டிஸ்கவர் பத்திரிகையின் பதிப்பாசிரியரான ஸ்டீபன் காஸ், தன் அன்றாட வாழ்வில் நிலவுகிற கண்ணுக்குத் தெரியாத உண்மைகளை பற்றி சிந்திக்கத் தீர்மானித்தார். நியூ யார்க் நகரிலிருக்கும் தன் அலுவலகத்திற்கு நடந்துசென்றபோது, ‘ரேடியோ அலைகளைக் காணமுடிந்தால், பல்உருகாட்டி (கலைடோஸ்கோப்பு) ஜொலிப்பதுபோல இந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மேல்பகுதி ஜொலித்து, நியூயார்க்க நகரத்தையே ஒளிவெள்ளமாக்குவது தெரியும்’ என்று யோசித்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் ரேடியோ மற்றும் டிவி அன்டெனாக்கள் மொய்த்தவண்ணம் இருக்கும். ரேடியோ சமிக்ஞை, டிவி சமிக்ஞை, வைஃபை என தன்னைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்தவியல் புலம் இருந்ததை அவர் உணர்ந்திருந்தார்.

கண்ணுக்குத் தெரியாத ஓர் உண்மை பற்றி, எலிசாவின் வேலைக்காரனும்கூட ஒருநாள் காலையில் அறிந்து கொண்டான். காலையில் எழுந்து வந்தவன், சீரியாவின் படைகள் தன்னையும் தன் எஜமானையும் சுற்றி வளைத்திருப்பதைக் கண்டான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் போர்க்குதிரைகளில் ஏறியிருந்த வீரர்கள்தாம் தென்பட்டார்கள்! (2 இரா. 6:15). வேலைக்காரன் நடுங்கினான், ஆனால் எலிசா நம்பிக்கையோடு காணப்பட்டார். ஏனென்றால், தங்களைச் சுற்றிலும் தூதர்களுடைய சேனைகள் இருந்ததை அவர் கண்டார். “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று சொன்னார் (வச. 16). பிறகு, எதிரிகள் வளைக்கப்பட்டிருப்பதையும், எல்லாம் ஆண்டவரின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் தன் வேலைக்காரனும் பார்க்கும்படியாக அவனுடைய கண்களைத் திறக்கவேண்டுமென்று ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டார் (வச. 17).

முற்றிலும் முடங்கிப்போய், உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறீர்களா? எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதையும், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வதையும் மறக்கவேண்டாம். “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்”
(சங். 91:11).