்கும்? நட்பில் இரண்டு ஊக்கமளிக்கக்கூடிய விஷயங்கள் உள்ளதாக நீதிமொழிகளின் ஆசிரியர் அறிந்திருந்தார்: முதலாவதாக, உண்மையான நண்பர்கள் எளிதில் கொடுக்க முடியாத நல்ல ஆலோசனைகளை வழங்குவர் (27:6): “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” என்று சொல்லுகிறார். இரண்டாவதாக, இக்கட்டு நேரங்களில் அருகில் இருக்கும், அணுகக்கூடிய ஒரு நண்பர் முக்கியம்: “தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி” (வச. 10). 

வாழ்க்கையில் நாம் தனித்து பறப்பது நல்லதல்ல. சாலொமோன் குறிப்பிட்டது போல், “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்” (பிரசங்கி 4:9). வாழ்க்கையில், நமக்கு நண்பர்கள் இருக்க வேண்டும், நாமும் மற்றவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும். “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” (ரோமர் 12:10). மேலும், “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” (கலாத்தியர் 6:2), மற்றவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை கிறிஸ்துவுக்குள் நெருங்கச் செய்ய பிரயாசப்படுவோம்.