Archives: அக்டோபர் 2022

சகோதரனாகிய சகோதரி

அலுவலக தலைமைப்பொறுப்பில் இருப்பவர் அவளைத் தனியே சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்டதால், சிவந்த கண்களுடனும் கண்களில் நீர் சொறிய, கொண்டாட்ட மையத்தின் ஆலோசனை அறையில் கேரனை சந்தித்தேன். 42 வயது நிரம்பிய கேரன், திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். அவளுடைய அலுவலகத்தின் தலைவரும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி இருக்கிறாள்.
அவளை மனரீதியாய் காயப்படுத்திய அவளுடைய சகோதரன், அன்பு காட்டத் தவறிய தகப்பன் என்ற ஆண்களின் மீதான ஒரு வெறுப்புணர்வோடே கேரன் வளர்ந்தாள். புதுப்பிக்கப்பட்ட அவளுடைய விசுவாசமானது, வாழ்க்கையின் புதிய எல்லைகளை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனாலும் அவளுடைய ஏக்கம் தொடர்ந்தது. இந்த வகையான அன்பை அவளுடைய வாழ்க்கையில் ருசிக்காதது அவளுக்கு வேதனையாகவே தோன்றியது.
நாங்கள் பேசி முடிந்த பின்பு, நானும் கேரனும் தலைகளைத் தாழ்த்தி, ஜெபித்தோம். வல்லமையான ஜெபத்தின் மூலம், கேரன் தன்னுடைய சோதனைகளையும், அந்த நபரின் வற்புறுத்தல்களையும் தேவனுடைய சமூகத்தில் வைத்துவிட்டு, பாரம் குறைந்தவளாய் அந்த அறையைவிட்டுக் கடந்துசென்றாள்.
அந்த நாளில் தாமே, எல்லோரையும் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் பாவிக்கத்தூண்டும் பவுலின் போதனைகளை உணர்ந்தேன் (1 தீமோத்தேயு 5:1-2). நம்முடைய பார்வையையும் பேச்சையும் வைத்து அனைத்தையும் இச்சையாய் மாற்றக்கூடிய வலிமை படைத்த இந்த உலகத்தில், எதிர் பாலினத்தவரை நம் குடும்ப நபராய் கருதுவதே ஆரோக்கியமானது. ஒரு ஆரோக்கியமான சகோதர-சகோதரி சிநேகத்திற்குள் தவறு நேரிட வாய்ப்பில்லை.
அவளை தவறாய் நடத்திய, எண்ணிய, புறக்கணித்த நபர்களையே பார்த்து வளர்ந்த கேரனுக்கு, சகோதர-சகோதரி சிநேகத்திற்கு உட்பட்ட ஒருவரின் பேச்சு தேவை. நம்முடைய சுவிசேஷத்தின் மேன்மை அதுவே. நமக்கு புதிய சொந்தங்களைக் கொடுத்து வாழ்க்கையின் பிரச்சனைகளை மேற்கொள்ள உதவுகிறது.

கால்பதித்தல்

“கால் பதித்தல்”(Walk On) என்பது பென் மால்க்கம்சன் என்பவருடைய நினைவுப் பதிவு. கால்பந்து விளையாட்டில் கொஞ்சமும் அனுபவமில்லாத இவன், தன்னுடைய அனுபவத்தைத் தானே பகிர்கிறான். அவனுடைய எதிர்பார்ப்புக்கு முரணாக, அவன் கல்லூரியின் கால்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டான்.
அந்த அணியில் சேர்ந்தபின்பு, இந்த எதிர்பாராத வாய்ப்பைக் கொண்டு தேவன் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தூண்டப்பட்டான். ஆனால் அவனுடைய சக வீரர்களின் மாறுபட்ட கருத்துக்கள் அவனைச் சோர்வுறச் செய்தது. தேவனுடைய வழிநடத்துதலுக்காய் மால்க்கம்சன் ஜெபித்தபோது, “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும்...நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்ற ஏசாயாவுக்கு தேவன் நினைவுபடுத்திய வார்த்தைகளைத் தேவன் நினைப்பூட்டினார். ஏசாயாவின் வார்த்தைகளினால் உந்தப்பட்ட மால்க்கம்சன் தன் சகவீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேதாகமத்தைப் பரிசளித்தான். அவர்கள் அதை மீண்டும் புறக்கணித்தனர். ஆனால் ஆண்டுகள் கழிந்த பின்பு அவருடைய அணியில் இருந்த ஒருவர் அந்த வேதாகமத்தைத் திறந்து வாசித்து, தேவன் மீதான தன்னுடைய தாகத்தை அவனுடைய மரணத்திற்கு முன்பாக பிரதிபலித்தான் என்பதை அறிந்துகொண்டான்.
நம்மில் பலரும், நம்முடைய நண்பர்களுடனோ அல்லது குடும்ப நபர்களுடனோ இயேசுவைப் பகிர்ந்துகொண்டதினால் புறக்கணிப்பைச் சந்தித்திருக்கலாம். நாம் உடனடி மாற்றத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையானது குறித்த காலத்தில் பலன் கொடுக்கும் என்பதை விசுவாசிப்போம்.

