அலைபேசி சேவையும் இல்லை, நடைபாதையின் வரைபடமும் இல்லை, எங்கள் நினைவில் பதிந்திருந்த வரைபடம்தான் எங்களை வழி நடத்தியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, கடைசியாக அந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடைந்தோம். ஒரு திருப்பத்தை தவற விட்டதால், மேலும் அரை மைல் தூரம் நடந்தோம்,  நாங்கள் நீண்ட பாதை வழியே நடக்க வேண்டியதாகி விட்டது.

நம்முடைய வாழ்வும் சில வேளைகளில் இதேப் போன்றே உள்ளது. நாம் செய்யும் காரியங்கள் சரியா அல்லது தவறா என்று மட்டும் கேட்பதோடல்லாமல், இது எங்கே என்னைக் கொண்டு போய் சேர்க்கும் என்பதையும் கேட்க வேண்டும். சங்கீதம் 1, இரண்டு வகையான வழிகளை ஒப்பிடுகின்றது. ஒன்று நீதிமானின் வழி (தேவனை நேசிப்பவர்கள்), மற்றது துன்மார்க்கனின் வழி (தேவனை நேசிப்பவர்களை பகைப்பவர்கள்). நீதிமான் மரத்தைப் போல செழிப்பான், துன்மார்க்கனோ காற்றுப் பறக்கடிக்கும் பதரைப் போல் இருக்கிறான் (வ.3-4). செழிப்பு என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் இந்த சங்கீதம் காட்டுகின்றது. அவன் எல்லாவற்றிற்கும் தேவனையே சார்ந்து வாழ்ந்து காட்டுவான்.

நாமும் இத்தகைய மனிதனாக எப்படி மாறலாம்? சங்கீதம் 1, நம்மை துன்மார்க்கருடைய நட்பிலிருந்தும், விரும்பத்தகாத பழக்கங்களில் இருந்தும் விலகுமாறு கற்பிக்கின்றது. தேவனுடைய வார்த்தையில் பிரியமாய் இருக்கும் படி (வ.2) நமக்கு கற்பிக்கின்றது. தேவன் நம் மீது கண்ணோக்கமாய் இருக்கும் போது தான், நம்முடைய வாழ்வு செழிக்கும். “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்” (வச. 6).

உன்னுடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்படைத்து விடு. போகிற இடத்தை அறியாமல் சென்று கொண்டிருக்கின்ற உன்னுடைய பழைய வழியை, அவர் மாற்றி, புதிய வழியில் நடத்துவார், வேத வார்த்தையாகிய நதியை உனக்குள்ளே பாய்ந்து செல்லும்படி செய், அப்பொழுது உன்னுடைய இருதயமாகிய வேர்த் தொகுதி செழித்து வளரும்.