Archives: நவம்பர் 2019

கவனமாக செய்யப்பட்டது

நியுயார்க்கில், கோஷன் என்ற இடத்திலுள்ள, ஆலன் கிலெஸ்டோஃப் என்ற பாலாடைக் கட்டி(சீஸ்) உற்பத்தி செய்யும் விவசாயி, பாலாடைக் கட்டிகளை, அதன் தன்மையும், மணமும் மாறாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க, அவர் கையாளும் முறையை யு டியுப் காணொளி காட்சியில் விளக்கினார். அவற்றை சந்தைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவை பூமிக்கு அடியிலுள்ள குகையில் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை அடுக்கி வைக்கப்படும். அங்குள்ள ஈரப்பதமான சூழலில், அவை கவனமாக பதப்படுத்தப்படும். “’நாங்கள் அவற்றிற்கு சரியான சுற்றுச் சூழலைக் கொடுத்து, அதனுடைய முழு தன்மையையும் பெற்றுக்கொள்ள, உதவுகின்றோம்” என்று கிலெஸ்டோஃப் விளக்கினார்.

பாலாடைக் கட்டி அதன் முழு தன்மையையும் பெற்றுக்கொள்ள கிலெஸ்டோஃப் கொண்டுள்ள பேராவலைப் போன்று, நம்முடைய தேவனும் தம்முடைய பிள்ளைகள் உண்மையான ஆற்றலைப் பெற்றவர்களாக, முதிர்ச்சியடைந்து, கனிகளைத் தருபவர்களாக உருவாக ஆவல் கொண்டுள்ளார். இப்படிப்பட்டவர்களை உருவாக்குவதற்கு, தேவன் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் தெரிந்து கொண்டார் (எபே. 4:11) இந்த வரங்களைப் பெற்ற மக்கள், ஒவ்வொரு விசுவாசியும் வளர்ச்சியடையவும், சுவிசேஷப் பணியைச் செய்யவும் ஊக்குவிக்கின்றார்கள் (வச. 12). இதன் இலக்கு என்னவெனின்” தலையாகிய கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருக்கும்படி” (வச. 15), அப்படிச் செய்தார்.

தேவன் நம்மை முதிர்ந்தவர்ளாக்கும்படி உருவாக்கம் படி, நம்மை அவரிடம் முழுமையாக ஒப்புக்கொடுப்போமாகில், பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்து ஆவிக்குரிய வளர்ச்சியைத் தருகின்றார். நம்மை வழிநடத்தும்படி, நம் வாழ்வில், அவர் காட்டும் மக்களின் வழி நடத்துதலை நாம் பின்பற்றினால், நாம் அவருக்குப் பணிசெய்ய போகும் இடங்களில் அது நமக்கு பயன் தருவதாக இருக்கும்.

அபாயகரமான பொருட்கள்

அபாயச் சங்கு ஒலி, என் காதுகளை பிளக்கும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டேயிருந்த போது, அவசர கால வண்டி ஒன்று வேகமாக, என்னுடைய காரை முந்திக் கொண்டு சென்றது. அதன் பிரகாசமான ஒளி, என்னுடைய காரின் முன் பக்க கண்ணாடி வழியே வந்த போது, அந்த வாகனத்தின் பக்கங்களில் எழுதியிருந்த ”அபாயகரமான பொருட்கள்” என்ற வாசகம் ஒளிர்ந்து, என் கண்களுக்குத் தெரிந்தது. அந்த வாகனம், ஒரு அறிவியல் ஆய்வகத்திற்கு அவசர வேலைக்காக சென்றது. அங்கு, 400 காலன் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டிருந்ததால், அப்பொருளை அகற்றச் சென்றது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். கந்தக அமிலம் தொடுகின்ற யாவற்றையும் அரித்து விடுவதால், அதனை உடனே அகற்ற வேண்டும்.

இந்த புதிய கதையை நான் கேள்விப்பட்ட போது, எனக்குள்ளாக ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு கடுமையான வார்த்தைகளையும் ஒரு சங்கின் வழியாக ஒலித்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். பரிதாபம், என் வீட்டைச் சுற்றிலும் தாங்கொணா சத்தமாயிருக்கும். 

