1892ஆம் ஆண்டு, அமெரிக்க ஐக்கியநாடுகளில் முதல் குடியுரிமை பெற்று எல்லிஸ் தீவுகளைக் கடந்து சென்று, தான் தங்கப்போகும் புதிய வீட்டினைக் குறித்தும், புதிய ஆரம்பத்தைக் குறித்தும் ஆனிமோர் அதிக உற்சாகத்துடன் இருந்திருப்பார். பல்லாயிரக்கணக்கானோர் அதன் வழியாகக் கடந்து சென்றிருந்தாலும், ஒரு இளம் வாலிபப் பெண்ணாக, அயர்லாந்தில் தன்னுடைய மிகக் கடினமான வாழ்க்கையை விட்டு, புதிய வாழ்க்கைக்காக வெளியேறினாள். ஒரேயொரு கைப்பையைமட்டும் எடுத்துக்கொண்டு தான்வாழப் போகும் இடத்திற்கு, பலவிதக் கனவுகளோடும், நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளோடும் வந்து சேர்ந்தாள்.

‘ஒரு புதிய வானத்தையும், புதிய பூமியையும்” (வெளி. 21:1) தேவனுடைய பிள்ளைகள் காணும்பொழுது எவ்வளவு உற்சாகமும், பரவசமும் அடைவார்கள். ‘பரிசுத்த நகரம், புதிய எருசலேம்” (வச. 2) என வெளிப்படுத்தின விசேஷம் சொல்லும் இடத்திற்கு நாம் செல்லுவோம். அப்போஸ்தலனாகிய யோவான் மிகவும் வல்லமையான கற்பனைகளினால் இந்த ஆச்சரியமான இடத்தைக் குறித்து விளக்குகிறார். அங்கே, ‘தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி, தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை கண்டிருப்போம்.’ (வெளி. 22:1). தண்ணீரானது வாழ்க்கையையும், அதன் பூரணத்தையும் குறிக்கும். அதன் காரணர் நித்திய தேவனாவார். யோவான் தொடர்ந்து, ‘இனி ஒரு சாபமுமிராது (வச. 3) எனக்கூறுகிறார். அந்த அழகான, பரிசுத்தமான தேவனோடு உள்ள உறவானது, அவருக்கும் மனிதர்களுக்கும் நடுவில் முழுவதுமாக மீட்டுக் கொள்ளப்பட்டது.

தேவன் தான் நேசித்த தன் பிள்ளைகளைத் தன் குமாரனின் ஜீவனின் மூலம் கிரயத்திற்குக்கொண்டு அவர்களுக்காக ஒரு புதிய அதிசயமான வீட்டினை ஆயத்தப்படுத்தி இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய, ஆச்சரியமான, நம்பமுடியாத காரியமாக இருக்கிறதல்லவா? – அவர் அங்கே நம்முடைய தேவனாக நம்மோடு கூட வசிப்பார் (21:3).