நியுயார்க்கில், கோஷன் என்ற இடத்திலுள்ள, ஆலன் கிலெஸ்டோஃப் என்ற பாலாடைக் கட்டி(சீஸ்) உற்பத்தி செய்யும் விவசாயி, பாலாடைக் கட்டிகளை, அதன் தன்மையும், மணமும் மாறாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க, அவர் கையாளும் முறையை யு டியுப் காணொளி காட்சியில் விளக்கினார். அவற்றை சந்தைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவை பூமிக்கு அடியிலுள்ள குகையில் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை அடுக்கி வைக்கப்படும். அங்குள்ள ஈரப்பதமான சூழலில், அவை கவனமாக பதப்படுத்தப்படும். “’நாங்கள் அவற்றிற்கு சரியான சுற்றுச் சூழலைக் கொடுத்து, அதனுடைய முழு தன்மையையும் பெற்றுக்கொள்ள, உதவுகின்றோம்” என்று கிலெஸ்டோஃப் விளக்கினார்.

பாலாடைக் கட்டி அதன் முழு தன்மையையும் பெற்றுக்கொள்ள கிலெஸ்டோஃப் கொண்டுள்ள பேராவலைப் போன்று, நம்முடைய தேவனும் தம்முடைய பிள்ளைகள் உண்மையான ஆற்றலைப் பெற்றவர்களாக, முதிர்ச்சியடைந்து, கனிகளைத் தருபவர்களாக உருவாக ஆவல் கொண்டுள்ளார். இப்படிப்பட்டவர்களை உருவாக்குவதற்கு, தேவன் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் தெரிந்து கொண்டார் (எபே. 4:11) இந்த வரங்களைப் பெற்ற மக்கள், ஒவ்வொரு விசுவாசியும் வளர்ச்சியடையவும், சுவிசேஷப் பணியைச் செய்யவும் ஊக்குவிக்கின்றார்கள் (வச. 12). இதன் இலக்கு என்னவெனின்” தலையாகிய கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருக்கும்படி” (வச. 15), அப்படிச் செய்தார்.

தேவன் நம்மை முதிர்ந்தவர்ளாக்கும்படி உருவாக்கம் படி, நம்மை அவரிடம் முழுமையாக ஒப்புக்கொடுப்போமாகில், பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்து ஆவிக்குரிய வளர்ச்சியைத் தருகின்றார். நம்மை வழிநடத்தும்படி, நம் வாழ்வில், அவர் காட்டும் மக்களின் வழி நடத்துதலை நாம் பின்பற்றினால், நாம் அவருக்குப் பணிசெய்ய போகும் இடங்களில் அது நமக்கு பயன் தருவதாக இருக்கும்.