ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி ஒரு பெண் வாகன ஓட்டியிடம் அவளை ஏன் நிறுத்தினார் என்று தெரியுமா என்று கேட்டார். “தெரியாது” என்று அவள் திகைப்புடன் பதிலளித்தாள். “நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்” என்று குற்றஞ்சாட்டினார். “இல்லை இல்லை!” என்று அவள் நிராகரித்து, தன்னுடைய மொபைல் போனை எடுத்துக் காண்பித்து, நான் குறுஞ்செய்தி அனுப்பவில்லை, மின்னஞ்சல் அனுப்பினேன்” என்றாளாம்.

வாகனம் ஓட்டும்போது குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது என்ற சட்டம் இருப்பதால், மின்னஞ்சல் அனுப்பலாம் என்பது அர்த்தமில்லை. சட்டத்தின் நோக்கம் குறுஞ்செய்தி அனுப்புவதை தடுப்பதல்ல; மாறாக, இது கவனச்சிதறலோடு வாகனத்தை ஓட்டுவதை தடுப்பதேயாகும்.

இயேசு அவருடைய நாட்களின் மார்க்கத்தலைவர்களை மோசமான சட்ட ஓட்டைகளை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டினார். “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது,” என்று அவர் கூறினார். அதற்கு “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (மாற்கு 7:9-10) என்ற கட்டளையை மேற்கோள்காட்டினார். மத பக்தி என்ற போர்வையின் கீழ், இந்த பணக்கார தலைவர்கள் தங்கள் குடும்பங்களை புறக்கணித்தனர். அவர்கள் தங்கள் பணம், “தேவனுக்கு உரியது” என்று வெறுமனே அறிவித்தனர். ஆனால் வயதான காலத்தில் தகப்பனுக்கும் தாய்க்கும் உதவ வேண்டிய அவசியமில்லையென்று கருதினர். “நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்” (வச. 13) என்று அவர்களின் இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை இயேசு கண்டுபிடித்தார். அவர்கள் தேவனை மதிக்கவில்லை; தங்கள் பெற்றோரை அவமதித்தனர்.

பகுத்தறிவு மிகவும் நுட்பமானது. அதன் மூலம் நாம் பொறுப்புகளைத் தவிர்க்கிறோம், சுயநல நடத்தைகளை விளக்குகிறோம், தேவனின் நேரடி கட்டளைகளை நிராகரிக்கிறோம். அது நம் நடத்தையை விவரிக்கிறது என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தம் பிதாவின் நல்ல அறிவுரைகளுக்குப் பின்னால் ஆவியானவரின் வழிகாட்டுதலுக்காக நம்முடைய சுயநலப் போக்குகளை பரிமாறிக்கொள்ள இயேசு நமக்கு வாய்ப்பளிக்கிறார்.