தேவனின் முன்னறிவை நம்புதல்

ஒரு அறிமுகமில்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்ற என்னுடைய கணவர், (தடங்காட்டி) ஜீ.பி.எஸ் தவறாய் வழிகாட்டிவிட்டது என்றார். நான்குவழிச் சாலையை அடைந்த நாங்கள், அதனோடு இணைந்து வரும் ஒரு வழிப்பாதையை தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தப்பட்டோம். தாமதம் செய்யாமல், “இது சரியாயிருக்கும்” என்று டேன் கூறினார். பத்து மைல்கள் தூரம் கடந்த பின்பு, எங்களுக்கு அருகாமை பாதையில் கடந்து சென்ற வாகனங்கள் வாகன நெரிசலுக்கு உட்பட்டுத் தேங்கி நின்றது. ஏதாகினும் பிரச்சனையா? பெரிய கட்டுமானப்பணி நடைபெறுகிறது என்று தடங்காட்டி சொன்னது. அங்கிருந்த துணை பாதை வழியாய் சென்றால் எளிதாய் போய்விடலாம் என்று தடங்காட்டி எங்களுக்கு வழிகாட்டியது. “தொலைவில் என்ன இருக்கிறது என்பதை என்னால் பார்க்கமுடியாது; ஆனால் தடங்காட்டி அதைப் பார்க்கமுடியும்” என்று டேன் சொன்னார். தேவனை நம்புவதும் அப்படித்தான் என்பதை நாங்கள் ஒத்துக்கொண்டோம்.
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிற (மத்தேயு 2:2) இயேசுவைப் பணிந்துகொள்ளும்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளின் முன்பாக இருந்ததை முன்னறிந்து அவர்களின் கனவிலே தேவன் அவர்கள் பாதையை மாற்றினார். தனக்குப் போட்டியாகப் பிறந்த ராஜாவின் பிறப்பால் கலங்கிய ஏரோது ஞானிகளிடம், "நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்" (வ.8). பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.(வ.12)
தேவன் நம்மையும் வழிநடத்துகிறவர். வாழ்க்கையின் நெடுஞ்சாலைகளில் நாம் கடந்துசெல்லும்போது, எதிர்கொண்டு வருகிற அனைத்தையும் அவர் பார்க்கிறார் என்ற உறுதியுடன் “அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்” என்று நம்பி அவருடைய வழிகளுக்குப் பூரணமாய் ஒப்புக்கொடுப்போம்.

வான்கோழிகளிடமிருந்து ஓடிப்போதல்

இரண்டு உயரமான காட்டு வான்கோழிகள் வழிப்பாதையில் நின்றிருந்தது. எந்த அளவிற்கு அதின் அருகாமையில் போகமுடியும்? நான் ஆச்சரியப்பட்டேன். என்னுடைய காலை நடைப்பயணத்தை மெதுவாக்கி, அதின் அருகாமையில் நின்றேன். நான் எதிர்பார்த்தபடி நடந்தது. வான்கோழிகள் என்னை நோக்கி நகர்ந்து வந்தது. அதின் நீளமான தலைகள் என் இடுப்பை வருடியது. அதன் அலகுகள் எவ்வளவு கூர்மையானவை? நான் ஓட ஆரம்பித்தேன். அது என்னைத் துரத்திக்கொண்டே வந்தது.
எப்படி எல்லாம் தலைகீழானது? வேட்டையாடப்படும் விலங்கு வேட்டைக்காரனை எப்படித் துரத்தலாம்? அது என்னைப் பார்த்துப் பயப்படவில்லை. அதனிடத்தில் நான் காயப்பட விரும்பாததால், நான் ஓடத் துவங்கினேன்.
தாவீது, பயமுறுத்தும் அளவுக்கு உடல்வாகு கொண்டவனில்லை. அதனால் அவனை தன்னிடம் வரும்படிக்கு கோலியாத் அனுமதித்தான். “என்னிடத்தில் வா; நான் உன் மாமிசத்தை ஆகாயத்துப்பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்” (1 சாமுவேல் 17:44) என்று சொன்னான். ஆனால் தாவீது எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துகொண்டான். அவன் கோலியாத் இருக்கும் திசை நோக்கி ஓடினான். மதியீனமான செயல் அல்ல; மாறாக, தேவன் மீதான நம்பிக்கையினிமித்தம் அவ்வாறு ஓடுகிறான். “இன்றையதினம்... இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” என்று உரத்த சத்தமாய் சொன்னான். இந்த சிறுவனின் செய்கையைப் பார்த்து கோலியாத் குழம்பினான். இங்கு என்ன நடக்கிறது? என்று அவன் யோசித்திருக்கக்கூடும். அதற்குள் அந்த கல் அவனுடைய கண்களுக்கு இடையேயான முன்நெற்றியைப் பதம் பார்த்தது.
சிறிய விலங்குகள் மக்களைப் பார்த்தும் மேய்ப்பர்களைப் பார்த்தும் பயந்து ஓடுவது இயல்பு. அதே போல, நாம் நம்முடைய பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிவதும் இயல்பு. ஏன் இயல்புக்கு உட்பட்டு வாழ எண்ணுகிறீர்கள்? இஸ்ரவேலில் தேவன் இல்லையா? அவருடைய வல்லமையில் எதிர்கொண்டு ஓடுங்கள்.