பாஸ்டனில் (Boston) உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் 1800களில் இருந்த சமூக ஊடக வலையமைப்பாகிய செய்தித்தாள்களின் மூலம் செய்திகள் காட்டுத்தீ போல் எவ்வாறு பரவியது என்பதை ‘வைரல் செய்தி திட்டப்பணி’ மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தொழில் துறை காலகட்டத்தில் ஏதேனும் ஒரு கட்டுரை சுமார் ஐம்பது முறை அல்லது அதற்கும் மேலாக அச்சிடப்பட்டால் அதை வைரல் என்று கருதினர். ஸ்மித்சோனியன்; (Smithsonion) பத்திரிக்கையில் எழுத்தாளராக இருக்கும் பிரிட் பீட்டர்சன்
(Brit Peterson) இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களில் தங்கள் விசுவாசத்திற்காக மரண தண்டனை அடைந்தவர்கள் எவரென விவரிக்கும் கட்டுரைச் செய்தி குறைந்தது 110 வெவ்வேறு பதிப்பகங்களில் 19ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில் வெளிவந்தது என்பதை அறிந்து கொண்டார்.

தெசலோனிக்காவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில், அவர்கள் துணிவோடும் மகிழ்ச்சியோடும் இயேசுவுக்கு சாட்சிகளாய் இருப்பதைக் குறித்துப் பாராட்டினார். “உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல்…. தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று” (1 தெச. 1:8). இயேசு கிறிஸ்துவினால் மறுரூபமடைந்த அம்மக்கள் மூலம் அவரைப்பற்றின நற்செய்தி வேகமாகப் பரவியது. கஷ்டங்கள் மற்றும் உபத்திரவங்களுக்கு மத்தியிலும் கூட அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை.

கர்த்தரை அறிந்த நாம் அனைவரும் கிறிஸ்துவில் உண்டான பாவமன்னிப்பையும் நித்திய வாழ்வையும் அன்பான இருதயங்கள், உதவி செய்யும் கரங்கள் மற்றும் நேர்மையான வார்த்தைகள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க முடியும். இயேசுவை பற்றின நற்செய்தி நம்முடைய வாழ்வை மட்டுமன்றி நாம் சந்திக்கும் நபர்களின் வாழ்வையும் மறுரூபமாக்குகிறது.

ஆகவே இன்று நம்மிடமிருந்து நற்செய்தி அனைவரும் கேட்கும்படி ஒலிக்கட்டும்!