அரசியல்வாதியான அலெக்சாண்டர் ஹாமில்டனை அதிகமாக அமெரிக்காவில் யாருக்கும் தெரியாது. 2015ஆம் ஆண்டு, லின்- மானுவேல் மிராண்டா என்கிற பிரபல பாடகர் “ஹாமில்டன்” என்கிற பாடலை வெளியிட்டது முதல் அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களும், சிறுவர் முதற்கொண்டு ஹாமில்டனின் கதை தெரியவந்தது.

தேவனுக்கு ஒரு பாடலின் மகிமை என்னவென்று தெரியும், அதினால் தான் மோசேவினிடம் “நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக் கொண்டு இதை இஸ்ரவேல் புத்திரருக்கு படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்கு சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்கு இருக்கும் என்றார்” (உபா. 31:19). தேவன், இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்தில் வந்த பிறகு பின்வாங்கி மற்ற கடவுள்களை கும்பிடுவார்கள் என்று அறிந்து இதை மோசேயிடம் கூறியிருந்தார்.

நாம் எளிதாக பாடல்களை மறந்துவிட முடியாது, அதினால் நாம் தெரிந்தெடுக்கும் பாடல்களை ஞானமாக தெரிந்தெடுக்க வேண்டும். நம்மை விசுவாசத்தில் பலப்படுத்தும் பாடல்களை நாம் கிறிஸ்துவுக்குள்ளாக வளர ஆதாயப்படுத்திக் கொள்ளவும் கூடுமான அளவு மற்றவர்களிடம் பேசும்போதெல்லாம் சங்கீதங்கள் கீர்த்தனங்கள் மற்றும் ஆவிக்குரிய பாடல்கள் மூலமாக வார்த்தைகளை பயன்படுத்தவும். ஆகையால் உங்கள் இருதயத்தில் இருந்து தேவனுக்கு பாடல்களை பாடுங்கள் (எபே. 5:15-19).

நம் இருதயத்தின் வாஞ்சைகள் பாடலாக காணப்படலாம். அது இயேசுவை வெளிப்படுத்துகிறதா? அதை மனப்பூர்வமாகப் பாடுகிறோமா? நாம் என்ன பாடுகிறோமோ அது நம் நம்பிக்கையாக மாறுகிறது. ஆகையால் நாம் என்ன பாடுகிறோம் என்று கவனமாக, ஞானமாக யோசித்து சத்தமாக பாட வேண்டும்.