லாராவின் தாயார் கேன்சர் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் காலை லாரா தன் சிநேகிதியோடு சேர்ந்து தன் தாயாருக்காக ஜெபித்தாள். அவளுடைய சிநேகிதி மூளை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஊனமுற்ற நிலையில் இருக்கின்றாள். அவள், “தேவனே, நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்துவருகின்றீர். தயவு கூர்ந்து லாராவின் தாயாருக்கும் எல்லாவற்றையும் செய்தருளும்” என ஜெபித்தாள்.

லாராவின் சிநேகிதி தான் முற்றிலும் “சார்ந்திருக்கும் நிலையை வெளிப்படுத்தியது”, லாராவின் உள்ளத்தை அசைத்தது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் லாரா ‘என் எல்லாவற்றிற்கும் தேவன் எவ்வளவு அவசியம் என்பதை எத்தனை முறை அறிக்கை செய்கிறேன்?’ என்று சொன்னாள். இது “எல்லா நாட்களிலும் நான் செய்ய வேண்டிய ஒன்று” என்றாள்.

இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பரலோகத் தந்தையைச் சார்ந்தே வாழ்ந்ததைச் செயல்படுத்திக் காட்டினார். இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தேவனாயிருப்பதால் அவருக்குத் தேவையென்பதேயில்லை, எல்லாம் பரிபூரணமாயிருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இயேசு ஓய்வு நாளில் ஒரு மனிதனை சுகமாக்கிய போது, ஆன்மீகத் தலைவர்கள் அவரிடம் ஓய்வு நாளில் செய்யத் தகாததை செய்ததேன் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரே அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (5:16) என்றார். இயேசுவும் பிதாவைச் சார்ந்திருத்தலை வெளிப்படுத்துகின்றார்.

இயேசுவும் பிதாவைச் சார்ந்திருந்தே வாழ்ந்தார் என்பது நமக்கும், தேவனோடு நாம் எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகின்றது. நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவு, தேவன் நம் வாழ்வு முழுமையும் அவருடைய பெலத்தால் நிறைந்திருக்க வேண்டுமென விரும்புகின்றார். நாம் அவரை நேசித்து, நம்முடைய ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு அவருக்குச் சேவை செய்யும் போது நம் வாழ்வு அவரையே சார்ந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.