அருட்திரு. மார்டின் நீமோலர் (Rev. Martin Niemoller), ஜெர்மனியில் மிகவும் பிரசித்திப் பெற்ற போதகர். அவர் வெளிப்படையாக ஹிட்லரை எதிர்த்து பேசியதால் எட்டு வருடங்கள் நாஜி போர்க் கைதிகள் முகாமில் சிறைவாசம் அனுபவித்தார். 1944ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று நீமோலர் டாச்சோவில் (Dachau) தன்னுடன் இருந்த மற்ற சிறைக்கைதிகளை பார்த்து “என் அருமை நண்பர்களே, இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, பெத்லகேமில் குழந்தையாய்ப் பிறந்து நம்முடைய கடினமான பாரங்களை சுமக்க வந்த அந்த ஒப்பில்லாதவரைத் தேடுவோம். தேவன் தாமே நம்மையும், அவரையும் இணைக்க ஓர் பாலம் கட்டினார். பரத்திலிருந்து ஓர் விடியல் நம்மேல் உதித்தது,” என்ற விசுவாச வார்த்தைகளைக் கூறினார்.

கிறிஸ்துமஸ் நாளில் நாம் தழுவிக்கொள்ள வேண்டிய நற்செய்தி இதுவே. தேவன் கிறிஸ்துவாக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து அவருக்கும், நமக்கும் இடையேயான இடைவெளியை தகர்த்துவிட்டார். இருள் சுழ்ந்த சிறைவாழ்க்கைகுள் ஒளியாய் புகுந்துவிட்டார். நாம் சுமந்து செல்லும் துன்பம், துயரம், குற்ற உணர்வு, தனிமை ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.

இருண்ட சிறைச்சாலையில் தங்கியிருந்த நீமோலர், “அன்று ஆடு மேய்ப்பவர்கள் மேல் பிரகாசமான ஒளி உதித்தது. அது போல இன்று நம் இருளிலும் ஜீவ ஒளியின் கதிர்கள் நம்மேல் உதிக்கும்” என்ற நற்செய்தியை பகிரிந்து கொண்ட அவரது வார்த்தைகள் ஏசாயா தீர்க்கதரிசனமாய் உரைத்த வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகின்றது. “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா. 9:2).

நாம் இன்றைக்கு எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் தம்முடைய மகிழ்ச்சியோடும், ஒளியோடும் இயேசு நம்முடைய இருளான வாழ்க்கைக்குள் பரவேசித்துள்ளார்.