தங்களது முதல் பிறந்த மகனை மன இறுக்கம் (ஆட்டிசம்) கொண்டதாக மருத்துவர்கள் கண்டறிந்த பின்னர், மனநலத்தில் ஊனமுற்ற குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரித்து வாழ்க்கையை  எதிர்கொள்ளுவதை எண்ணி ஒரு இளம் தம்பதியினர் துக்கமடைந்தனர். தங்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தங்களின் அன்பிற்கினிய மகனின் எதிர்காலத்திற்காக அனுசரித்துக் கொள்ள எதிர்கொண்ட போராட்டங்களை, உடைக்கப்படாத விசுவாசம் என்ற புத்தகத்தில் அவர் ஒப்புக் கொள்கிறார். எனினும், இந்த வேதனையான செயல்முறையின் மூலம், அவர்களுடைய கோபத்தையும், சந்தேகங்களையும், பயங்களையும் தேவன் கையாள முடியும் என்பதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இப்போது, அவர்களின் மகன் வால வயது அடையும்போது, டயான் தனது அனுபவங்களைப் பயன்படுத்தி சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோரை ஊக்குவிக்கிறார். தேவனின் உடைக்க முடியாத வாக்குறுதிகள், வரம்பற்ற வல்லமை மற்றும் அன்பான விசுவாசத்தைப் பற்றி அவள் மற்றவர்களிடம் கூறுகிறார். ஒரு கனவின் மரணம், ஒரு எதிர்பார்ப்பு, வாழ்க்கையின் ஒரு வழி அல்லது  ஒரு பருவத்தை நாம் அனுபவிக்கும் போது அதைக்குறித்து  துக்கப்படுவதற்கு தேவன் நமக்கு அனுமதி அளிக்கிறார் என்று டயான்  மக்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

ஏசாயா 26-ல், தேவனுடைய மக்கள் அவரை என்றென்றைக்கும் நம்பலாம், “கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” என்று தீர்க்கதரிசி அறிவிக்கிறார் (வச 4). ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அமைதியுடன் நம்மைத் நிலைநிறுத்த முடியும் (வச 12). அவரது மாறாத தன்மையை மையமாகக் கொண்டு, சிக்கலான காலங்களில் அவரை நோக்கி கூக்குரலிடுவது நம் நம்பிக்கையை புதுப்பிக்கிறது (வச 15). 

எந்தவொரு இழப்பு, ஏமாற்றம் அல்லது கடினமான சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் போது, அதைப் பற்றி அவரிடம் நாம் உண்மையாக  இருக்க தேவன் நம்மை அழைக்கிறார். நம்முடைய மாறிவரும் உணர்ச்சிகளையும் கேள்விகளையும் அவரால் கையாள முடியும். அவர் நம்முடன் இருந்து நீடித்த நம்பிக்கையுடன் நம் ஆவிகளைப் புதுப்பிக்கிறார். நம் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து வருவதைப் போல நாம் உணரும்போது கூட, தேவனால் நம் விசுவாசத்தை உடைக்க முடியாததாக மாற்ற முடியும்.