இதுவரைக்கும் இல்லாத அளவு, மிகப்பெரிய வீடியோ விளையாட்டு என்று கணிக்கப்பட்ட நின்டென்டோவின் “தி லெஜெண்ட் ஆஃப் செல்டா: ஓக்கரீனா ஆஃப் டைம்ஸ்” உலகம் முழுவதும் ஏழு மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. இது உருளைக்கிழங்கைப் போல வடிவத்தில், களிமண்ணினால் செய்யப்பட்ட மிகச்சிறிய, பழங்காலத்து, ஒக்கரீனோ என்னப்பட்ட கருவியை பிரபலப்படுத்தியது. 

ஓக்கரீனா ஒரு இசைக்கருவியைப்போல தோற்றமளிக்காது. ஆனால் அது இசைக்கப்படும்போது, சரியான வடிவமில்லாத அதன் பல்வேறு துளைகளை மூடி, ஊதுகுழல் மூலம் ஊதப்படும்போது, அமைதியான ஆனால் சில நேரங்களில் ஆக்ரோஷமாக நம்பிக்கையூட்டும் ஒலியை உருவாக்குகிறது. 

ஓக்கரினாவைச் செய்தவர் ஒரு பெரிய அளவு களிமண்ணை எடுத்து, அதற்கு அழுத்தத்தையும் வெப்பத்தையும் கொடுத்து, அதை ஒரு அற்புதமான இசைக்கருவியாக மாற்றுகிறார். நான் இந்தப் படத்தில் தேவனையும் நம்மையும் காண்கிறேன். ஏசாயா 64:6, “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்…. இப்போதும் கர்த்தாவே நீர் எங்களுடைய பிதா. நாங்கள் களிமண். நீர் எங்களை உருவாக்குகிறவர். நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை… அதிகமாய் கோபம் கொள்ளாமலும்… இருப்பீராக” என்று ஏசாயா 64:6, 8-9ல் ஏசாயா கூறுகிறார். “தேவனே நீரே அதிகாரத்திலுள்ளவர். நாங்கள் எல்லோரும் பாவிகள். எங்களை ஒரு அழகான கருவியாக உமக்காக உருவாக்கும்” என்று தீர்க்கதரிசி கூறினார். 

அதைத்தான் தேவன் செய்கிறார்! அவருடைய கிருபையினால், அவர் தம்முடைய குமாரன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க அனுப்பி, நாம் பரிசுத்த ஆவியானவரோடு ஒவ்வொரு நாளும் நடக்கும்போது, நம்மை வடிவமைத்து மாற்றுகிறார். எப்படி அழகான இசையை உருவாக்குவதற்கு, ஒக்கரினாவை உருவாக்கினவர் தன்னுடைய சுவாசத்தை அந்தக் கருவிக்குள் ஊதுகிறாரோ, அப்படியே, நாமும் அதிகமதிகமாக இயேசுவைப் போல மாற (ரோமர் 8:29) அவருடைய கரத்தின் கிரியையான நம்மை, தம்முடைய அழகான சித்தத்தை நிறைவேற்ற, தேவனும் நமக்குள் கிரியை செய்கிறார்.