ஏசாயா தீர்க்கன் இத்தகைய ஒரு விழிப்பை, தன்னுடைய பாவத்தைக் குறித்து உணர்கின்றார். அவர், தேவனுடைய மகிமையை ஒரு தரிசனத்தில் பார்த்த போது, தன்னுடைய தகுதியின்மையை உணர்கின்றார். அவர் தன்னைக் குறித்து,” அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்கின்றார், மேலும் அத்தகைய மனுஷர்களின் மத்தியில் வாசம் பண்ணுகின்றேன், (ஏசா. 6:5) எனவும் கூறுகின்றார். உடனே, ஒரு தேவ தூதன் அவனுடைய உதட்டை ஒரு நெருப்புத் தழலால் தொடுகின்றான். அத்தோடு, “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது” என்றான் (வச. 7).

ஒவ்வொரு கணத்திலும், நாம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, பேச்சின் மூலமாகவோ அல்லது எழுத்தின் மூலமாகவோ வெளிப்படுத்துவதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. அவை “அபாயகரமான” வார்த்தைகளா? அல்லது தேவனுடைய மகிமை, நம்மை உணர்த்தி, அவருடைய கிருபை, நம்மை சுகப்படுத்தி, நாம் வெளிப்படுத்தும் எல்லா காரியங்களும் அவரை கனப்படுத்த அமைய, நாம், நம்மை ஒப்புக்கொடுப்போமா?

உண்மையான நன்றி

சேவியர், தன்னுடைய முதல் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு, தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது. என்னுடைய கணவன் ஆலன், ஒரு கட்டு நன்றி அட்டைகளை அவனிடம் கொடுத்து, வேலையினிமித்தம் அவன் சந்திக்கும் எஜமானர்களுக்கு இந்த நன்றி அட்டையை அனுப்புமாறு சொன்னார். மேலும் தன்னுடைய பல ஆண்டுகள், மேலாளர் அநுபவத்தை பயன் படுத்தி, அவனுக்கு ஒரு மாதிரி நேர்முகத் தேர்வாளர் போன்று செயல் பட்டு, அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார். இந்த மாதிரி தேர்வு முடிந்ததும், ஆலன் தன்னுடைய தற்குறிப்பின் பல பிரதிகளை எடுத்துக் கொண்டு, புறப்பட்டான். ஆலன் அவனிடம், நன்றி அட்டையை நினைவு படுத்திய போது, “எனக்குத் தெரியும், ஒரு உண்மையான நன்றி குறிப்பு, என்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்” என்றான்.

அந்த மேலாளர் சேவியரை வேலைக்கு தேர்ந்தெடுத்த போது, அவர், தன்னுடைய பல ஆண்டு அநுபவத்தில், தான் பெற்ற, முதல், கையால் எழுதப்பட்ட நன்றி குறிப்புக்காக நன்றி தெரிவித்தார். நன்றி சொல்வது, என்றும் நிலைத்திருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சங்கீதகாரனின் உள்ளம் நிறைந்த ஜெபங்களும், நன்றி ஆராதனைகளும் சங்கீதங்களின் புத்தகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன .நூற்றைம்பது சங்கீதங்களிலும், இந்த இரு வசனங்களுமே நன்றியைக் குறிக்கும் செய்தியை வெளிப்படுத்துகின்றது. ”கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங். 9:1-2)

தேவன் நமக்குச் செய்துள்ள அதிசயமான கிரியைகளுக்காக, நாம் நன்றியை வெளிப்படுத்துவோமாயின், அதற்கு முடிவே இருக்காது. ஆனாலும், ஜெபத்தின் மூலம் நம்முடைய உண்மையான நன்றியைத் தெரிவிக்கத் தொடங்குவோம். தேவன் நம் வாழ்வில் செய்துள்ள எல்லா நன்மைகளுக்காகவும், அவர் செய்வேன் என்று நமக்கு தந்துள்ள வாக்குத் தத்தங்களுக்காகவும், அவரைப் போற்றி, நன்றியோடு அவரை ஆராதிக்கும் வாழ்வை நாம் உருவாக்கிக் கொள்வோம்.

பேராசையுள்ள பிடி

சிறுவனும் கொட்டைகளும் என்ற, பழங்கால நீதிக் கதையில், ஒரு சிறு பையன் கொட்டைகள் வைக்கப்பட்டிருந்த ஜாடியினுள் கையைவிட்டு, கை நிறைய கொட்டைகளை அள்ளிக் கொண்டு, கையை வெளியே எடுக்க முயற்சிக்கிறான். கொட்டைகளோடு கையை வெளியே எடுக்க முடியவில்லை. தான் அள்ளிக் கொண்டதில், ஒன்றையும் விட தயாராக இல்லாத அச்சிறுவன் அழ ஆரம்பிக்கின்றான், சில கொட்டைகளை விட்டு விட்டு, கையை வெளியே எடுக்க ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பேராசை என்பது கடினமான எஜமானன்.

