2019 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சார்லி வாண்டர்மீர் தனது எண்பத்து நான்கு வயதில் மரித்தார். பல ஆண்டுகளாக, அவர் ஆயிரக்கணக்கான மக்களால் சார்லி மாமா என்று அறியப்பட்டார். “சில்டரன்ஸ் பைபிள் ஹவர்” என்ற தேசிய வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். சார்லி மாமா மரிப்பதற்கு முந்தின நாள் அவரது ஒரு நல்ல நண்பரிடம், “என்ன தெரியும் என்பது அல்ல, யாரைத் தெரியும் என்பதே முக்கியம். ஆம், நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் பேசுகிறேன்” என்று கூறியுள்ளார். 

அவர் தன் வாழ்க்கையின் கடைசி தருணத்தில், மற்றவர்களுக்கு உதவ முடியவில்லையென்றாலும், இயேசுவைக் குறித்தும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வதின் அவசியத்தைப் பற்றியும் பேசினார். 

அப்போஸ்தலர் பவுல் இயேசுவை அறிவதையே அவருடைய மிக முக்கியமான பணியாகக் கருதினார்: “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,… அவருக்காக எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலிப்பியர் 3:8-1). இயேசுவை நாம் எப்படி அறிவோம்? “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9).

இயேசுவைப் பற்றிய உண்மைகளை நாம் அறிந்திருக்கலாம். தேவாலயத்தைப் பற்றிய அனைத்தையும் நாம் அறிந்திருக்கலாம். வேதத்தை பற்றி கூட நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இரட்சிப்பு என்னும் இலவச பரிசை ஏற்றுக்கொள்ளுவதே இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கான ஒரே வழி; அவரே நாம் அறிந்துகொள்ள வேண்டிய நபர்.