என்னுடைய பேரனுக்கு ஒரு கரடி பொம்மை பரிசாகக் கொடுக்கப்பட்டது. பஞ்சடைக்கப்பட்ட மிகப் பெரிய மிருக பொம்மைக்குள் அன்பைக் குவித்து வைத்திருந்ததைப் போலிருந்தது. குழந்தை டீ இதற்கு என்ன பதிலளித்தது? முதலில் அதிசயித்தான், பின்னர் வியப்பில் பிரமித்தான். பின்னர் தைரியமாக ஆர்வத்தோடு அதை ஆராய ஆரம்பித்தான் அவனுடைய பிஞ்சு விரலை அக்கரடியின் மூக்கினுள் விட்டான். அது அவனுடைய கரங்களுக்குள் சாய்ந்த போது, அவன் மிகவும் மகிழ்ந்தான். குழந்தை டீ தன்னுடைய தலையை கரடியின் பஞ்சு போன்ற மார்பில் வைத்து அதனை இறுகக் கட்டித் தழுவினான். அவன் அந்த கரடியின் மென்மையான மார்பில் புதைந்த போது அவனுடைய (குழிவிழுந்த) கன்னங்களில் சிரிப்பு தவழ்ந்தது. அந்தக் கரடி பொம்மையால் உண்மையான அன்பைக் காட்ட முடியாது என அக்குழந்தை புரிந்து கொள்ளவில்லை. கபடில்லாமல், அந்தக் கரடி பொம்மையிடமிருந்து ஓர் அன்பைப் பெற்றான். தன்னுடைய இருதயத்தில் நிறைந்த அன்பை அதற்குக் காட்டினான்.

ஆதி கிறிஸ்தவர்களுக்கு எழுதிய முதல் மூன்று கடிதங்களிலும் அப்போஸ்தலனாகிய யோவான் தேவன் அன்பாயிருக்கிறார் என உறுதியாகச் சொல்கின்றார். “தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:16) என்கின்றார்.

தேவன் நம்மை நேசிக்கின்றார். ஒரு பொம்மைக் கரடி தரும் மாய அன்பைப் போன்றல்ல. உண்மையான மனித சரீரத்திலுள்ள தனது கரங்களை விரித்து பதட்டத்துடனிருக்கும் நம்முடைய உடைந்த உள்ளத்தை அணைத்துக் கொள்கின்றார் (யோவா. 3:16). இயேசுவின் மூலம் தேவன் நம்மேல் வைத்திருக்கும் மிகப் பெரிய, தியாகம் நிறைந்த அன்பை விளங்கப்பண்ணினார்.

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகின்றோம்” (1 யோவா. 4:19) என யோவான் கூறுகின்றார். நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம் என்பதை விசுவாசித்தால் நாமும் தேவனிடத்தில் அன்பாயிருப்போம். தேவனுடைய உண்மையான அன்பு நம்மை முழுமனத்தோடு தேவனை நேசிக்கவும் பிறரை நேசிக்கவும் செய்கின்றது.