சூரியகாந்தி, உலகம் முழுவதிலும் காணப்படுகிறது; எங்கும் எளிதில் முளைக்கக்கூடியது. சாலையோரங்களிலும், பறவை தீவனங்கள் விழுகிற இடங்களிலும், வயல்களிலும், புல்வெளிகளிலும், புல்தரைகளிலும் சூரியகாந்தி முளைக்கிறது; சூரியகாந்தி பூக்களில் தேனீக்கள் மூலம் மகரந்தசேர்க்கை நடைபெறுகிறது. ஆனால் சூரியகாந்தி விவசாயத்திற்கு நல்ல மண் அவசியம்.  “கரிம பொருள் அல்லது குப்பையுரத்துடன் கூடிய” நன்கு வடிகட்டப்பட்ட, சற்று அமிலத்தன்மையுள்ள, சத்துநிறைந்த மண்ணில், விவசாயம் செய்யும்போது சூரியகாந்தி ருசிமிக்க விதைகளையும், சுத்தமான எண்ணெயையும், வயலில்  கடினமாகப் பாடுபடுகிறவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுப்பதாக இதழ் கூறுகிறது.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் “நல்ல நிலம்” அவசியமாகும். லூக்கா 8:15. விதைவிதைக்க புறப்பட்ட ஒருவன் பற்றி இயேசு ஓர் உவமை கூறினார். தேவ வார்த்தையானது பாறையான இடங்களிலும் அல்லது முள்ளான இடங்களிலும்கூட முளைக்கக்கூடியது (வச. 6-7). ஆனால் “வசனத்தைக் கேட்டு,  அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே நல்ல நிலத்தில் அதாவது வேத வார்த்தையை, கேட்டு அதைப் பற்றிக்கொள்கிறவர்களில்தான் அது நிலைத்து பெரிய அறுவடைகொடுக்குமென்று அப்போது சொன்னார். (வச. 15).

இளம் சூரியகாந்தி செடிகள் பொறுமையாக வளரக்கூடியவை. பகலில் சூரியன் நகர்கிற திசை நோக்கி அவை திரும்பிக்கொண்டே இருக்கும். அந்தப் பண்பு ஒளிநாட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் விளைந்த சூரியகாந்தி இவ்வாறு திரும்புவதில்லை. அவை எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்கும், அவ்வாறு பூவின் மேற்பரப்பை வெப்பமாக வைத்திருக்கும், மகரந்தசேர்க்கைக்கு உதவுகிற தேனீக்களை தன்பக்கமாக அதிகமாத ஈர்ப்பதற்கு அது உதவும். அதன்விளைவாக அதிகமான மகசூல் கிடைக்கும்.

சூரியகாந்தியை விவசாயம் செய்து, பராமரிக்கிறவர்கள் போல நாமும் தேவ வார்த்தை பெலன்கொடுக்கிற விதத்தில் நிலத்தை நாம் பண்படுத்தலாம், அதற்கு அவருடைய வார்த்தையைப் பற்றிப் பிடிக்கவேண்டும், அவருடைய குமாரனைப் பின்பற்றவேண்டும். அப்போது நம்மை முதிர்ச்சியடையச் செய்வதற்கேற்ற நல்ல இருதயத்தையும் நேர்மையையும் தேவ வார்த்தையானது நம்மில் உருவாக்கும். அது அன்றாடம் நடக்கிற ஒரு செயல்முறை. நாம் குமாரனைப் பின்பற்றி, வளருவோமாக.