ஒரு கிராம ஊழியரை எனக்குத் தெரியும். அவருடைய இரண்டு பேரன்களும் என்னுடைய சிறந்த நண்பர்கள். அவர் நகரத்திலுள்ள கடைக்குச் செல்லும்போது, அங்கு அவர் அறிமுகமானவர்களோடு அரட்டை அடிக்கும்போதும் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்துக்கொண்டிருப்போம். அவர்கள் எல்லாருடைய பெயர்களையும், அவர்களுடைய கதைகளையும் அவர் அறிந்திருந்தார். அவர் அங்கும் இங்கும் நின்று சுகவீனமாயிருக்கும் குழந்தையைப் பற்றியோ, பிரச்சனையான திருமணத்தைப் பற்றியோ கேட்டு ஒரு சில உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவார். அவர் வேதத்தைப் பகிர்ந்துக்கொண்டு தேவைப்பட்டால் அவர்களுக்காக ஜெபிப்பார். நான் அந்த மனுஷனை ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் ஒரு சிறப்பானவர். அவர் ஒருபோதும் யாரிடத்திலும் தன்னுடைய விசுவாசத்தைத் திணிக்கமாட்டார். அதை அப்படியே விட்டுவிடுவார்.  

பவுல் குறிப்பிடும் “நற்கந்தம்” இந்த வயதான போதகரிடம் இருந்தது (2 கொரிந்தியர் 2:15). “கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை” (வச. 14) பரப்புவதற்கு தேவன் அவரைப் பயன்படுத்தினார். அவர் இப்போது தேவனிடம் சென்று விட்டார். ஆனால் அவருடைய நறுமணம் லொமேட்டா நகரம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது.

“சாதாரண மக்கள் யாரும் இல்லை. மனிதனோடு பேசுவது வெறுமையாய் போகாது என்று சி.எஸ்.லூயிஸ் எழுதியிருக்கிறார். இதை மற்றொரு வழியில் கூறும்போது, ஒவ்வொரு மனித தொடர்புக்கும் நித்திய பின்விளைவுகள் உண்டு. நம்முடைய விசுவாசம் மற்றும் மென்மையான வாழ்க்கையின், அமைதியான சாட்சியின் மூலம் அல்லது சோர்வுற்ற ஆத்துமாவுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறுவதின் மூலமும், நம்மை சுற்றியிருக்கிற மக்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்ப்புகள் உள்ளன. கிறிஸ்துவைப் போல வாழும் வாழ்க்கை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.