நானும், என் மனைவியும் முதல் முறையாக ஓர் எழுத்துப்பணி திட்டத்தை இணைந்து செயல்படுத்திய பொழுது, காலதாமதம் செய்வது என்பது ஓர் முக்கிய தடையாக இருக்கும் என்பதை மனவேதனையுடன் அறிந்து கொண்டோம். நான் எழுதியவற்றை பதிப்பிற்கு தயார் செய்வதும், என் கால அட்டவணைப்படி என்னைச் செயல்பட வைப்பதும் அவளுடைய பணியாகும். ஆனால் என்னுடைய செயல்கள் அவளைக் கோபத்திற்குள்ளாக்கும். அநேக சமயங்களில் குறிப்பிட்ட சமயத்தில் முடிக்காமலும், வழிமுறைகளை பின்பற்றாமலும் இருப்பது அவளுடைய தீர்மானங்களையும், பொறுமையையும் இழக்கச் செய்யும்.

ஓர் நாளில் இறுதியில் ஓர் குறிப்பிட்ட பகுதியை எழுதி முடித்து விடுவேன் என்று உறுதி கூறுவேன். முதல் மணிநேரம் மிகவும் தீவிரமாக அந்தச்செயலில் ஈடுபட்டு, மனதிருப்தியடைந்தவனாய், சற்று ஓய்வெடுக்கத் தீர்மானிப்பேன். என்னை அறியாமலேயே நேரம் வேகமாகக் கடந்துவிடும். இதனால் நிச்சயமாக பிரச்சனை ஏற்படும் என்பதை அறிந்தவனாய், அதை நிவிர்த்தி செய்ய ஓர் வழியைத் தேடுவேன். என் மனைவிக்கு செய்ய விருப்பமில்லாத சில அன்றாட வேலைகளை நான் செய்ய முற்பட்டு அதை செய்து முடிப்பதால், அவள் என்னை மெச்சிக்கொள்ள அது வழிவகுக்கும் என்று நினைத்து அவ்வாறு செய்தேன். என் திட்டம் தோல்வியில் முடிவுற்றது.

சில சமயங்களில் இப்படிப்பட்ட தந்திரமான செயல்களை தேவனுடைய காரியங்களிலும் செய்ய முற்படுவேன். சில குறிப்பிட்ட மனிதர்களை என் வாழ்க்கையில் இடைபடச்செய்து, அவர்களுக்கு சேவை செய்யவோ அல்லது நான் ஓர் காரியத்தை செய்து முடிக்கவோ தேவன் கட்டளையிடுவார். ஓர் குறிப்பிட்ட பணியைச் செய்ய வேண்டும் என்று தேவன் யோனாவுக்குக் கட்டளை கொடுத்த பொழுது, யோனா வேறு வழியைத் தெரிந்துகொண்டு சென்றதுபோல் (யோனா 4:2) அல்லாமல், என் சுய உணர்வுகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். நற்செயல்களிலும், ஆவிக்குரிய காரியங்களிலும் ஈடுபட்டு நான் பலமுறை தேவனைப் பிரியப்படுத்த முயற்சிப்பேன். ஆனால் தேவனுக்கு அவர் விரும்பும் முன்னுரிமைக் காரியங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என்பதே அவர் விருப்பம். தவிர்க்க முடியாத நிலையில் என் திட்டங்கள் தோல்வியில் முடியும்.

ஓர் காரியத்தை நீங்கள்தான் திட்டவட்டமாக செய்து முடிக்க வேண்டும் என்று தேவன் விரும்பும் பணியைத் தட்டிக்கழிக்கிறீர்களா? நம்புங்கள்; தேவனுடைய பெலத்தினாலும், அவர் வழியிலும் செயல்படும் பொழுது உண்மையான சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.