இந்தக் கதை தரும் நீதியை, பிரசங்கியின் ஞான ஆசிரியர் நமக்கும் கூறுகின்றார். அவர் சோம்பேறி, பேராசைக்காரன் ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார். “மூடன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு, தன் சதையையே தின்கிறான். வருத்தத்தோடும், மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.”(4:5-6). என்கின்றார். சோம்பேறி, தான் அழிந்து போகும் மட்டும் காரியங்களைத் தள்ளி போட்டுக் கொண்டேயிருப்பான், செல்வத்தைச் சேகரிப்பவனும், ஒரு நாள் , தன்னுடைய “பிரயாசம் யாவும் வீண், வருந்தத் தக்க வேலையை செய்தேனே “என்பான் (வச. 8)

பேராசையோடு பொருளைச் சேகரிக்க கஷ்டப்படுவதை விட்டு விட்டு, இருப்பதில் திருப்தியடைந்தவர்களாய் வாழ வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். நமக்கென்று தேவன் கொடுத்திருப்பது எப்பொழுதும் இருக்கும். இயேசு நமக்குச் சொல்வது,”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ (மாற். 8:36)

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கலையும் தேவனின் உள்ளமும்

எனது பெற்றோரின் வீட்டில், ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் மந்தையை மேய்ப்பதைச் சித்தரிக்கும் கலைப் படைப்பு ஒன்று உள்ளது. ஓவியம் போலத் தோற்றமளித்தாலும், சித்திர திரை மற்றும் சாயங்களுக்குப் பதிலாக முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்டதாகும். பொருள்கள் மற்றும் நபர்களின் நிறம், ஆழம் மற்றும் வெளிப்புறத்தை வரையறுக்க பல்வேறு வகையான மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரியான கலை, “மைசூர் மரப் பதித்த வேலை” என்று பின்னர் கண்டுபிடித்தோம். ஒவ்வொரு முறையும் நான் அதைப் பார்க்கும்போது, கர்த்தர் என் மேய்ப்பர் என்பதை அது எனக்கு நினைவூட்டுவதால், நான் நம்பிக்கையால் நிறைகிறேன். தேவன் என்னை ஆற்றவும், தனது பிரசன்னத்தை எனக்கு உறுதியளிக்கவும் இந்தக் கலைப் படைப்பைப் பயன்படுத்துகிறார். இந்த ஊக்கமளிக்கும் பணிக்காகவும், அத்தகைய படைப்பாற்றலைப் பெற்ற மர ஆசாரிகளுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் பல ஆண்டுகளாகக் கலையையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கிறார். யாத்திராகமத்தில், ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் மோசேயிடம் கூறினார் (வ.6). “நான் அழைத்து,” “நான் கட்டளையிட்டேன்,” “நான் அருளினேன்,” மற்றும் "நான் தேவஆவியினால் நிரப்பினேன்" என்று ஆராதனையில் பயன்படுத்தப்படும் பொருட்களை உருவாக்க பெசலெயேலையும் அகோலியாபையும் அவர் பணித்தார் (வ.2-6). “விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும்" (வ.3-5) அவர்களுக்கு ஞானத்தையும் திறமையையும் கொடுத்தார். ஆராதனையில் ஜனங்களை தம்மிடம் நெருக்கமாகக் கொண்டுவரத் தேவன் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து மற்றும் பயன்படுத்தினார்.

பெசலெயேல் மற்றும் அகோலியாப் போன்றோரின் விஷயத்தைப் போலவே, நம்முடைய கலைத்திறன் ஈவுகளெல்லாம் தேவஆவியால் நமக்கு அருளப்படுகின்றன. தேவனே நம்மைத் தேர்ந்தெடுத்து, நம்மை நியமித்து, அவருக்காகப் படைக்கும்பொருட்டு அவருடைய ஆவியால் நம்மை நிரப்பினார். இது யாருக்கு உதவப் போகிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவனின் வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தின் கீழ் நாம் கலையை உருவாக்கினால், அவர் அதை ஜனங்களை ஆறுதல்படுத்தவும் அவர்களின் வாழ்க்கையையும் நம் வாழ்க்கையையும் செழிக்கச் செய்யவும் பயன்படுத்துவார். 

