சபைப் போதகர், மூப்பர் ஒருவரைப் பார்த்து, சபை மக்களை ஜெபத்தில் வழிநடத்தக் கேட்டுக்கொண்ட பொழுது, அவர் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தார். “தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள், பாஸ்டர்”, நான் ஆலயத்திற்கு வரும் வழியிலெல்லாம் என் மனைவியிடம் வாதாடிக்கொண்டு வந்தேன். எனவே நான் எந்த விதத்திலும் ஜெபம் நடத்தத் தகுதியற்றவன்”, என்று கூறினார். அடுத்த நிமிடம் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. போதகர் ஜெபித்தார். ஆராதனை தொடர்ந்து நடந்தது. இனிமேல் யாரிடமும் தனிமையில் பேசி ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டுமே அல்லாமல் அனைவர் மத்தியிலும் கேட்கக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார்.

அந்த மனிதர் மாய்மாலமாகவும் இலகுவாகவும் ஜெபிக்க ஒத்துக்கொள்ளாமல், ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தன் நேர்மையை வெளிக்காட்டியிருக்கிறார். இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் சிறந்த பாடம் ஒன்று இருக்கிறது. தேவன் அன்புள்ள பிதா. ஓர் கணவனாக நான் என் மனைவியை மதித்து, கனப்படுத்தாவிட்டால் அவள் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிற மகளானபடியால் அவளுடைய பரமபிதா எப்படி என்னுடைய ஜெபத்தைக் கேட்பார்?

பவுல் அப்போஸ்தலன் இப்படிப்பட்ட காரியத்தைப்பற்றி மிகவும் தீவிரமாக உய்த்து ஆராய்ந்தார். புருஷர்கள், தங்கள் மனைவிகளும் கிறிஸ்துவில் உடன் சுதந்தராயிருக்கிறபடியால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனையாகவும், அதனால் “உங்கள் ஜெபத்திற்கு தடைவராது” என்றும் கூறுகிறார் (1 பேது. 3:7). நமது உறவுகள் நமது ஜெப வாழ்வைப் பாதிக்கும் என்பதுதான் அடிப்படைத் தத்துவம். ஞாயிற்றுக் கிழமைகளில் நாம் நமது சகோதர சகோதரிகளிடம் காட்டும் போலியான, வெளிதோற்றமான கரிசனையையும் பரிவையும் விட்டுவிட்டு அவர்களிடத்தில் நம் உண்மையான உள்ளத்தைக் காட்டினால் எப்படி இருக்கும் ? நாம் ஜெபித்து, நம்மை நேசிப்பதுபோல் பிறரையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளும் பொழுது நம் மூலம் தேவன் எவ்விதக் கிரியை செய்ய முடியும்?