நான் வேலையிலிருந்து எனது பேத்தியின் தடகள போட்டியை பார்க்கும்படி செல்லும்போது “நெடுஞ்சாலையை எடுக்க வேண்டாம்” இன்று எனது மகளிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்க்கும் போது தான் எனக்கு தெரியவந்தது அங்கு அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கிறது என்று. நான் வேறு வழியில்லாமல் வந்த பாதை எடுத்து திரும்ப சென்றேன்.

திரும்ப வீடு செல்லும்படி நான் எடுத்த எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன என்பதை கண்டறிந்தது எல்லா சாலைகளும் தேவனுடனான நித்திய உறவுக்கு வழிவகுக்கும் என்று கூறும் மக்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. சிலர் கருணை மற்றும் நன்னடத்தையின் பாதை நம்மை அங்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் மதம் சம்மந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கான பாதையைத் தேர்வு செய்கிறார்கள்.

அந்த வழிகளை நம்பி செல்வது நம்மை மூடப்பட்ட சாலைகளுக்கு தான் எடுத்து செல்லும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு இதை தெளிவுபடுத்துகிறார் (யோவா. 14:6). பிதாவின் வாசஸ்தலத்துக்கு உள்ளாக நாம் செல்லும்படியாக நமக்காய் அவர் மரிக்க போகிறார் என்பதை இந்த வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.

தேவ பிரசன்னத்திற்குள்ளாக நம்மை அழைத்து செல்லாத எந்த வழியையும் நாம் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இரட்சகராகிய இயேசுவை நம்புவோம் (யோவா.3:36). அவரை நம்பி கொண்டு இருப்பவர்கள், அவர் அளித்திருக்கும் வழிகளில் ஓய்வெடுக்கலாம்.