 

வார்த்தைகளுக்கான பொறுப்பேற்றல்

 

ஒரு சோகமான நிகழ்வுக்கு பின்னர் நிறுவனங்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்வது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. ஆனால் ஒரு பதினேழு வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு புகழ்பெற்ற பள்ளி அவனைப் பாதுகாப்பதில் “துரதிர்ஷ்டவசமாக தவறிவிட்டோம்” என்பதை ஒப்புக்கொண்டது. அந்த மாணவர் இடைவிடாமல் கொடுமைப்படுத்தப்பட்டார். பள்ளித் தலைவர்கள், அதைப்பற்றி அறிந்திருந்தாலும், அவரைப் பாதுகாக்க சிறிதும் முயற்சிக்கவில்லை. கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராடுவதற்கும், மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க பள்ளி நிர்வாகம் தற்போது உறுதியளித்துள்ளது.

கொடுமைப்படுத்துதலால் ஏற்படும் பாதிப்புகள் என்பது வார்த்தைகளின் வலிமைக்கு அப்பட்டமான உதாரணம். நீதிமொழிகள் புத்தகத்தில், வார்த்தைகளின் தாக்கத்தை ஒருபோதும் இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கற்பிக்கப்படுகிறோம். ஏனென்றால், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதிமொழிகள் 18:21). நாம் சொல்லுவம் ஒரு வார்த்தை, ஒரு காரியத்தை உயர்த்தலாம் அல்லது நசுக்கலாம். கடுமையான சில வார்த்தைகள் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

நாம் சொல்வதைக் கொண்டு வாழ்வது எப்படி? நம்முடைய வார்த்தைகள் ஞானம் அல்லது மதியீனம் (15:2) என்று வேதம் போதிக்கிறது. ஞானத்தின் உயிரைக் கொடுக்கும் சக்தியின் ஆதாரமான தேவனிடம் நெருங்கி வருவதன் மூலம் நாம் ஞானத்தைக் காண்கிறோம் (3:13, 17-19).

வார்த்தைகள் மற்றும் செயல்களில் - வார்த்தைகளின் தாக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும், மற்றவர்கள் கூறியவற்றால் காயமடைந்தவர்களைக் கவனித்துப் பாதுகாப்பதற்கும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. வார்த்தைகள் கொல்லலாம், ஆனால் இரக்கமுள்ள வார்த்தைகள் குணப்படுத்தலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு “ஜீவ விருட்சமாய்” (15:4) மாறும்.

 

உடைபட்ட உள்ளம் தரும் ஆசீர்வாதம்

அவர் முதுகு கூன் விழுந்து, கைத்தடியுடன் நடக்கிறார். ஆனால் அவருடைய பல ஆண்டுகாலமான போதக ஊழியம், அவர் தன்னுடைய ஆவிக்குரிய பெலனுக்கு அவா் தேவனை சார்ந்திருக்கிறார் என்பதற்கு சாட்சியாயிருக்கிறது. 1993 ஆம் ஆண்டில், சங்கை. வில்லியம் பார்பர் ஒரு பலவீனப்படுத்தும் நோயால் கண்டறியப்பட்டார். இது முதுகெலும்பின் எலும்புகளை ஒன்றாக இணைக்கிறது. “பார்பர், நீங்கள் போதக ஊழியத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாகிலும் வேலையை தெரிந்துகொள்ள வேண்டும். உம் போன்ற மாற்றுத் திறனாளியை இந்த சபை போதகராய் ஏற்பதற்கு விரும்பவில்லை” என்று அவரிடத்தில் நுட்பமான விதத்தில் அறிவுறுத்தப்பட்டது. தேவன் அவரை ஒரு போதகராக மட்டும் பயன்படுத்தவில்லை; மாறாக, அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஒரு சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.

குறைபாடுகள் உள்ளவர்களை என்ன செய்வது என்று உலகம் முழுவதுமாக அறியாவிட்டாலும், தேவன் அறிந்திருக்கிறார். அழகையும் துணிச்சலையும், பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் மதிப்பவர்கள், அழைக்கப்படாத முறிவுகளுடன் வரும் நன்மையை இழக்க நேரிடும். யாக்கோபின் கேள்வியும் அதன் அடியில் உள்ள கொள்கையும் கருத்தில் கொள்ளத்தக்கது: “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக்கோபு 2:5). உடல்நலம் அல்லது வலிமை அல்லது பிற விஷயங்கள் குறையும் போது, ஒருவரின் நம்பிக்கை அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. தேவனுடைய பெலத்தால், அது எதிர்மாறாக இருக்கலாம். நமது பற்றாக்குறை அவரை நம்புவதற்கு ஒரு ஊக்கியாக இருக்கலாம். இயேசுவைப் போலவே நம்முடைய உடைந்த நிலையைக் கொண்டே உலகத்திற்கு நன்மையைக் கொண்டுவர அவரால் கூடும்.