ஒலி வானியலைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் வளிமண்டலத்திற்கு அப்பாலிருந்து வரும் ஒலியையும், துடிப்புகளையும் கண்காணிக்கவும், கேட்கவும் முடிகிறது. நாம் இரவில் காணும் வினோதமான வான்வெளியில் விண்மீன்கள் அமைதியாக சுழல்வதில்லை, அவை ஒருவகை இசையை எழுப்புகின்றன என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கூன்முதுகு திமிங்கலங்கள் நாம் கேட்க முடியாத ஒலியை எழுப்புவது போல, விண்மீன்களின் ஒலியும் மனித செவிகளால் கேட்கக் கூடாத அலை நீளத்திலும், அதிர் வெண்ணிலும் இருக்கின்றது. விண்மீண்களும், திமிங்கலங்களும் மற்றும் படைப்புகள் யாவும் இணைந்து, பல அங்கங்களைக் கொண்ட, ஒரு கலவை இசையை எழுப்பி தேவனுடைய மகத்துவங்களை தெரிவிக்கின்றன.

சங்கீதம் 19:1-4ல், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்கு பேச்சுமில்லை; வார்த்தையுமில்லை அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும், அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்” எனக் காண்கின்றோம்.

புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலன், “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படகிறவைகளும், காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும்… சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:16) என இயேசு கிறிஸ்துவைக் குறித்து வெளிப்படுத்துகின்றார். அதற்குப் பதிலாக இயற்கை உலகின் உயரமும், ஆழமும் தன்னுடைய படைப்பாளியைப் பாடுகின்றன. நாமும் படைப்புகளோடு இணைந்து “வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்த” (ஏசா. 40:12) அவருடைய மகத்துவங்களைப் பாடுவோம்.