உலகம் கவனிக்கத் தவறுகின்ற மக்களை தேவன் பயன்படுத்த விரும்புகின்றார். வில்லியம் கேரி என்பவர் ஒரு சிறிய கிராமத்தில், 1700 ஆண்டுகளில் வளர்ந்தார், அவர் குறைந்த அளவே அடிப்படை கல்வியைப் பெற்றிருந்தார். அவர் தான் தெரிந்து கொண்ட வியாபாரத்தில், குறைந்த அளவு வருமானம் தான் ஈட்ட முடிந்ததால், வறுமையில் வாழ்ந்தார். தேவன் அவருக்கு, சுவிசேஷத்தைப் பரப்புவதில் தீராத தாகத்தைக் கொடுத்தார், அவரை சுவிசேஷப் பணிக்கு அழைத்தார். கேரி, கிரேக்கு, எபிரேயு, லத்தீன் மொழிகளைக் கற்றுக் கொண்டார். புதிய ஏற்பாட்டை முதன்முறையாக பெங்காலியில் மொழிபெயர்த்தார். இப்பொழுது அவர், “நவீன சுவிசேஷப் பணியின் தந்தை” என்று கெளரவிக்கப் படுகின்றார். அவர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய திறமைகளைக் குறித்து, “நான் மெதுவாகத் தொடர்கின்றேன், நான் தொடர்ந்து செய்வேன்” என்று பணிவோடு தெரிவித்தார்.

தேவன் ஒரு வேலையைச் செய்யும்படி நம்மை அழைக்கும் போது, அந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான பெலனையும் தருகின்றார், நம்முடைய குறைகளை அவர் பார்ப்பதில்லை.  கர்த்தருடைய தூதனானவர் கிதியோனுக்கு தரிசனமாகி, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (நியா.6:12) என்றார், மேலும் அந்த தூதனானவர் அவனிடம், அவர்களின் பட்டணத்தையும், பயிர்களையும் கொள்ளையிடுகின்ற மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்கும்படியும் கூறுகின்றார். ஆனால் கிதியோன் “பராக்கிரமசாலி” என்ற பட்டத்தைப் பெற்றிருக்கவில்லை. அவன் தன்னைத் தாழ்த்தி, “ நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்…என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” (வ.15) என்கின்றான். ஆயினும் தேவன், தன்னுடைய ஜனங்களை ரட்சிக்க கிதியோனைப் பயன்படுத்தினார்.

கிதியோனின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்த வார்த்தைகள்  “கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (வ.12) என்பன. நாமும் தாழ்மையுடன் நமது இரட்சகரோடு நடந்து, அவருடைய பெலனைச் சார்ந்து கொள்வோமாகில், அவர் நம்மை பெலப் படுத்தி, அவர் மூலமாக மட்டும் நடத்தக் கூடிய காரியங்களை நிறைவேற்றித்தருவார்.